வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வ பெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதியொ மேம்பாலம் அருகில் மாரியம்மன் 7 அடி உயரம் புற்றுக் கோயில் அமைந்துள்ளது என்று கூறி தனிநைபர் ஒருவருக்கு சொந்தமான புஞ்சை சர்வே எண் 243 ஏக்கர் 2.34 விஸ்தீரண நிலம் அமைந்துள்ளது. இந்த
இடத்தில் குடியாத்தம் டவுன் அதிமுக பலமநேர் ரோடு கதவு எண் 113/1 ராமசாமி மகள் எம். செல்வம்/ எஸ். வசந்தி ஆகியோருக்கு 22-09-2014 இல் இந்த இடத்தைப் பதிவு செய்து பட்டா பெற்றிருக்கிறார். 28-02-2008ல் முறைபடி பட்டா பெற்றுள்ளார். இந்த இடம் சீவூர் பஞ்சாயத்துக்கு சொந்தமானது. இந்த இடத்தில் கரையான் புற்று கட்டி உள்ளது. அந்த புற்றை மாரியம்மன் கோவில் என்று சொல்லி அப்பகுதி மக்களை செல்லுமாறு கூறி ஒரு சில விஷமிகள் அதற்கு நாங்கள் பாலூற்ற வேண்டும் .கரையான் புற்று இருக்கும் இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும் என்று அத்துமீறி வேலி அமைத்து எஸ்.வசந்தி என்பவர் செல்வத்தின் மனைவி பாதுகாத்து வரும் இடத்தை அத்துமீறி உள்ளே நுழைந்து சில விஷயங்கள் திடீர் தகராறும் ரகளையிலும் ஈடுபட்டனர். இந்த இடம் பொது மக்களுக்கு சொந்தம் என்று வேறு வசந்தியை மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று சில விஷமிகள் வீண் பிரச்சனை செய்து வந்தனர். இந்த வசந்தியின் கணவர் செல்வம் இருக்கும்போது அவரிடம் யாரும் பேச முடியாமல் அமைதி காத்து வந்தனர். தற்போது அவரது மறைவுக்குப் பிறகு பெண் தானே என்று வசந்தியை மிரட்டி அந்த இடத்தை ஆட்டையை போட பார்க்கின்றனர் சில சமூக விரோதிகள். இது குறித்து அவர்கள் குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகாவிடமும் மனு எழுதிக் கொடுத்துள்ளனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் அந்த மனு மீது விசாரணை எடுத்து அந்த விசாரணையில் அந்த இடம் புஞ்சை மற்றும் வசந்திக்கு சொந்தமான இடம் என்பது அத்துடன் பட்டா பெற்றுள்ளதும் ஊர்ஜிதமாக தெரியவந்தது. இதையடுத்து அந்த விஷமிகளையும் சமூகவிரோதிகளையும் விரட்டி அடித்து இனி அந்த இடத்துக்கு அத்துமீறி யாரும் பிரவேசிக்க கூடாது என்று உத்தரவிட்டார் இதனால் இந்த விஷமிகள் மற்றும் சமூக விரோதிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர் இப்படி யாராவது விதவைகள் பொதுமக்களை எதிர்க்க முடியாதவர்கள் அவர்களை அடையாளம் கண்டு இது போன்ற விஷம கும்பல் மற்றும் சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து கொண்டு அந்த இடத்தை ஆட்டையை போட இப்படி கோயில் இருக்கிறது புற்றை இருக்கிறது என்று ஒரு தகவலை வீண் வதந்தியை பரப்பி அந்த இடத்தை சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆதலால் இது போன்ற விஷயங்கள் கொடுக்கும் விஷயத்தில விதவைகள் மற்றும் இதுபோன்ற விஷமிகளை எதிர்க்க முடியாதவர்களை அடையாளம் கண்டு கொண்டு இந்த சமூக விரோதிகள் தங்களது பலத்தை காண்பித்து அவர்களது சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வது தெரிய வந்துள்ளது. இதனால் வருவாய்த்துறை இனி யாரும் அந்த பகுதியில் பிரவேசிக்க கூடாது மீறி பிரவேசிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த இடம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது வசந்தி அந்த இடத்திற்கு உரிமையாளர் சொந்தக்காரர் என்பதும் ஊர்ஜிதமாக தெரியப்படுத்தியுள்ளது .ஆதலால் இனி வரும் காலங்களில் இந்த இடத்தில் புற்று இருக்கிறது மாரியம்மன் உள்ளார் என்று பொய்யான வதந்திகளை பரப்பி உள்ளே புக நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment