Friday, 10 January 2025

மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் வெஜிடெபிள் பிரியாணி சாதம் , கத்தரிக்காய் கொஸ்த்து, அன்னதானமாக நண்பகல் 12 மணியிலிருந்து இடைவிடாது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கிருத்திகையின் போதும் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து இடைவிடாது நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொழிலதிபர் காட்பாடி செங்குட்டை மாடு விடும் வீதியைச் சேர்ந்த அச்சுதன் - அமுதா தம்பதியர் வெகுவிமரிசையாக செய்திருந்தனர். இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கமலவிநாயகம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பொதுமக்கள், முருக பக்தர்கள் மற்றும்  சாலையோரம் வசிக்கும் ஏழை, எளியோர், (பாதசாரிகள்) நடந்து சென்றவர்கள் வரிசையில் வந்து நின்று  இந்த அன்னதானத்தை வாங்கி சுவைத்து தங்களது பசியை இளைப்பாற்றி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  பொதுமக்கள் கூட்டம் இடைவிடாது நின்று அந்த அன்னதானத்தை பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . இடைவிடாது அன்னதானம் வழங்கி பக்தர்களை மகிழ்வித்த தம்பதியரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் ஆஜரானார்!

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, கல்லூரியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், இன்று, கதிர...