Thursday, 30 January 2025

வேலூரில் பெண் மருத்துவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பு!

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியிலுள்ள வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்
எதிரே கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதியன்று இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து முழு போதையில் இருந்த 2 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்
அவர்கள் 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்ததை கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்து காவல் துறை விசாரித்து வந்த
நிலையில், மத்தியம் வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு E-மெயில் மூலம் ஒரு புகார் மனு வந்தது.

அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16.03.2022 - ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியிலுள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 01.00 மணியளவில் வேலூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும் , அந்த ஆட்டோ
போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும் , தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு
மறைவான இடத்திற்கு கடத்திச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள், பணம் சுமார் ரூ. 40,000 மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும் , மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக
குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக காவல்துறை கைதானவர்களிடம் மேலும் விசாரிக்கையில், வேலூர் காட்பாடியில் திருவலம் சாலையிலுள்ள திரையரங்கில்
கடந்த 16-ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இரவு காட்சி முடிந்து இரவு 12.30 மணிக்கு மேல் 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டு இது சேர் ஆட்டோ தான்
ஏறுங்க என கூறியுள்ளனர். ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று
கேட்டுள்ளார். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். ஏற்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ வேலூர் கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ஆட்டோ ஓட்டுனர், இவ்வழியில் சாலையை
மறைத்து வேலை நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர். சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றது. இதனால் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும். அவர்களிடமிருந்து செல்போன்கள், ஏடிஎம்
கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றதாக தெரியவந்தது. 

இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம்
கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டார். இந்த நிலையில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

2022ஆம் ஆண்டில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மாவட்ட காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மொத்தமாக 13 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டிருந்தது. இதன் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில்,

வேலூர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்களை காவல் வாகனத்தில் ஏற்றி செல்ல போலீசார்
அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள்
ஒளிப்பதிவாளர்கள் அந்த குற்றவாளிகளை வீடியோ எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு குற்றவாளி ஒளிப்பதிவாளரை தாக்கியதோடு அவரது கேமரா கருவிகளையும் உடைக்க முயன்றான். தொடர்ந்து அங்கிருந்து போலீசார் அவரை பிடித்து இழுத்துச் சென்றனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சத்திய ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வாதிட்டார். அதில் சிறுவனை தவிர்த்து சகோதரர்கள் உட்பட 4 பேரான பார்த்திபன், பரத், சந்தோஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி  தீர்ப்பளித்தார்சிறுவனுக்கு மட்டும் நேற்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...