Thursday, 30 January 2025

மதுரையில் இளம்பெண் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை புகார் கோரியவரிடம்.. ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட இளம்பெண்  ஒருவர் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரையில் இளம்பெண் கவிதா என்பவர், உதவி காவல் ஆய்வாளரை நாடியிருக்கிறார். இதையடுத்து, அந்த உதவி காவல் ஆய்வாளர் செய்த காரியம், மதுரை மாவட்ட காவல்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை புதூரில், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவரிடம்  ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் சண்முகநாதனை  மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள துறைகளாக, திகழும் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறைகள் எனவேதான், இந்த துறைகளில் பல்வேறு லஞ்ச புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை..

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் பொறுப்புள்ள அதிகாரிகளே, இப்படி தினம் தினம் கையூட்டுப் பெற்று கைதாவது சம்பவங்கள், பொதுமக்களுக்கு கவலையையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருகிறது. இதில் காவல்துறையும் இணைந்துள்ளது. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், ஒருசிலர் செய்யும், தவறுகளால் மொத்த துறைகளுக்கும் கெட்ட பெயர் வந்துவிடுகிறது. அது போன்று மதுரையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர்  சிக்கியிருக்கிறார்.
மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகநாதன். இவரிடம் HMS காலனியைச் சேர்ந்த இளம்பெண் கவிதா என்பவர், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாராக கூறியிருக்கிறார்.

அதாவது, ஏற்கனவே, மதுரை மாவட்டம், ஜெயந்திபுரம் பகுதியில் இளம் பெண் கவிதா என்பவர் வசித்து வந்துள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக சிலர் கவிதாவை தாக்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 2 பேர் இன்னும் கைதாகவில்லை என தெரிகிறது.

இது சம்பந்தமாக இளம் பெண் கவிதா என்பவர் காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு மற்ற இருவரை கைது செய்ய வேண்டுமானால், ரூ.1 லட்சம் தேவை என்று காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதன் லஞ்சம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு புகார்தாரரான கவிதா அதிர்ச்சியும் தயக்கமும் அடைந்துள்ளார். இதற்கு பிறகு மனமிரங்கிய காவல் உதவி ஆய்வாளர்
ரூ.1 லட்சம் வேண்டாம், வெறும் 70 ஆயிரம் ரூபாய் தந்தால் போதும் என்று சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்க எதற்காக லஞ்சம் தர வேண்டும்? என்று புகார்தாரரான அந்த இளம் பெண் கவிதா நினைத்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாமால், இதுகுறித்து மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சத்யசீலனிடம்,  காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதன் குறித்து புகாராக முறையிட்டார். இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதனிடம் முன்வந்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாரி அறிவுறுத்தலின் படியே இரசாயன பொடி தடவப்பட்ட ரூ.30 ஆயிரத்தை புகாரரான இளம் பெண் கவிதாவிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதனிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தல் அதன்படியே, மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே, காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதனுக்கு கவிதா ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார். அந்த லஞ்சப்பணத்தை வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதன், அதை தன்னுடைய பைக் பெட்ரோல் டேங்கிலுள்ள கவரில், வைத்துகொண்டிருக்கும்போது, அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையிலான போலீசார் அவரை சுற்றி வளைத்து லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதனை அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்ததாக கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.



No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...