Friday, 31 January 2025

கிருஷ்ணகிரி: நெடுஞ்சாலையில் கனரக வாகன ஓட்டுனர்களிடம் கரராக லஞ்ச வசூல் வேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.. ஏட்டு சஸ்பெண்ட் செய்து எஸ்.பி அதிரடி..!!

கர்நாடக மாநிலத்திலிருந்து, ஓசூர், கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் வழியாக அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனங்களை மத்தூர் சுங்கச்சாவடி அருகில் வழிமறித்து, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போலீசார் பொதுவாக மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்துவது வழக்கம். போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், சந்தேகத்திற்கு உரியவர்களை விசாரிக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் இந்த சோதனை அடிக்கடி நடத்தப்படுவது வழக்கம். கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைப் பகுதிகளிலும், அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் சோதனைசாவடி அமைத்து சோதனை செய்வார்கள். அதேநேரம் திடீரென எல்லைப்பகுதிகளில் வேறு இடங்களிலும் சோதனை நடத்துவார்கள்.

அந்த வகையில், கர்நாடகா மாநிலத்திலும் சோதனை நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து, ஓசூர், கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் இரு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் வழியாக அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்வது வழக்கம்.

இதனால் மத்தூர் சுங்கச்சாவடி அருகில் ஊத்தங்கரை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட நெடுஞ்சாலை ரோந்து வாகன பிரிவு போலீசார் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது போலீசார், வாகன ஓட்டிகளிடம் லஞ்ச வசூல் வேட்டை வசூலித்த பின்னரே அங்கிருந்து வாகனங்கள் செல்ல அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனை செய்து லஞ்ச வசூல் வேட்டை நடத்திய சம்பவத்தை ஒருவர் செல்போனில் வீடியோவாக காட்சி பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ஐபிஎஸ்., விசாரணை நடத்தினார். இதையடுத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த குற்றச்சாட்டை தொடர்ந்து. நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திருநாகரன், ஏட்டு சரவணன் ஆகியோரை இருவரையும் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி ஆயுதப்படைக்கு பணியிடத்தை மாற்றி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திருநாகரன், ஏட்டு சரவணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...