Friday, 10 January 2025

குடியாத்தம் அடுத்த மீனூர் மலையில் சொர்க்கவாசல் திறப்பு! வேலூர்,

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, மீனூர் கிராமத்தில் மலையிலுள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பரமபத வாசலை கடந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று உரக்க கூச்சலிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசித்தனர். இந்த சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...