Wednesday, 22 January 2025

தென்காசியில் பட்டா மாறுதலுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கி பெண் விஏஓ விஜிலென்ஸ் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்!

பட்டா மாறுதல் செய்வதற்காக விண்ணப்பித்துவிட்டு, தென்காசி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றுள்ளார் குமாரவேல் குமாரவேல் என்பவர் அங்கு நடந்த சம்பவம், வருவாய்த்துறை, பதிவுத்துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாடிலுள்ள அரசு அலுவலகங்களில் அளவுக்கு அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை விளங்கி கொண்டிருக்கிறது. இதை மையமாக வைத்தே லஞ்ச லாவண்யங்கள் இந்த துறையில் பெருகி கொண்டிருக்கிறது. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இப்படியான லஞ்சத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, லஞ்சம் வாங்கிய விருதுநகர் கிராம நிர்வாக அதிகாரிக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருந்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள டிமானகசேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அம்மையப்பன், கடந்த 2010-ல் வாரிசு சான்று வழங்குவதற்காக சுப்பையா பாண்டி என்பவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியிருக்கிறார்.

கடந்த 2019-ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் 3 வருட சிறைத்தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்த நிலையில், இதை எதிர்த்து அம்மையப்பன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அப்பீல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், கிராம நிர்வாக அதிகாரி அம்மையப்பனுக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

இதுபோலவே, வேலூர் அடுத்த பெருமுகை கிராம நிர்வாக பெண் அலுவலர் 20 நாட்களுக்கு முன்பு லஞ்சம் பெற்று விஜிலென்ஸ் போலீஸ் சிக்கினார்.. சரஸ்வதி தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று வேலூரில் விண்ணப்பித்திருந்த நிலையில், சத்துவாச்சாரி காந்திநகரைச் சேர்ந்த ஷர்மிளா (59 வயது) ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஷர்மிளாவிடம், சரஸ்வதி தந்ததுமே, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் பெண் கிராம நிர்வாக அதிகாரியான சரஸ்வதியை சுற்றி வளைத்துவிட்டார்கள்.

இப்போது, தென்காசியில் பெண் கிராம நிர்வாக அதிகாரி ரூ.4500 லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குட்பட்ட கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் குமாரவேல். இவர், ராஜகோபாலகேரி கிராமத்தில், தன்னுடைய அப்பாவின் பெயரிலுள்ள சொத்தை தனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய முறையாக அனைத்து ஆவணங்களையும் வைத்து கிராம நிர்வாக அதிகாரியான பத்மாவதியை அணுகியிருக்கிறார். அதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி சொல்லவும், அதன்படியே விண்ணப்பித்துள்ளார்.

பிறகு மீண்டும் கிராம நிர்வாக அதிகாரி பத்மாவதியை குமாரவேல் தொடர்பு கொண்டார். அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என பத்மாவதி சொன்னாராம்.. அவ்வளவு பணம் இல்லை என்று குமாரவேல் சொல்லியிருக்கிறார்.. அப்படியானால், ரூ.4,500 தர வேண்டும் என்றும், அதனை கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும் என்றும் கறாராக சொன்னாராம்.

இதனைக் கொடுக்க விரும்பாத குமாரவேல் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை குமரவேலிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் லஞ்சப்பணத்தை கொடுக்கும்படி அறிவுறுத்தல், அதன்படி அலுவலகத்தில் இருந்த விஏஓ பத்மாவதியிடம் லஞ்ச பணத்தை கொடுக்க அதை அவர் பெற்றுக் கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பெண் கிராம நிர்வாக அதிகாரி பத்மாவதி கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பெயரில் சிறையில் அடைத்தனர். 

தென்காசியில் பெண் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் வசமாக சிக்கியிருப்பது, அரசுத்துறை அதிகாரிகளிடையே மீண்டும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...