Sunday, 26 January 2025

கே.வி.குப்பம், காளாம்பட்டு மருத்துவமனை கட்டுவதை தடுத்து நிறுத்தும் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பானுப்பிரியா?

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காளாம்பட்டு ஊராட்சியில் பழைய  ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சுமார் 40 இலட்சத்தில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் எடுத்தவர் வேலை செய்ய முற்பட்ட போது ஊராட்சி மன்றத் தலைவர் பானுப்பிரியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் வேறு இடம் பார்க்க வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்த முற்பட்டனர். பிறகு ஊர் பொதுமக்கள் இந்த இடத்தில் தான் மருத்துவமனையை கட்ட வேண்டும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து பானுப்பிரியா, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களை வேனில் அழைத்துக் கொண்டு வந்து எங்கள் தலைவர் தான் வேலை செய்ய வேண்டும் என கூற வைத்தார். மேலும் நான் தான் காண்ட்ராக்ட் எடுப்பேன். நான் தான் கட்டுவேன், என்னால் விட முடியாது என்று பி.டி.ஓ. பெருமாள் முன்னிலையில் தெரிவித்தார். பி.டி.ஓ. பெருமாள் அவர்களும் அமைதியுடன் சென்றுவிட்டார். பிறகு போலீசார் திங்கட்கிழமையன்று வந்து பணி செய்யுமாறு ஒப்பந்தாரரிடம் அறிவுறுத்தி வேலையை நிறுத்தி விட்டனர். இதில் திமுக ஒன்றியச் செயலாளர் ஜெயா முருகேசனுக்கு டெண்டர் வராததால் மற்றவர்களை தூண்டி விடுகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் எங்களுக்கு மருத்துவமனை விரைந்து கட்ட வேண்டும். சுமார் 15 வருடங்களாக இந்த கட்டிடம் பாழடைந்துள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் தலைவர் பானுபிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பி.டி.ஓ. பெருமாள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமி ஆகியோரின் நடவடிக்கையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அவர்களுடைய கட்சியினரால் அரங்கேறி வருகின்றன. இதே கே.வி.குப்பம் நாகல் பகுதியில் திமுக ஊராட்சி மன்றத் தலைவரால் பாஜக நிர்வாகி விட்டல் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...