தமிழ்நாட்டின்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் மேல்நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சமூக சார்ந்த சிபிஐ விசாரணை வேண்டுமென்று அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதனைத் தொடர்ந்து மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது,
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி வகுப்பறையில் மர்மநபர்கள் மனிதக் கழிவை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளிக்கு காலை மீண்டும் மாணவர்கள் வருகை தந்தனர். அப்போது அவரவர் வகுப்புகளுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் 10ஆம் வகுப்புக்கான அறைக்கு மாணவர்கள் சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு ஜன்னலிலும் மாணவர்கள் உட்காரும் நாற்காலியிலும் மனிதக் கழிவை யாரோ வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியனர்.
அவர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த வகுப்பறையில் இருந்த கழிவை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். இது போல் மனித கழிவை வீசி சென்றது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை இரவு நேரத்தில் பள்ளி அருகே சமூகவிரோத செயல்களில் ஈடுபட வந்தவர்கள் யாரேனும் இதை செய்தனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment