சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் மஞ்சுளா என்பவரிடம் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் என்பவர் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்; இதற்கு நல்ல நேரம் தேர்வுச் செய்த தாசில்தார் பாலகிருஷ்ணன் நேற்று தை அமாவாசையை யொட்டி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வாங்கியபோது தாசில்தார் பாலகிருஷ்ணனை, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம்
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் ஒரு சில அதிகாரிகளால் ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுகிறது. வருவாய்த்துறை, உள்ளாட்சி, பொதுப்பணி, நீர்ப்பாசனம், நெடுஞ்சாலை, மின் வாரியம், போலீஸ், தீயணைப்பு, சார் பதிவாளர், என எல்லா துறைகளிலும் பாகுபாடின்றி லஞ்சம் ஊடுருவி கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில், அதிகபட்சமாக 2023 - 24ல் 155 வழக்குகளை போலீசார் விசாரிக்கின்றனர். அதிலும் அதிகபட்சமாக வருவாய் துறையினர் மீதுதான் லஞ்சம் வாங்கியதாக 70 வழக்குகள் பதிவாகியுள்ளன.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் மஞ்சுளா என்பவரிடம் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக, கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்திலிருக்கும் தாசில்தார் பாலகிருஷ்ணன், ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
தை அமாவாசை நல்ல நாள் என கூறி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வாங்கியபோது சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், நில அளவீடு செய்து நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக , கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் தாசில்தார் பாலகிருஷ்ணனை அணுகியுள்ளார். அப்போது, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தார் பாலகிருஷ்ணன் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். முன்பணமாக தை அமாவாசை தினமான நேற்று தேர்வு செய்துள்ளார் லஞ்சம் பெற ஜன.,29ம் தேதியன்று 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் மனுதாரர் மஞ்சுளாவிடம் கேட்டுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனுதாரரான மஞ்சுளா, லஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் இது சம்பந்தமாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை புகாரரான மஞ்சுளாவிடம் கொடுத்து தாசில்தாரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தல், அதன் பேரில் ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரித்து, வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் ஜெயிலில் தள்ளினர்.
No comments:
Post a Comment