Friday, 31 January 2025

தரம் இல்லாத தார் சாலை கெலமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே  கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண மன்றக் கூட்டம் அதன் தலைவர் கே.பி.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி பொறுப்புச் செயலாளர் மஞ்சுநாத் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்று பல்வேறு மக்கள் பணிகள் குறித்து விவாதித்தனர். 

இதில் 13-வது வார்டு பகுதி கவுன்சிலர் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினருமான வெங்கடாசலபதி பேசும்பொழுது, மக்கள் நலத்திட்ட பணிகள் முறையாக எதுவும் நடைபெறுவதில்லை எனவும், ஒரு வளர்ச்சி பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார். 

மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை மூன்றே நாட்களில் பெயர்ந்து கைகளில் வரும் அளவு தரம் குறைவாக போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை எனவும் உரிய முறையில் டெண்டர் விடாமல் ஒரு தலைப்பட்சமாக பேரூராட்சி தலைவர் செயல்படுவதாகவும் கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். 

அதேபோல பேரூராட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும், எதற்கு எடுத்தாலும் லஞ்சம் என்ற சூழல் இருப்பதால் மக்கள் நல பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கி கிடப்பதுடன் வாக்களித்த மக்களிடம் நேரில் சென்று சந்திக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பேசினார்.

இதனைத் தொடர்ந்து 5-வது வார்டு கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்த விஜயஸ்ரீ பேசும்பொழுது கெலமங்கலம் பேருந்து நிலையத்தையொட்டி தற்போது அதிக எண்ணிக்கையில் இறைச்சி மட்டன் கடைகள் செயல்பட்டு வருவதால், அங்கிருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகளை தின்பதற்கு அங்கு ஏராளமான தெரு நாய்கள் கூடுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. 

மேலும் இந்த இறைச்சி கழிவுகளை அருகிலுள்ள நீர் நிலைகளில் வீசிவிட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என குற்றம் சாட்டி பேசினார். இதுபோன்று பல விஷயங்களை முன்வைத்து பேசினார்கள் கவுன்சிலர்கள்கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி சாதாரண மன்றக் கூட்டத்தில், என்னதான் கவுன்சிலர்கள் சாதாரண மன்ற கூட்டத்தில் பேசி கத்தினாலும் வாக்களித்த மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் தான் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...