Sunday, 5 January 2025

சூளகிரியில் ரசாயன கழிவு தொழிற்சாலைகளுக்கு துணை போகும் வட்டாட்சியர் மோகன் தாஸ் மற்றும் உத்தனப்பள்ளி உதவி காவல் ஆய்வாளர்கள்..விவசாயியின் வேதனை!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்திற்குட்பட்ட நஞ்சனெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன். தனக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் அளவு நிலத்தில் சாகுபடி செய்திருந்த கேரட் பயிர், இவரது நிலத்தின் அருகே செயல்பட்டு வரும் கிரானைட் மற்றும் சிறு குறு தொழிற்சாலைகளில் இருந்து கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளால் முற்றிலும் நாசம் அடைந்து பாதிப்புக்கு உள்ளானார்.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கிரானைட் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களில் இருந்து கொட்டப்ப்படும் ரசாயன கழிவுகளால் விவவசாயி கிருஷ்ணன் ஆழ்துளை கிணறுகளிலுள்ள நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து ரசாயனம் கலந்த நீராக மாறியதால் தனது நிலத்தில் பயிர் செய்திருந்த கேரட் முழுவதும் நாசமாகிவிட்டதால் நஷ்டம் அடைந்த விவசாயி கிருஷ்ணன்கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனது பாதிப்பு குறித்து தெரிவித்திருந்ததுடன், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அன்றைய தேதியில் முற்றிலும் நாசமான சுமார் 350 மூட்டை கேரட் பயிருக்கான இழப்பீட்டு தொகையாக 21 லட்சம் ரூபாயை தனக்கு பாதிப்பை ஏற்படுத்திய தனியாருக்கு சொந்தமான கிரானைட் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களில் இருந்து பெற்றுத் தருமாறும் கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தார். 

மேலும் சமூகவிரோதிகள் இதுபோன்று விவசாயிகளை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உத்தனப்பள்ளி காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதியன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர், ஓசூர் சார் ஆட்சியாளர் வாயிலாக, சூளகிரி வட்டாட்சியர் மோகன்தாஸ் என்பவருக்கு விளை நிலத்தில் உரிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பு ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இது தொடர்பாக விவசாயி கிருஷ்ணன் சூளகிரி வட்டாட்சியர் மோகன்தாஸ் மற்றும் உத்தனப்பள்ளி காவல் நிலைய உதவி காவல்  ஆய்வாளர்கள் ஜம்பு மற்றும் தினேஷ் ஆகியோரை அணுகிய போது அவர்கள்  விவசாயிக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தனியாருக்கு சொந்தமான கிரானைட் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களில் இருந்து லஞ்சப் பணம் கையூட்டு வாங்கி கொண்டு அவர்களின் மீது எந்த ஒரு காவல் சட்ட ஓழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதுடன், நாங்கள் ஏதேனும் புகார் மனு பற்றி விசாரிக்க கேட்டால்  அலட்சியமாக பதில் கூறுவதாக அரசு துறை அதிகாரிகள் மீது தனது மனவேதனையை தெரிவித்தார் விவசாயி கிருஷ்ணன்.

மேலும் அங்குள்ள தொழிற்சாலை நிறுவனத்திடம் இருந்து கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் இந்த விவகாரம் தொடர்பாக காலம் தாழ்த்தி வருவதால் விவசாயி கிருஷ்ணனுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பி.கே. கணேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். 

தற்பொழுது உள்ள சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் ஓசூர் சார் ஆட்சியாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தில் உயர் அதிகாரிகள் ஆணையிட்டும் அதனை பொருட்படுத்தாமல் காலம் தாழ்த்தும் அரசு அதிகாரிகள் உடனே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

அவ்வாறு துரிதமாக செயல்பட்டு இதற்கு தீர்வு ஏற்படுத்தி தராவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டங்களில் ஈடுபட நேரிடும் எனவும் அப்போது பி. கே. கணேஷ் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் - சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்...