Friday, 10 January 2025

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து கட்சிகளின் தலைமைகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் விசிக, கட்சியின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் சின்னங்கள் முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு விதிகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன.

எனவே உங்களது கட்சிகளை தமிழ்நாட்டில் மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டபடி பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் முன்பதிவு செய்துள்ளது. எனவே இனி விசிக போட்டியிடும் தேர்தல்களில் அந்த கட்சி பானை சின்னத்தை கோரினால், அதை தேர்தல் ஆணையம் உடனே ஒதுக்கீடு செய்யும்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...