Friday, 31 January 2025

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் தன் கோரிய தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர்களுக்கு ரூ.25, ஆயிரம் அபராதம் விதிப்பு!

வேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.ராஜவேலு என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, 6(1) பிரிவின் கீழ் தன் கேட்டுக்கொண்ட தகவல்கள் வழங்காத பொது தகவல் அலுவலர்களுக்கு ரூ.25, ஆயிரம் அபராதம் விதிக்கப்படுமா?

தமிழ்நாடு தகவல் ஆணையம்
முனைவர் மா. செல்வராஜ் மாநில தகவல் ஆணையர். முன்னிலையில், விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

ஆணை நாள் : 21.01.2025
வழக்கு எண் : SA 7219/F/2022

மனுதாரர் : சி. ராஜவேலு,

எதிர் மனுதாரர் : பொது தகவல் அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் வேலூர் மாவட்டம்- 632131

மேற்குறிப்பிட்ட வழக்கு 21-01-2025 அன்று முற்பகல் ஆணையத்தில் வைத்து நேரடி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது அன்றைய தின விசாரணையில் மனுதாரர் சி. ராஜவேலு அவர்கள் நேரில் ஆஜரானார், பொது அதிகார அமைப்பின் சார்பாக கா.சதீஷ்குமார், பொதுத் தகவல் அலுவலர் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி அலுவலகம், அணைக்கட்டு, வேலூர் மாவட்டம், அவர்கள் நேரில் ஆஜரானார்.

மனுதாரர் 01-01-2022 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, 6(1) பிரிவின் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 301, Animal Husbandary, Darying Fareries and Fishermen Werftars (AH2) Department, dated 20-11-2001இன் படி ஆடுகள் உதவிப் பெற்ற ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், கணவனை இழந்தகைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ஒரு நபருக்கு 5 ஆடுகள் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ஆடுகள் பெற தகுதியுடைய நபர்களின் பெயர் பட்டியல் வழங்கக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்காத காரணத்தினால் மனுதாரர் 21-02-2022 நாளிட்ட பிரிவு 19(1)-ன் கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார். முதல் மேல்முறையீட்டு அலுவலரும் தகவல் வழங்காத காரணத்தால் மனுதாரர் 19-04-2022 நாளிட்ட கடிதம் வாயிலாக பிரிவு 19(3)-ன் கீழ் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்திற்கு தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவிற்கு முழுமையான தகவல்கள் வழங்கவேண்டுமென்று இவ்வாணையத்தால் 01-06-2022 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலருக்கு அறிவிப்பு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. 

அவ்வாறு இவ்வாணையத்தால் 01-06-2022 தேதியிட்டு அனுப்பப்பட்ட அறிவிப்பு கடிதத்தை பெற்றுக்கொண்டு பொதுத் தகவல் அலுவலர் நாளானதுவரை மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்படாததால், மனுதாராரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு 21-01-2025 அன்று முற்பகல் நேரடி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அன்றையதினத்தில் விசாரணைக்கு ஆஜரான மனுதாரர் உரிய காலத்திற்குள் தனக்கு தகவல் வழங்காத பொதுத் தகவல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, முழுமையான தகவல்களை பொதுத் தகவல் அலுலரிடமிருந்து பெற்று வழங்குமாறு ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதன் பேரில், அன்றையதினத்திலே விசாரணைக்கு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கோரியுள்ள தகவல்களை ஏற்கனவே 13-01-2025 நாளிட்ட கடிதம் வாயிலாக பதிவஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதாக ஆணையத்தில் தெரிவித்தார். மேலும் மனுதாரருக்கும் ஆணையத்திற்கும் அனுப்பிய அக்கடிதத்தின் நகலினை ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில் மனுதாரரின் தகவல் கோரும் மனுவையும், பொதுத் தகவல் அலுவலரின் தகவலையும் இணைத்துப் பரிசீலனை செய்ய மனுதாரருக்கு வழங்கிய தகவல்கள் முழுமையான தகவல்கள் என ஆணையம் உறுதி செய்து மனுதாரருக்கு ஏற்கனவே இத்தகவல்கள் 13-01-2025 நாளிட்ட கடிதம் வாயிலாக 20-01-2025 அன்று பதிவஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டதை இவ்வாணையம் ஏற்று இவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனு முற்றாக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது. 

மேலும் அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் உரிய காலத்திற்குள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சரிவாரியாக தகவல்கள் வழங்காமல் இருந்த காரணதல், ஆணையம் அப்போதைய பொதுத் தகவல் அலுவலருக்கு கீழ்கண்டவாறு உத்தரவைப்  பிறப்பித்துள்ளது.

மனுதாரர் தகவல் உரிமைச் சட்டம் 2005, (6)1 பிரிவு இன் கீழ் கோரிய மனுவிற்கு ஆணையத்தின் அறிவிப்பிற்கு பிறகும் உரிய காலத்திற்குள் தகவல்களை முழுமையாக வழங்கத் தவறிய அப்போதைய அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பொது தகவல் அலுவலர் வே. ஜெயந்தி மற்றும் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)இன் கீழ் நள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் ரூ.25,000/. ஏன் விதிக்கக்கூடாது என்பதற்கான அவரது எழுத்துமூல விரிவான விளக்கத்தினை இவ்வாணையத்திற்கு 21-02-2025 அன்று பொது தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு அப்போதைய பொதுத் தகவல் அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையர் மா. செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், H4 பாலார் கார்டன், சத்துவாச்சாரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி. ராஜவேலு என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன்படி 6(1) 19(1). 19(3). 20(1)-ன் ஆகிய பிரிவுகளின் கீழ் அதற்கு உண்டான 10.ரூபாய்-காண நீதிமன்ற வில்லையை மனுவில் பதிந்து சம்பந்தப்பட்ட துறைக்கு பதிவஞ்சல் மூலம் தன் கோரிய தகவல்களை வழங்கப்படாத அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பொது தகவல் அலுவலர் , தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய இருவர் தகவல்கள் வழங்கப்படாத நிலையில், இருவரும் 21-02-2025 அன்றைய தேதியில் நேரில் ஆஜராகி விளக்கும் அளிக்கும்படி மாநில தகவல் ஆணையரின் உத்தரவுக்கு செவிச் சாய்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...