Thursday, 23 January 2025
கொத்தபல்லி ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா போலி சான்றிதழ் அளித்த தலைவர் பதவி பெற்றது அம்பலம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கொத்தபல்லி கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டியின் மகன் ரமேஷ் என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவன் ஆவேன். மேலும் எங்கள் ஊருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பழங்குடியினர் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கொத்த பல்லி ஊராட்சியில் ரோஜா ராஜா தேர்தலின் போது சமர்ப்பித்த ஆவணங்களில் அவர் நான்காம் வகுப்பு படித்ததாக கூறியுள்ளார். அந்த டிசியில்(பள்ளி மாற்றுச் சான்றிதழ்) அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யாதவ் என்று குறிப்பிட்டுள்ளது. அதை அவர் மறைத்து போலியான சான்றிதழை கொடுத்து மனுத்தாக்கல் செய்து அன்ன போஸ்டாக தேர்வு செய்யப்பட்டார். அது மட்டும் இல்லாமல் ரோஜாவுடைய கணவர் ராஜா ஆதிதிராவிட வகுப்பினைச் சார்ந்தவர். ஊராட்சி மன்றத்தில் அமர்ந்து கொண்டு தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஆட்களை மிரட்டி ஒப்பந்ததாரர்கள் எடுத்த வேலைக்கு இவர்களை அழைத்துக் கொண்டு சென்று வேலை செய்ய வைக்கிறார். மேலும் இதன் மீது மாவட்ட ஆட்சியாளர் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியம், கே. வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி, கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன்...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment