Sunday, 26 January 2025

அப்பாவிகள் வயிற்றிலடிக்கும் போலி பாஸ்டர் வேடிக்கை பார்க்கும் வேலூர் தெற்கு காக்கிகள்!

வேலூர் மாவட்டம், வேலூரில் விக்டர் ஜேசுதாசன் என்பவர் நான் ஒரு பாஸ்டர் ஊழியம் செய்து வருவதோடு ஏழை எளியோருக்கு அவர்களுக்கு தகுந்தாற்ப் போல் என்னால் இயன்றவரை உதவி செய்து வருகிறேன். என பலரிடம் ஏமாற்றி பணம் பெற்று மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக பேசப்பட்டு வந்தன.
இதை உறுதிபடுத்தும் வகையில் வேலூரில் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் வெங்கடேசன், மஸ்தான், கனி முன்னா என மூன்று நபர்கள் புகார் கொடுக்க வந்தால் காவல் நிலையத்தின் அதிகாரிகள் புகாரை பெற்றுக் கொள்ளாமலும் அவர்களுக்கு (CSR) தராமல் அலைக்கழித்ததாகவும் அதன் பின் புகார் கொடுக்க வந்தவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
இவை குறித்து மேற்கண்ட மூவரையும் கேட்டதில் அதில் வெங்கடேசன் என்பவர் நான் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது கடைக்கு வஜ்ஜிரவேலு என்பவர் வருவார். அவர் என்னிடம் உனக்கு திருமணம் ஆகவில்லையா என கேட்க நானும் ஆகவில்லை என கூறினேன் அதற்கு அவர் உனக்கு வயதாகிறது நான் நல்ல குடும்ப பெண்ணை மணமுடித்து வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி அவ்வப்போது என ரூபாய்.76.450/- வரை பெற்றுக் கொண்டு பிறகு கடைக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். இவரைப் போன்றே விக்டர் ஜேசுதாசன் என்பவரும் எனது கடைக்கு வந்து அவருடைய சைக்கிளை ரிப்பேர் செய்து செல்வார். நான் அவரிடம் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள வஜ்ஜிரவேலு என்னிடம் பணம் ஏமாற்றி விட்டார் என கூறினேன், அதற்கு விக்டர் ஜேசுதாசன் அப்படியா கவலைப்படாதே நான் ஒரு கிறிஸ்துவ பாஸ்டர் என்பது உனக்கு தெரியாதா? நான் ஜெபம், மற்றும் ஆலோசனைகளை வழங்கி ஊழியம் செய்து வருவதால் எனக்கு காவல்துறை அதிகாரிகள் முதல் ரவுடிகள் வரை பழக்கம் என கூறியதோடு எனது மூளையை சலவை செய்து இவர் பங்கிற்கு அவ்வப்போது என மொத்தம் ரூபாய். 62.850- பெற்றுக் கொண்டு எனது கடை பக்கம் வராமல் இருந்தார். அதன் பிறகு நான் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்க இருந்த நிலையில் இதை எப்படியோ தெரிந்து கொண்ட விக்டர் ஜேசுதாசன் நீ வஜ்ஜிரவேலு மீது புகார் கொடு நான் வாங்கிய பணத்தை திருப்பிதந்து விடுகிறேன் என கூறவே காவல் நிலையத்தில் வஜ்ஜிரவேலு மீது புகார் அளித்த பிறகு காவல் துறையினர் கட்டப்பஞ் சாயத்து செய்து மாதம் ரூ.5000- வீதம் எனக்கு கொடுக்கும் படி அவரிடம் எழுதி வாங்கி அனுப்பி விட்டனர்.
அடுத்து நான் விக்டர் ஜேசுதாசனிடம் கொடுத்த பணத்தை கேட்டால்? நான் என்ன வஜ்ஜிரவேலு என நினைத்தாயா? நான் ஒரு கிறிஸ்துவ பாஸ்டர், எனது பிண்ணனி என்ன என்பதை தெரிந்து கொள் எனது மருமகன் வழக்கறிஞர் நானும் எனது மருமகனும் உன்னைப் போன்றே பலரிடம் பணம் வாங்கி காசோலை
கொடுத்தும் மற்றும் நூதன முறையில் பணம் பெற்று மோசடி செய்துள்ளோம். நீ கொடுத்த பணத்தை மறந்து விடு. அதையும் மீறி என் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அவர்கள் என் மீது எளிதில் வழக்குத் தொடர மாட்டார்கள், அதோடு நீ சைக்கிள் கடை நடத்திடாதபடி செய்து உன்னை கொன்று விடுவேன் என தாக்க முயற்சித்தார் போலி பாஸ்டர் விக்டர் ஜேசுதாசன்.
அதன் பிறகு நான் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியாளர் என புகார் மனு அளித்தும் தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு சார்ந்த காவல்துறையினர் இதுவரை எனக்கு CSR. கூட தரவில்லை என மனவேதனையுடன் கூறினார் வெங்கடேசன்.
மஸ்தான்கனி கூறும் போது நான் கடன் வாங்கி - நான்கு மாதத்திற்கு முன்பு தான் சிறியதாக துணிக்கடை வைத்தேன் கடந்த 07-12-2024 அன்று எனது கடைக்கு விக்டர் ஜேசுதாசன் என்பவர் வந்து நான் எனது வீட்டு பக்கத்தில் இயேசுவின் குரல் ஜெப வீடு என்ற பெயரில் ஊழியம் செய்து வருகிறேன். நான் ஒரு பாஸ்டர் கிறிஸ்துமஸ் திருவிழா வர உள்ளதால் ஏழைகளுக்கு துணிகள் தருவது வழக்கம். எனவே நாள் உங்களிடம் எடுக்கும் துணிகளுக்கு வங்கி காசோலை தருகிறேன் என கூறினார். நானும் கிறிஸ்துவ பாஸ்டர் என்கிறாரே என சரி என கூற, அவர் ரூபாய்.25000/- த்திற்கு துணிகளை எடுத்துக் கொண்டு 'காசோலை கொடுத்து விட்டு சென்றார். அவர் தேதி குறிப்பிட்டு கொடுத்த தேதியில் காசோலையை வங்கியில் எடுத்து சென்று கேட்ட போது அவர் வங்கி கணக்கில் பணம் எதுவும் கிடையாது உங்களை போன்ற பலருக்கு காசோலை கொடுத்து மோசடி செய்துள்ளார் போல் உள்ளது என நகைப்புடன் கூறினார்கள். இதில் அதிர்ச்சி அடைந்து நான் விக்டர் ஜேசுதாசின் வீட்டிற்கு சென்று கேட்டபோது எனது வீட்டிற்கே வந்து பணம் கேட்கிறாயா? உன்னை கூலிப்படை வைத்து உன்னையும் உன் குடும்பத்தாரையும் ஒழித்து கட்டி விடுவேன் என தகாத வார்த்தைகள் கூறி தாக்க வந்ததோடு எனது மருமகள் வழக்கறிஞர் என்னை எதுவும் செய்ய முடியாது என சத்தம் போட்டு சுத்தவே அச்சப்பட்டு ஒடி வந்து காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தால் எனது புகார் மனுவை வாங்காமல் எனது செல் நம்பரை வாங்கிக் கொண்டு நான் கூப்பிடும் போது வா என அனுப்பி விட்டனர். இத்தகவல் தெரிந்த பாஸ்டர் என கூறும் விக்டர் ஜேசுதாசன் என்னை சாலையில் பார்த்து சட்டையை பிடித்து என்னாச்சு காவல் நிலையத்தில் உனக்கு நீதி கிடைக்காது என மிரட்டவே நான் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடந்த 18-12-2024 அன்று புகார் அனுப்பியுள்ளேன் என்றார் மஸ்தான் கனி அதே போல் முன்னா என்பவர் கூறும் போது விக்டர் ஜேசுதாசன் கடந்த 27-10-2024 அன்று நான் நடத்தி வரும் பேக் கடைக்கு வந்து நான் ஒரு பாஸ்டர் திருச்சபை நடத்தி வருகிறேன் கிறிஸ்துமஸ் திருவிழா வருவதால் சபையில் உள்ளவர்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் பேக் தர உள்ளேன் 
நாள் வாங்கும் பொருட்களுக்கு வங்கி காசோலை தருகிறேன் என கூறவே நான் ஒப்புக் கொண்டேன். பின் ரூபாய்.10000/- மதிப்பில் பேக்குகளை எடுத்துக் கொண்டு வங்கி காசோலை கொடுத்து விட்டு சென்றார். விக்டர் ஜேசுதாசன் குறிப்பிட்ட தேதியில் காசோலையை வங்கியில் செலுத்தினால் பணம் இல்லை என தெரிய வந்தது உடனே அவரது செல்போன் நெம்பரில் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் உபயோகத்தில் இல்லை என கூறவே நான் அவர் வீட்டிற்கு சென்று கேட்டால் அடியாட்களை வைத்து தீர்த்து கட்டுவேன் என மிரட்டவே நாள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடத்த 18-12-2024 அன்று புகார் மனு அனுப்பியும் இது வரை தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகள் என்னை விசாரிக்கவும் இல்லை. விக்டர் ஜேகநாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிக்கின்றனர் என்றார் முன்னா. மேலும் பாஸ்டர் என்ற போர்வையில் உலா வரும் விக்டர் ஜேகதாசன் வசிக்கும் எஸ்.எஸ்.கே மானியம் பகுதியிலுள்ள அந்தோணியர் கோவில் தெருவில் தினமும் விடியற்காலை 5 மணி முதல் 6 மணி வரை சத்தமாக ஒலிப்பெருக்கி வாயிலாக கிறிஸ்துவ மதத்தினை குறிக்கும் பாடல்களை சத்தமாக வைப்பதாகவும் இதனால் சிறு பிள்ளைகள் அலறி அடித்துக் கொண்டு விழித்து அழுவதாகவும் மேலும் வயதான பெரியவர்கள், வியாதியினால் அவஸ்தைப்படும் நோயாளிகள் அனைவரின் தூக்கத்தை கெடுப்பதாகவும் இதைப்பற்றி கேட்டால் விக்டர் ஜேசுதாசன் காவல் நிலையத்தில் முழு சுதந்திரமான அனுமதி வழங்கியுளளேன் என மிரட்டுகிறார் என தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் அமைதியாக உள்ளதாக கூறுகின்றனர்.
ஏற்கெனவே நீதிமன்றம் காவல் நிலையத்தில் எவரேனும் புகார் கொடுக்க வந்தால் புகாரின் தன்மைக்கு ஏற்ப முதலில் பதிவு ரசீது தர வேண்டும் என அறிவுறித்தியும் தெற்கு காவல் நிலையத்தில் அதிகாரிகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகவே தெரிகிறது.
மேலும் நமக்கு கிடைத்த தகவல்படி மோசடி பேர்வழி போலி பாஸ்டர் விக்டர் ஜேசுதாசன் மீது வழக்குப் பதிவு செய்வது தெரிந்தால் இவரால் பணத்தை பறி கொடுத்தவர்கள் பலரும் காவல் நிலையத்தில் புகார் தர முன் வருவார்கள் என சொல்கின்றனர்.
காவல்துறையினர் நேர்மையாக இருக்க வேண்டும் இல்லை என எனக்கு தெரிய வந்தால் எனது தனிப்படை கொண்டு விசாரணை செய்து பராபட்சமின்றி சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியதோடு அதிரடி நடவடிக்கையும் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், ஐபிஎஸ்., எடுத்து வருகிறார். அப்படியிருந்தும் போலி பாஸ்டர் செய்யும் மோசடிகள் தெரிந்தும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் எதற்காக வேலூர் தெற்கு நிலைய ஆய்வாளர் தமிழரசி மற்றும் ரைட்டர் ஜெயசுதா மற்றும் காக்கிகள் கரன்சி பெற்றுக்கொண்டு மவுனம் காக்கின்றனர் என்பது புரியவில்லை. எனவே நேர்மையான அதிகாரி ஐ.ஜி.அஸ்ரா கார்க் அவர்களுடைய கவனத்திற்கு தெரிந்தால் அவர் சாட்டையை எடுப்பார் என நம்புவோம்.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...