தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் கல்லாவி ஆகிய பகுதிகளில், வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை சார்பாக, ரூ.57.92 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பிற்கா வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, சூளகிரி பிற்கா வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா குத்து விளக்கு ஏற்றி இனிப்புகளை வழங்கினார். உடன் சூளகிரி வருவாய் வட்டாட்சியர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment