Thursday, 23 January 2025

கரிகிரியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்த்து!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கரிகிரியில் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான டாக்டர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் செஞ்சி ந. ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் குடியாத்தம் கொண்டசமுத்திரம் என். ராமு, வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.கே. அப்பு, காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜனார்த்தனன், மேற்கு பகுதி செயலாளர் நாராயணன், தெற்கு பகுதி செயலாளர் பேரவை ரவி மற்றும் மதிமுக மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் கரிகிரி விஜய் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் பெண்களுக்கு இலவச சேலைகளை செஞ்சி ந.ராமச்சந்திரன் வழங்கினார்.

No comments:

Post a Comment

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியம், கே. வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி, கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன்...