கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இளம் இந்தியர்கள் என்ற அமைப்பின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு மாதம் நாடெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை ஓசூர் போக்குவரத்து துறை காவல் உதவி ஆய்வாளர் சத்யா துவக்கி வைத்தார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் தலைக்கவசம் கட்டாயம் அணிவீர் சீட் பெல்ட் அணிவீர் சாலை விதிகளை கடைபிடிப்பீர் என் மன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த பேரணியில் இளம் இந்தியர்கள் அமைப்பின் தலைவர் ஜோதி பிரசாத் மற்றும் துணைத் தலைவர் லஸியா தம்பிதுரை உள்ளிட்ட கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஏரித்தெரு சாலை சந்திப்பில் துவங்கிய இந்த பேரணி ஏரி தெரு, மகாத்மா காந்தி சாலை ராயக்கோட்டை சாலை காமராஜர் காலனி தாலுகா அலுவலக சாலை தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று இறுதியில் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment