சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கியில் அதிமுக ஆட்சியில் ரூ.2.93 கோடி முறைகேடு செய்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சியின்போது பயிர்க் கடன், நகைக் கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. முறைகேடு புகார் தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 13 பேர் மோசடி செய்தது தெரியவந்தது.
மோசடிகள் தொடர்பாக சங்ககிரி துணைப் பதிவாளர் முத்துவிஜயா அளித்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சத்தியபானு, துணை தலைவர் வடிவேல் உள்பட 5 பேர் 2023ல் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார், வங்கியின் முன்னாள் உறுப்பினர்கள் பெரியசாமி, முத்து ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முறைகேடு செய்த பணத்தில் பல இடங்களில் அவர்களின் உறவினர்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளனரா என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment