வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஜி.ஆர் பாளையம், ஊசூர் அடுத்த இரண்டு ஏரி கோடி அருகே உள்ள 11107 கடை எண் கொண்ட அரசு மதுபான கடையில் மதுப்பிரியர் ஒருவர் ஏ.எஸ்.ஐ.ஓ (ASIO) ட்ரிபிள் செலக்ட் வொட்கா 180Ml கொண்ட மதுவை வாங்கும்போது மாலை இருள் சூழ்ந்த நேரம் மற்றும் லேசான மழை காரணத்தால் வீட்டிற்கு சென்று அந்த பாட்டிலை மது அருந்த ஓபன் செய்ய முற்படும்போது அதில் அதிர்ச்சி காத்திருந்தது அந்த மது பிரியருக்கு தன் ஓபன் செய்ய முற்பட்டபோது அந்த மது பாட்டிலில் விஷப்பூச்சி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் விலை ரூ.280 ஆகும், ஆனால் இந்த மதுவை ரூ.285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக ஐந்து ரூபாய் லஞ்சமாக வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மது பாட்டில் பெரும் போது இணைய வழி மூலமாக பணம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுப்பிரியர் இந்த பாட்டிலை பிரியமாக உட்கொள்ள முயலும் போது உள்ளே விசப்பூச்சி உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அணுகிய போது இது இப்படி வருவதெல்லாம் இது தூசி தான் இதெல்லாம் சகஜம் தான் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அக்கடையின் சேல்ஸ்மேனும், சூப்பர்வைசரும்.
இதுகுறித்து ஆங்கில புத்தாண்டு பண்டிகையொட்டி அந்த மதுப்பிரியர். பிரியத்துடன் மது அருந்தலாம் என நினைத்து இது போன்ற செயல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் என தெரிவித்தனர். இது போன்று பல்வேறு வகை பாட்டில்களில் இருப்பதை அவ்வப்போது செய்தியாக வெளிவருவது வழக்கம், இது குறித்து ஏதேனும் உயிருக்கும் மற்றும் உடலுக்கு, உடல் உபாதை பக்க விளைவுகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், என ஏதேனும் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் என்னவாகும் என்பதை உணர வேண்டும் இந்த அரசு, இந்த செயலை ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் அரசே பெற்று விற்பனை செய்வது அதுவும் உயர் பதவி ஊழியர்கள் உள் உட்கொள்ளும் பொருட்களை முறையாக கண்காணிக்காமல் இதுபோன்ற அலட்சியமாக வேறு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டு வந்து வைத்து அரசு மதுபான கடையில் விற்பனை செய்வது மிகுந்த வேதனைக்குரியதாகும். இந்த நிறுவனத்தின் மீதும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அரசு உயர் பதவி அதிகாரிகள் மீதும் இதனை கண்காணிக்க வேண்டிய ஆய்வாளர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகையொட்டி வேலூரில் மட்டும் சுமார் ரூ.12 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்று விஷப்பூச்சிகள் கலந்த மது பாட்டில்கள் சாமானிய மதுப்பிரிய மக்களுக்கு வழங்குவது சரியானதா பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியைத் தொடர்ந்து இதுபோன்ற அலட்சிய போக்குக்கு நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுத்து தரமான மதுக்களை வழங்க வேண்டுமெனவும், மது பாட்டில்கள் மீது ரூபாய் 5, 10 அதற்கும் மேற்பட்ட தொகைகள் பெறுவது தடுத்து நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுப் பிரியர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment