Wednesday, 1 January 2025

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மீனூர் மலை ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, மீனூர்மலை மீனூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த மீனூர் மலையில் அமர்ந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலர்மேலுமங்கை சமேதரராய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த திருப்பணி திலகம் ஸ்ரீ சாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

No comments:

Post a Comment

பக்தர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல விடாமல். தடுக்கும் தனிநபர்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வபெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதிய மேம்பாலம் அருகில் மாரியம்மன் கோயி...