Friday, 31 January 2025

சுங்குவார்சத்திரத்தில் பொன்னம்பலம் என்பவரின் வீட்டில் குடியிருந்த இளம் பெண்களுக்கு பலான தொல்லை கொடுத்த ஹவுஸ் ஓனர் கைது!

காஞ்சிபுரத்தில் அதிமுக பிரமுகர் , 2 பெண்களிடம் சேட்டை செய்ததால், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.. அத்துடன், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். (60 வயதாகிறது) இவர் அதிமுகவில் எம்.ஜி.ஆர் மன்ற இணை ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்தவர். இவருடைய வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு விட்டுள்ளார். இதில், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் 2 இளம்பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர்.

பொன்னம்பலம் இந்த பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பெண்கள், இவருக்கு பயந்து, கடந்த டிசம்பர் மாதம். அந்த வீட்டையே காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு வாடகைக்கு சென்றுள்ளனர்.

ஆனாலும் பொன்னம்பலம் விடாமல், அந்த பெண்களுக்கு துரத்தி துரத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார். அந்த பெண்கள் வேலைக்கு போனாலும், வேலையிலிருந்து திரும்பி வீட்டுக்கு வரும்போதும், இருசக்கர வாகனத்தில் சென்று, பாலியல் டார்ச்சர் தந்து வந்துள்ளார். போதாக்குறைக்கு, செல்போனிலும் தொடர்புக் கொண்டு பாலியல் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், அந்த 2 பெண்களும், பொன்னம்பலம் பற்றி தன்னுடைய தோழிகளிடம் இதைப் பற்றி பலமுறை சொல்லி அழுதுள்ளனர்.

இப்படித்தான், சம்பவத்தன்று விடிகாலை 5 மணிக்கு , பொன்னம்பலம் அந்தப் பெண்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, பாலியல் தொந்தரவும் தந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட 2 பெண்களும், சக தோழிகளும் சேர்ந்து முன்னாள் ஹவுஸ் ஓனரான பொன்னம்பலத்தை துடைப்பத்தாலேயே அடித்து விரட்டியிருக்கிறார்கள். அத்துடன், இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவுச் செய்துள்ளார்.

துடைப்பத்தால் அந்த பெண்கள் அடித்ததுமே, "வயசு பொண்ணுங்க இருக்கிற ரூமுக்கு வந்தது என் தப்புதான்" என்று ஹவுஸ் ஓனர் சொல்வது முதல் அவர் வீட்டை விட்டு வெளியேறும்வரை துடைப்பத்தால் அடித்து விரட்டுவது வரை அனைத்துமே அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்ற பொன்னம்பலத்தை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், ஆபாச வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொன்னம்பலத்தின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இறுதியில், பொன்னம்பலத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் ஜெயிலில் தள்ளினர்.

இதனிடையே, அதிமுக நிர்வாகியாக இருந்த பொன்னம்பலத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். படப்பை பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்தபடியே இருந்தது.

இந்நிலையில், தற்போது தனது வழக்கறிஞர் மூலம் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்து இருந்த பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வயது மூப்பு, நோய் இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த வாதத்தை ஏற்று அவருக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காலையில் கைதான நிலையில், தற்போது இந்த ஜாமீன் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. சுற்றத்தினராலேயே பெண்கள் பாதிக்கப்படும் அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில், வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்களுக்கு, வீட்டின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர் அணி இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பொன்னம்பலம். இவர் படப்பையிலுள்ள தனது வீட்டில் குடியிருந்து வந்த இளம்பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது வீட்டில் குடியிருக்கும் (24 வயது) இளம்பெண் ஒருவருக்கு பொன்னம்பலம் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், அவரை துடைப்பம் கொண்டு அப்பெண்கள் அடித்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பொன்னம்பலத்தின் வீட்டில், சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயது கொண்ட 2 இளம்பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொன்னம்பலம் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த இரண்டு பெண்களும், இவரது வாடகை வீட்டிலிருந்து, வெளியேறி கீழ்படப்பை பகுதியில் மற்றொரு வாடகை வீட்டிற்கு குடியேறியுள்ளனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, எம்.பொன்னம்பலம் (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...