அரியலுார் மாவட்டத்தில், நிலத்தை அளந்து தருவதற்காக, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்குடி கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.
அரியலுார் மாவட்டம், ஜெயம்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்துக்குட்பட்ட வங்குடி கிராம நிர்வாக அலுவலராக புகழேந்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரிடம் அய்யப்பன் நாயக்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், தனது நிலத்தை அளவை செய்ய நாடியுள்ளார்.
அப்போது புகழேந்தி ரூ.2000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து புகழேந்தி மீது வேல்முருகன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புகார்காரரான வேல்முருகனிடம் கொடுத்து கிராம நிர்வாக அதிகாரி புகழந்தியிடம் கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தலின்படி புகழேந்தியிடம் வேல்முருகன் ரசாயனம் பொடி தடவப்பட்ட பணத்தைக் கொடுத்தார். அப்போது அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ புகழேந்தியை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய பிறகு வழக்குப் பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரியான புகழேந்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment