கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 25வது வார்டுக்குட்பட்ட நேதாஜி சாலையிலுள்ள செயின்ட் பால்ஸ் லூத்தரன் சர்ச் அருகில் வெங்காயம், தக்காளி விற்கும் தள்ளுவண்டிகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் 100-க்கும் அதிகமாக இருப்பதால் நடந்து கூட செல்லமுடியாத சூழல் நிலவி வருகிறது இதனால் கிறிஸ்துவத் தேவஆலயத்திற்கு செல்லும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கிறிஸ்துவத் தேவாலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யாவிற்கு கோரிக்கை மனு அளித்தனர்.இதேபோல தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பிலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓசூர் நேதாஜி சாலை, வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை ஆகிய பகுதியில் நேற்று மாநகராட்சி மேயர் சத்யா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை வழி மறித்து வைத்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றவும், அங்குள்ள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேஷ், மாவட்ட இணைச் செயலாளர் சுதாகர், மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் சந்தோஷ் மற்றும்
நிர்வாகிகள் சிவா, நவீன், குமார், பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment