Thursday, 30 January 2025

சேத்துப்பட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்ப.. விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தன் மீது வருமானத்திற்கு அதிகமாக லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்ததர்க்காக திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், சேத்துப்பட்டு காவல் நிலையம், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தன் மீது 28-01-2025 அன்று வழ‌க்குப் ப‌திவு செ‌ய்து விசாரணை செய்து வீடு, நிலம் , வீட்டு மனைகள் மற்றும் சொத்துக்கள் வாங்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணங்களை குறித்தும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஆனந்தன் காவலர் முத‌ல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரை  நீண்ட  ஆண்டுகளாக ஆரணி உட்கோட்டத்திலேயே தன் செல்வாக்கை பயன்படுத்தி யூனிபார்ம் போடாமல் மப்டியில் தனி பிரிவு "SB" யில் பணிபுரிந்து வந்ததாகவும் பொதுமக்கள் புகாரால் தனி பிரிவிலிருந்து பணி மாற்றம் செய்து தற்பொழுது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இச்செய்தி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காக்கிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.                     ‌

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...