காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் வீடு கட்டுமானப் பணிக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப் பொறியாளர் பூபாலன், வணிக ஆய்வாளர் ஜெய ரவிக்குமார் ஆகிய இருவர் கைது.
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார்..
வீடு கட்டுமான பணிக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளர், வணிக ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 30) வீட்டுமனை வாங்கி வீடு கட்டுவதற்காக கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளார். இதற்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பித்து வாலாஜாபாத்திலுள்ள மின்வாரிய ஊரகப்பிரிவு அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது, மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ஜெய ரவிகுமார் (வயது 48) தற்காலிக மின் இணைப்பு கேட்டு வந்த மணிகண்டனிடம் மின்வாரிய உதவி பொறியாளர் பூபாலனுக்கு 5 ஆயிரம் ரூபாய் கையூட்டுக் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கு லஞ்சம் தர விரும்பாத மணிகண்டன் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரசாயனம் பவுடர் தடவிய பணத்தை கொடுத்து மணிகண்டனை அனுப்பி வைத்துள்ளனர். அதை பெற்றுக்கொண்ட மணிகண்டன் நேற்று மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து, வணிக ஆய்வாளர் ஜெய ரவிகுமாரை அணுகிய நிலையில் அவர் உதவிப் பொறியாளர் பூபாலனிடம் அழைத்துச் சென்று பணத்தை வழங்கியுள்ளார்.
ரசாயனம் பவுடர் தடவப்பட்ட லஞ்சப்பணத்தை உதவி பொறியாளர் பூபாலன் பெற்றுக் கொண்டபோது அப்போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் காவல் ஆய்வாளர் கீதா மற்றும் போலீசார் அதிரடியாக மின்வாரிய அலுவலகத்தில் நுழைந்து லஞ்ச பணத்தைப் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளர் பூபாலன், வணிக ஆய்வாளர் ஜெய ரவிகுமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரையும் சிறையில் அடைத்தனர் இச்சம்பவமானது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரின் திடீர் நடவடிக்கையால் வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment