திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சென்னை மேயர் பதவியை எதிர்காலத்தில் பிடிப்பதற்கான முயற்சிகளை ப்ரமோஷன் மூலம் செய்து வருவதாக விவாதங்கள் எழுந்துள்ளது.
இரு நாட்களுக்கு முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். அரசியல் கடந்து இவர் பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.
திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். சிபி சத்தியராஜின் மூத்த சகோதரி ஆவார். அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ணத் தூதராக திவ்யா பணியாற்றி வருகிறார்.
இந்த அமைப்பை தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்ய திமுக உள்ளிட்ட சில கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட சாராரின் உணவு முறையை பள்ளிகளில் திணிக்க அவர்கள் முயல்வதாக புகார்களும் வைக்கப்பட்டன. (ஆனால் இந்த புகார்கள் நிரூபிக்கப்படவில்லை ) இப்போது அதே திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தைத் திவ்யா சத்யராஜ் தொடங்கினார். இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதியற்ற சமூகங்களுக்கு உதவக்கூடிய அமைப்பு ஆகும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்குவதற்காக இந்த அமைப்பை திவ்யா சத்யராஜ் தொடங்கினார். 2016ல் இவர் வீகன் உணவு பழக்கத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ் திமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மகள் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திவ்யா மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பற்றிய முதுகலை தத்துவத்தில் பட்டம் பெற்றார். அவர் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள், குழந்தைத் தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான தற்காப்பு மற்றும் இலங்கை அகதிகளுக்கான ஆலோசனை அமர்வுகள் பற்றிய பயிற்சி வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துவது வழக்கம்.
மருத்துவத் துறையிலுள்ள முறைகேடுகள் மற்றும் அலட்சியத்தை சுட்டிக்காட்டி, நீட் தேர்வுகள் குறித்து கேள்வி எழுப்பி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதி இருந்ததும் கூட குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் திமுகவில் இணைந்த சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சென்னை மேயர் பதவியை எதிர்காலத்தில் பிடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக விவாதங்கள் எழுந்துள்ளது.
அதன்படி இவரின் இன்ஸ்ட்டா பக்கத்தில் மேயர் பதவி பற்றி வெளியான போஸ்டுகளுக்கு இவர் லைக் செய்துள்ளார். அதன்படி இன்ஸ்டாகிராமில் சில பிரபல பக்கங்கள்.. இப்போது மேயர் ப்ரியா ஆர்.. எதிர்காலத்தில் மேயர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் என்று போஸ்ட் செய்துள்ளனர். இரண்டு பேரின் புகைப்படங்களையும் சேர்த்து போஸ்ட் செய்துள்ளனர்.
நிறைய பக்கங்கள் இப்படி திடீரென போஸ்ட் செய்து வருகின்றன. இவை பிரபல ப்ரோமோஷன் பக்கங்கள் ஆகும். இந்த பக்கங்கள் திடீரென சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பற்றி இப்படி போஸ்ட் செய்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதை தற்போது திவ்யா லைக் செய்திருப்பதும் விவாதம் ஆகி உள்ளது. மேயர் பதவிக்கு எதிர்காலத்தில் திவ்யா அடிபோடுகிறாரோ என்ற கேள்வியும் கூட பலருக்கும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment