கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அரசு பள்ளி கூட சமையலரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ற சத்துணவு திட்ட மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் காலை சத்துணவு திட்டத்தின் புவனகிரி வட்டார மேற்பார்வையாளர் இரண்டு நாட்களுக்கு முன் மிராளூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உணவு பொருட்களை ஆய்வு செய்தார். அப்போது, சேமியா பாக்கெட் குறைந்தது. இதுதொடர்பாக சமையலரான 40 வயதாகும் சவுந்தர்யாவிற்கு மெமோ கொடுக்கப்பட்டது. அதன்மீது, நடவடிக்கை எடுக்காமல் இருக்க புவனகிரி வட்டார அரசு பள்ளிக்கூடங்களில் காலை சத்துணவு வட்டார மேற்பார்வையாளரான செந்தமிழ்செல்வி ரூ.2,000 லஞ்சம் கேட்டிருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சமையலாளர் சவுந்தர்யா, இது குறித்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சத்யராஜிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசாரின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.2 ஆயிரம் விதம் 500 ரூபாய் 4 நோட்டுக்களை சமையல்காரரான சவுந்தர்யாவிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட பெண் அதிகாரியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி நேற்று, செந்தமிழ்செல்வியை மிராளூருக்கு வரவழைத்து பணத்தை கொடுத்தார். ரசாயன பொடி தடவப்பட்ட லஞ்சத்தை காலை உணவுத் திட்ட வட்டார மேற்பார்வையாளர் செந்தமிழ்ச்செல்வி பெற்றுக்கொண்ட போது,
அப்போது, அங்கு பதுங்கியிருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான போலீசார், செந்தமிழ்செல்வியை கையும், களவுமாக பிடித்து விசாரித்து பிறகு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் கடலூர் சிறைச்சாலையில் கைது செய்யப்பட்ட செந்தமிழ்செல்வியை அடைத்தனர்.
No comments:
Post a Comment