Tuesday, 28 January 2025

ஒசூர் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சப்ளமாதேவி மாட்டுத்திருவிழா இன்று பூஜையுடன் தொடக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஆவலப்பள்ளி டேம் பகுதி திம்மசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பளம்மா கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாட்டுத் திருவிழா பிரபலமாக இருந்து வருகிறது. 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இவ்விழாவானது ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத் திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லி கட்டு காளை வகை மாடுகள் வாங்குவதும் விற்பதுமான பண்டிகையாக சப்பலம்மா கோவில் திருவிழா விளங்குவதால்
இந்த மாட்டு பண்டிகையில் மாடுகளை வாங்குவது விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானனோர் மாடுகளைக் கொண்டு வந்து இவ்விழாவில் பங்கேற்கவிருக்கின்றனர்.
இங்கு ஒருஜோடி மாடுகள் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதால் இந்த மாட்டுத்திருவிழாவை எதிர்நோக்கி உள்ளனர் ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாள் ஜனவரி 27 முதல் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவில் தினமும் விசேஷ பூஜைகளுடன் திருவிழா நடைபெறும். இங்கு 67 கிராம தேவதைகளுகள் அலங்கரிக்கப்பட்ட வண்ண விலக்குகள் கொண்ட பல்லக்கு உற்சவத்தில் அமர்த்துவது மிகவும் விஷேசமாக பார்க்கப்படுகிறது.

இந்த  மாட்டு திருவிழாவில் மாடுகள் விற்பனை பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.
இதில் சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திர மூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன் கிருஷ்ணப்பா, சிவா நந்தன், ராஜரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இந்த திருவிழாவை காண சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருவிழாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் மாடுகளுக்கு புல்லு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று திருவிழாவிற்கு வந்திருக்கும் மாடுகளுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு எந்தவித சுங்கம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது தினந்தோறும் அம்மனை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...