ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தை நிறுவிய ஸ்தாபகருமான ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு 85 வது ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளின் 85 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் ஸ்ரீ பாலமுருகன் அலங்கரிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளின் 85 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு தரிசனமும் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளை தரிசித்து அவரது 85ஆவது ஜெயந்தி விழாவில் அவரிடம் ஆசி பெற்றனர். அதேபோன்று ஸ்ரீ பாலமுருகனையும் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரத்தினகிரி கோயில் நிர்வாகம் செய்திருந்தது. தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment