Thursday, 23 January 2025

புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்: ஓட்டல் உரிமையாளர், கல்லூரி ஊழியர் மீது புகார்!

புதிய நீதிக் கட்சியின் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ்.ரமேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரது மனைவி, மகள்கள் என குடும்பத்தினரையும் மிரட்டிய ஓட்டல் உரிமையாளர், கல்லூரிப் பணியாளர் உட்பட பலர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.ரமேஷ் முதல்வரின் தனிப்பிரிவு, வேலூர் மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனுக்களை தபால் வழியிலும், நேரிலும் அளித்துள்ளார். புகார் மீது நகர போலீஸார் சி.எஸ்.ஆர். கொடுத்து, உதவி ஆய்வாளர் பழனி விசாரணை நடத்திவருகிறார்.
  
இதுகுறித்து எஸ்.ரமேஷ் முதல்வரின் தனிப்பிரிவுக்கு தபால் மூலமாகவும், குடியாத்தம் நகருக்கு வருகை தந்த வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமியிடம் நேரிலும் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது . 
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, நான் சார்ந்த புதிய நீதிக் கட்சியின் சார்பாக 17.01.2025-அன்று பிச்சனூர் அரசமரத்தடியில் பிரியாணி வழங்கும் விழாவை நடத்தினேன். இதற்காக, .ஜி.குமரவேல் என்பவரிடம் சிக்கன், மசாலா பொருள்களை வாங்கி, ஊழியர்களை வைத்து மூன்று டபாராக்களில் சிக்கன் பிரியாணி தயாரித்தேன். இதை எடுக்க முயற்சிக்கும்போது, எந்த சம்பந்தமும் இல்லாத குமரவேலுவின் மகனும் காட்பாடி ரோடில் ஓட்டல் நடத்திவருபவருமான யுவராஜ் என்பவர், எல்லா பொருள்களையும் நான்தான் போட்டு செய்தேன். 36 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு பிரியாணியை எடுத்து செல் என்று தகராறு செய்தான். அங்கிருந்தோர் நிகழ்ச்சி முடிந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்று அனுப்பிவைத்தனர். 

இந்த நிலையில், 18.01.2025-அன்று மதியம் எனது வீட்டுக்கு வந்த யுவராஜ் தலைமையில், தனியார் கல்லூரியின் இயற்பியல் ஆய்வக உதவியாளர் எல்.கார்த்திக் மற்றும் ரவுடிகள் சிலர் வருகை தந்து என்னை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். எனக்கும் எனது மனைவி, மகள்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து, ஆபாசமான, தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி கல்லூரி ஊழியரைப் போல அல்லாமல், ரவுடியை போல் நடந்தார். இதுகுறித்து .உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். எனது உயருக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது . இவ்வாறு எஸ்.ரமேஷ் மனுவில் கூறியிருக்கிறார். இதுகுறித்து ரமேஷ் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் பழனி ரமேஷ் குடியிருக்கும் பிச்சனூர் சேலம் தண்டவராயன் தெருவாசிகளிடம் வீடுவீடாக நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

No comments:

Post a Comment

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியம், கே. வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி, கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன்...