தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் நாளுக்கு நாள் லஞ்ச புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.. இந்த துறைகளின் சில அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்கி பொதுவெளியில் அசிங்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் கையும் களவுமாக ஆதாரங்களுடன் சிக்கி, சுற்றி வளைக்கப்பட்டு அரசு ஊழியர் முதல் மேல்அதிகாரிகள் வரை கைதாகும் இச்சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் வருவாய்த் துறையின் கீழ் வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உட்பட பெண்களுக்கு வழங்கும் விதவைத்தொகை வரை அனைத்திலுமே லஞ்சம் கேட்கும் போக்கு நிலவி கொண்டிருக்கிறது. பாடுபட்டு உழைத்த தங்கள் சொத்துக்கு, எதற்காக லஞ்சம் தரவேண்டும்? என்ற மனப்பான்மை மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால் நேரடியாகவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு போனை போட்டு , புகார்களைக் கூற துவங்கிவிட்டார்கள் மக்கள்.
அதனால்தான், லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரிகளும் அதிக அளவில் கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக, விஏஓ-க்கள், சர்வேயர்கள், தாசில்தார்கள் தான் அதிக அளவில் சிக்குகிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் உதவும் புரோக்கர்களும், எழுத்தர்களும்கூட வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட தென்காசியில் பெண் கிராம நிர்வாக அதிகாரி பத்மாவதி என்பவர் பட்டா மாறுதலுக்கு 4500 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைதானார்.
இந்த லஞ்சம் வாங்கிய புகாரில், பெண் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று கிருஷ்ணகிரியிலும் ஒரு சம்பவம் அரங்கே இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிற்கா நில அளவியராக பணியாற்றி வரும் குமரன்(வயது 45). என்பவர், 9000 ரூபாய் லஞ்சம் பெற்று விஜிலென்ஸ் போலீசாரிடம் புரோக்கருடன் வசமாக சிக்கியிருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன்.. இவருக்கு (55 வயதாகிறது). இவர் பர்கூர் அடுத்த வெங்கடாபுரத்தில், தன்னுடைய மகன் ஹரிகரன் பெயரில், 7 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை அளந்து, தனி பட்டா செய்து தரக்கோரி, அனைத்து ஆவணங்களையும் வைத்து முறையாக அரசு இ-சேவை மையத்தில் அரசுக்கு பணம் கட்டி விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், தனிப்பட்டா மாற்றத்திற்கு காலதாமதம் ஏற்பட்டு கொண்டேயிருந்தது. அதனால், பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரடியாகவே சென்று விசாரிக்க முயன்றுள்ளார்.. அப்போது பணியிலிருந்த திம்மாபுரம் பிற்கா நில அளவையர் குமரன் என்பவரை சந்தித்து நிலத்தை அளந்து, தனிப்பட்டா செய்து தர கோரிவுள்ளார்.
அதற்கு நில அளவையர் குமரனும், புரோக்கரான கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளிம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சுஹேல்(வயது 30) என்பவரும், இடத்தை அளந்து தர வேண்டுமானால் ரூ.9 ஆயிரம் கையூட்டு லஞ்சமாக வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.. அவ்வளவு தொகையை தன்னால் தர முடியாது என்று கூறினாராம் மனுதாரரான நாகராஜன், ஆனால் மனமிரங்காத அந்த பிற்கா நில அளவையர் குமரன் 9 ஆயிரம் ரூபாயில் கறாராக இருந்துள்ளனர். ஆனால், அந்த பணத்தை கொடுக்க விரும்பாத நாகராஜன், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
பிறகு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைபடி, ரசாயனம் தடவிய, 9,000 ரூபாயை, பர்கூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்த சுஹேலிடம், நாகராஜ் கொடுத்தார். அவர், அந்த லஞ்சப்பணத் தொகையை நில அளவையர் குமரனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரபு, உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார், இருவரையுமே லஞ்சப்பனத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பருகூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment