கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுடன், தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காந்திநகர், குமுதேப்பள்ளி, எல்லம்மா கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் குறிப்பாக, கால்நடைகளை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் உள்ளனர்.
அண்மையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி, கிராம ஊராட்சிகள் மறு வரை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் தொரப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காந்திநகர், குமுதேப்பள்ளி மற்றும் எல்லம்மா கொத்தூர் ஆகிய கிராமங்கள் ஓசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பியவாறு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர்கள் துணை ஆணையாளர் டிட்டோ மற்றும் அதிகாரியிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த பகுதி மக்கள்,
மூதறிஞர் ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த கிராமங்களில் கால்நடைகளை நம்பி வாழும் ஏராளமான விவசாயிகள் நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் வரி உயர்வு என்பதை எதிர்கொள்ள இயலாது. எனவே மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment