Tuesday, 31 December 2024

அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து.. ஏட்டு சஸ்பெண்ட்

சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக் களைப்பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில், வேலூர் மாவட்டம், வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அன்பரசன். இவர் தனது பேஸ்புக் முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல்துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து, ஏட்டு அன்பரசனை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

பொறுப்பு சார்பதிவாளராக இருந்தார். பணி நீக்கம் செய்யப்பட்ட சிவக்குமார் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப் பதிவு: அரசியல் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்களா?

வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனிநபர்களுக்கு முறைகேடாக 106 ஏக்கர் அரசு நிலம் மோசடியாக பதிவு செய்த சார் பதிவாளர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் அதிகளவில் வருவாய் கிடைக்கும் துறையில் ஒன்றாக பத்திரப்பதிவு துறை உள்ளது. இந்த துறையில் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளதாக என தணிக்கை துறையினர் ஆய்வு செய்து, வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது, பல சார் பதிவாளர் அலுவலகங்களில் போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து, அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் தணிக்கை துறையினர் நடத்திய ஆய்வின் போது, போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்ததும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்து கொடுத்தாக அப்போதை சார் பதிவாளர்(பொறுப்பு) சிவக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த அறிக்கையை தமிழ்நாடு பதிவுத்துறை ஐஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து, ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ்., உத்தரவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரசு நிலத்தை தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர் சிவக்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அரசுக்கு சொந்தமான 105.82 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்து, இதற்கு லஞ்சமாக பல லட்சம் கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், ‘காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தாண்டு ஜூன் 1ம் தேதி வரை சிவக்குமார் சார் பதிவாளராக பொறுப்பில் இருந்தார். அப்போது, போலியான ஆவணங்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு செய்து கொடுத்துள்ளார். பின்னர், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை 8.85 ஏக்கர், 0.24 ஏக்கர், 0.76 ஏக்கர், 6.01 ஏக்கர், 0.36 ஏக்கர், 5.51 ஏக்கர், 4.55 ஏக்கர், 2 ஏக்கர், 24.37 ஏக்கர், 32.49 ஏக்கர், 0.70 ஏக்கர், 2.90 ஏக்கர், 3.76 ஏக்கர், 12.41 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என மொத்தம் 105.82 ஏக்கர் நிலங்களை 14 பத்திரங்கள் பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை தொடங்கியுள்ளோம். இந்த முறைகேட்டில் அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்று தெரியப்படுத்தினார்.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பில் இருந்த சிவக்குமார், 105.82 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் 14 பேருக்கு தான செட்டில்மென்ட் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்காக அந்த நபரிடம் சிவகுமார், குறிப்பிட்ட தொகை வாங்கியுள்ளார். 105.82 ஏக்கர் அரசு நிலத்தை பதிவு செய்து தொடர்பாக, பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் அதில் இணைக்கப்பட்டிருந்த ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே. இரா. சுப்புலட்சுமி, ஐஏஎஸ்., அவர்களிடம் அறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு புறம்போக்கு நிலத்தை மீண்டும் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவக்குமார் பதிவு செய்து கொடுத்த நிலத்தின் மதிப்பு சுமார் 30 கோடியாகும். விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் அல்லது சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாகவும், முறைகேடாகவும் சேர்த்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 30 December 2024

வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் ரூ. 2 கோடி மதிப்பில் 49 குழந்தை இல்லா தம்பதிகளுக்கு கருத்தரிப்பு சிகிச்சை இலவசமாக அளிக்கும் திட்டம் தொடக்கம்!

வேலூர் ஸ்ரீபுரத்திலுள்ள நாராயணி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள திட்டம் - 49 குழந்தையில்லா தம்பதிகளுக்கு கருத்தரிப்பு சிகிச்சை இலவசமாக அளிக்கும் திட்டத்தை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், அரியூரிலுள்ள ஸ்ரீநாராயணி தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மாவின் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சக்தியம்மாவின் 49 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு 49 குழந்தையில்லா தம்பதிகளுக்கு  கருத்தரிப்பு சிகிச்சை ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தை இலவசமாக அளிக்க அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், துவங்கி வைத்தார் இதில் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் இதில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மு.பாபு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இணியன், துணை கண்காணிப்பாளர் டாக்டர் சக்திவேல், இணை இயக்குனர்கள் சீனா ஸ்ரீகாந்த், டிரைன்ஸ் சுகி அகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  குழந்தையின்மைக்கான கருத்தரிப்பு சிகிச்சையை 49 தம்பதிகளுக்கு இந்த மருத்துவமனை இலவசமாக அளிக்க உள்ளது மேலும் 49 மாணவ, மாணவிகளுக்கு நோயாளிகள் பராமரிப்புக்கான செவிலியர் கல்வி திட்டம் துவங்கி பயிற்சி அளித்து கிராமப்புறங்களில் சேவையாற்றும் திட்டத்தை துவங்கியுள்ளோம் மேலும் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைபகுதிகளிலும் சுகாதார முகாம்கள் குழந்தைகள் முழு உடற்பரிசோதனை முதியோர் முழு உடற்பரிசோதனைகள் பெண்கள் முழு உடற்பரிசோதனைகளையும் இலவசமாக இம்மருத்துவமனையின் சார்பில் அளிக்கவுள்ளோம் குறிப்பாக நோயாளிகளை செவிலியர் பராமரிக்கும் திட்டம் கிராமப்புறங்களில் பயனுள்ளதாக அமையும் கேன் சர் ஆராய்ச்சி மையமும் மேலும் ரேடியோலஜி சிகிச்சை அளிக்கும் முறையும் இங்கு துவங்கபடவுள்ளது. காப்பீட்டு திட்டத்தில் செய்யபடும் இருதய அறுவை சிகிச்சை கேன்சர் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகள் இங்கு செய்யபடுகிறது. தமிழக அரசின் உதவி 80 சதவிகிதம்  கிடைப்பதில்  மக்கள் பயன்பெறுகிறார்கள் ஜமுனாமரத்தூர் மலைகிராமத்தில் நாராயணி மருத்துவமனை ஒன்று மலைகிராமத்தில் அமைத்து மலைவாழ் மக்கள் சிகிச்சை பெறும் வசதியையும் செய்யவுள்ளோம் என கூறினார்.

தமிழ்நாட்டில், மாணவிகளுக்கு மாதம் ரூ.1000.. புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தினை அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் பெறும் வகையில் விரிவாக்கம் செய்தார். அதன்படி இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியருக்கும் ரூ.1000 வழங்கப்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள்.

பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். அரசுப் பள்ளிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி. தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறார்கள்.

இத்திட்டங்களுள் புதுமைப் பெண் திட்டம் 05.9.2022 அன்று வடசென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

இத்திட்டம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேரஇயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக, மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

புதுமைப் பெண்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, திருவள்ளுவர் மாவட்டம், பட்டாபிராமிலுள்ள இந்து கல்லூரியில் 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத் திட்டக்குழு நடத்திய ஆய்வில், கடந்த 05.9.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நாளது வரையில், 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியர்க்கும் பயன் தருகிறது புதுமைப் பெண் திட்டம். புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் 1,000 வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடியில் 30.12.2024 திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்கள். இதன் பயனாக, தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் மாதம் 1,000 ரூபாய் பெற்றுப் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






மாமல்லபுரத்தில் வசிக்கும் நரிக்குறவர்களின் கனவு நிறைவானதா? 3 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வர் அளித்த வாக்குறுதி நிறைவேறியதா?

தமிழ்நாடு முதல்வரையும் நரிக்குறவர் மக்களையும் அதிகாரிகள் ஏமாற்றுகிறார்களா?

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆன போது, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

மாமல்லபுரம் ஸ்ரீதலசயனப்பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட அமர்ந்த நரிக்குறவ பெண்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 'அரசாங்க கோவில்ல ஒன்னா உட்கார்ந்து சாப்பிடக் கூடாதா?' என அவர்கள் பேசும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அரசின் மீதான விமர்சனமாக இது பார்க்கப்பட்டதால், நரிக்குறவ பெண் அஸ்வினியின் வீட்டுக்கு அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்தார்.

நரிக்குறவ மக்களின் வீடுகளில் தேநீர் அருந்தியதோடு, 283 பேருக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டு மனைப் பட்டா, சாதி சான்றிதழ்களை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

வீடில்லாத மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தர வேண்டும்' என அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ''போதிய அளவு வீடுகள் கட்டித்தரப்படவில்லை, அவ்வாறு கட்டப்பட்ட சில வீடுகளும் கதவுகள் இல்லாமல், மழை வந்தால் நீர் கசியும் கூரையுடன் பெயரளவுக்கு கட்டப்பட்டுள்ளது'' என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மாமல்லபுரம் நரிக்குறவர் மக்களின் வாழ்நிலை எப்படி உள்ளது?
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது பூஞ்சேரி கிராமம். இங்கு 80க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களும் இருபதுக்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்களும் வசித்து வருகின்றன.

சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் ஊசி, பாசிகளை விற்பது இவர்களின் முழுநேர தொழிலாக உள்ளது. 2021ஆம் ஆண்டு ஸ்டாலின் நேரில் வருகை தந்து வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், வீடில்லாத நரிக்குறவர் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகளைக் கட்டித் தருவதாகவும் அரசுத் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இருளர்கள் குடியிருப்பு பகுதியில் அரசு கட்டிக் கொடுத்த வீட்டின் முன்பு அமர்ந்திருந்த கன்னியம்மாள், தமிழ்நாடு சி.எம் வந்து பார்த்துட்டுப் போயிட்டார். எங்க இருளர் மக்கள் அஞ்சு பேருக்கு மட்டும் வீடுகளைக் கட்டிக் கொடுத்தாங்க. ஜன்னல் கூட வச்சாங்க. ஆனா கதவு வைக்கல. அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க என்று மனம் நொந்தபடி கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், "வீட்டுக்குள்ள தரை, சுவருன்னு எங்கயும் சிமெண்ட் பூச்சு பூசலை. வீட்டுக்கு மேல கான்கிரீட் போட்டாங்க. ஆனா மழை வந்தா ஒழுகுது. வீடு கட்டிக் கொடுத்து முழுசா இரண்டு வருஷம் கூட ஆகலை. மழை வந்தா வேற யாராவது வீட்டுல தான் போய் தங்கறோம்.

இதே கருத்தை தெரிவித்த வசந்தி என்ற பெண், "கான்கிரீட் சரியா போடாததால சுவத்துல தண்ணி ஊறுது. வீட்டுக்குள்ள உட்காரக்கூட முடியாது.

"முதலமைச்சர் வரும்போது எல்லா அதிகாரிகளும் இறங்கி வேலை பார்த்தாங்க. அதுக்குப் பிறகு யாரும் கண்டுக்கல..

முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி இப்பகுதியில் சில வீடுகளில் மட்டும் கழிப்பறையை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் கட்டிக் கொடுத்துள்ளது.

ஆனால், அந்தக் கழிப்பறைகள் எல்லாம் இடிந்தும் கதவுகள் உடைந்தும் சேதம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்.

எங்க மக்களுக்கு 22 வீடுகளைக் கட்டித் தரணும்னு கேட்டோம். ஆனா, 5 வீடுகளைத் தான் கட்டிக் கொடுத்திருக்காங்க. அந்த வீடுகளும் சரியில்லை. பழைய வீடுகள் எல்லாம் இடியிற நிலையில இருக்கு. அதையும் அதிகாரிகள் கண்டுக்கலை..

வீட்டுக்குக் கதவு இல்லாததால் பொம்பளைங்க துணி மாத்தக் கூட கஷ்டப்படறாங்க. கதவுக்குப் பதிலாக துணியைப் போட்டு மறைக்கறோம்.

"பாத்ரூம் சரியா கட்டிக் கொடுக்கலை. நிம்மதியா குளிக்க முடியலை. பாத்ரூம் கதவு சேதம் ஆயிருச்சு. யாரும் சரி பண்ணிக் கொடுக்கலை. ஆனா, எல்லாம் பண்ணிக் கொடுத்துட்டோம்னு சொல்றாங்க" என்கிறார் சுலோச்சனா.

இந்தப் பகுதியில் போதிய குடிநீர் மற்றும் சாக்கடைக் கால்வாய் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதைப் பார்க்க முடிந்தது.

சுற்றிலும் காட்டுப்பகுதியாக உள்ளதால கொசுத்தொல்லை அதிகம். குடிதண்ணீர் சரியில்லை. சேறு, சாக்கடை கலந்த நீர் தான் வருது. நல்ல தண்ணீர் கிடைத்தால் போதும்" என்கிறார் செல்வி..

நரிக்குறவர் மக்களுக்கு அரசு வீடுகளைக் கட்டிக் கொடுக்கலை. முதலமைச்சர் ஸ்டாலின் பட்டா, சாதி சான்று, ஆதார் கார்டு, ரேஷன் பொருள் ஸ்மார்ட் அட்டை எல்லாம் கொடுத்தார். ஆனா வீடு மட்டும் தரலை" என்கிறார் நரிக்குறவர் தெருவில் வசிக்கும் விஜயலட்சுமி.

ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வசிப்பதாக கூறிய விஜயலட்சுமி, "இருளர் மக்களுக்கு பாதரூம் கட்டிக் கொடுத்தாங்க. ஆனால் நரிக்குறவ மக்களில் பாதிப்பேருக்கு மேல பாத்ரூம் கட்டிக் கொடுக்கலை. அதுக்காக பள்ளத்தை மட்டும் தோண்டிட்டு விட்டுட்டுப் போயிட்டாங்க..  

வீட்டு மனைப்பட்டா தொடர்பாகவும் கடந்த 2021-ஆம் ஆண்டு பிரச்னை எழுந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களில் 11 பேருக்கு ஒன்றரை சென்ட் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. உள்ளூர் மக்களின் உரிமைக் கோரல்கள் காரணமாக அவற்றைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து நேரில் ஆய்வு நடத்திய அப்போதைய மாவட்ட ஆட்சியாளர் ராகுல் நாத், ஐஏஎஸ்., நரிக்குறவ மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி உத்தரவிட்டார். ஆனால் அந்த இடங்களிலும் அரசு சார்பில் வீடுகளைக் கட்டித் தரும் வேலைகள் தொடங்கப்படவில்லை.

வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நரிக்குறவர் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வீடுகளும் இப்ப சரியா இல்லை. ரொம்பவே சேதம் ஆயிருச்சு. இடம் இருக்கறவங்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்தால் பரவாயில்லை. வீடு கட்டிக் கொடுக்கறதா அதிகாரிகள் எழுதிட்டுப் போனாங்க. யாரும் வரவே இல்லை" என்கிறார், நரிக்குறவர் சமூகத்தின் ஊர் தலைவரான கன்னியப்பன்.

தமிழ்நாடு சி.எம் வந்தப்ப வேகம் வேகமாக வேலைகள் நடந்துச்சு. தண்ணீர் குழாய், ரோடு எல்லாம் கொண்டு வந்தாங்க. அதன்பிறகு எந்த வசதியும் வரலை. நாங்கள் போய் அதிகாரிகளிடம் பேசினால் மரியாதை கிடைக்கறதில்லை. எங்க மக்களும் கூட்டமா வந்து கேட்க மாட்டேங்கறாங்க. கழிப்பிட வசதி கூட இல்லை. வெளியிடங்களை தான் பயன்படுத்தறோம். பெண்களோட நிலைமை இன்னும் கஷ்டம்" என்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தங்கள் கிராமத்துக்கு வந்தபோது தங்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டதாக நரிக்குறவர் மற்றும் இருளர் மக்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், அவர்களுக்குப் போதுமான வசதிகள் எதுவும் வந்து சேரவில்லை. எனவே நரிக்குறவ மக்களின் கனவு நினைவாகுமா?.. நமக்கு நல்ல காலம் நல்லது நடந்து விடாதா என எதிர்நோக்கி காத்திருக்கும் நரிக்குறவ மக்கள்! 











நாட்டில் தனியாக வாழும் பெண்களுக்கு வீடு கிடைப்பது சவாலாக இருப்பது ஏன்?

சமுதாயத்தில் தனியாக வாழ்ந்து வரும் பெண்களும், கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் பெண்களும் சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு வீடு தேடுவது அத்தனை எளிதாக இருப்பதில்லை.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்புகள், கல்வி போன்ற அம்சங்கள் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பெண்களை சென்னைக்கு வர செய்கிறது.

சுதந்திரம் மற்றும் ப்ரைவசி போன்ற காரணங்கள் கருதி பல இளம் பெண்கள் சென்னையில் விடுதிகளுக்கு பதிலாக வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கும் போக்கும் சமீபத்திய காலங்களில் அதிகரித்து வருகிறது.

ஆனால் அவ்வாறு வீடு தேடி, அதை கண்டடைந்து அங்கே தங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. திருமணமாகாத இளம் பெண்கள் மட்டுமின்றி, பல்வேறு காரணங்களுக்காக திருமண உறவில் இருந்து வெளியேறும் பெண்களும் பெருநகரங்களில் வீடு தேடுவதில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

அவர்களின் ஆடை சுதந்திரம், வேலை பார்க்கும் நேரம், வீட்டுக்கு திரும்பும் நேரம், அவர்களுடன் பழகும் நபர்கள் என்று பல்வேறு சோதனைகளுக்கு பிறகே வீடுகளை தர முன்வருகின்றனர் சில வீட்டு உரிமையாளர்கள்.

தங்கள் வீட்டில் வாடகைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு, வீட்டிற்கான நற்பெயர் போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகிறது என்று கூறுகின்றனர் வீட்டின் உரிமையாளர்கள்.

ஒரு மோசமான திருமண உறவில் இருந்து நான் வெளியேறினேன். பதின்ம வயதை நெருங்கும் மகனோடு நான் வீட்டில் இருந்து வெளியேறிய போது எனக்கு வேலை என ஒன்றும் இல்லை. முதலில் வீடு தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு வேலை. எங்கெல்லாம் நான் வீடு தேடச் செல்கின்றேனோ, அங்கெல்லாம் கணவர் பற்றியே அதிக கேள்விகள் வந்தது," என்று கூறுகிறார் 36 வயதுடைய பின் ஒருவர்.

ஆரம்பத்தில் நான் என்னுடைய கணவனோடு இல்லை என்று கூறிய போது, பிரச்னை என்று வந்தால் வீட்டிற்கு வந்து சண்டை போடுவாரா? மகனை பார்க்க வந்தால் எத்தனை நாட்கள் தங்குவார்? உங்களைப் பார்க்க ஆண் நண்பர்கள் வருவார்களா? என்று கேட்டார்கள்.

தற்போது ஒரு வீட்டில் வசித்து வருகிறேன். என் கணவர் வெளிநாட்டில் பணி புரிகிறார் என்று பொய் கூறி நான் இங்கே வந்து வாழும் சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே குடும்ப வன்முறைக்கு ஆளாகி வெளியே வரும் என்னைப் போன்ற பெண்களுக்கு இந்த சமூகம் ஆதரவாக இல்லை. அதனால் தான் பொய் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது," என்கிறார் அனு.

சென்னையைப் பொறுத்தமட்டில் கணவரை இழந்த பெண்களுக்கு இருக்கும் ஆதரவு கணவரை பிரிந்து வாழும் பெண்களுக்கு கிடைப்பதில்லை'' என்று கூறுகிறார் சென்னையில் வீடு வாடகை, விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஒன்றில் இடைத்தரகராக பணியாற்றி வரும் இளம்பெண் கூறுகிறார்.

'மக்கள் தனி நபர்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதில்லை. அதனால் தான் பெண்களின் தனிப்பட்ட முடிவுகளிலும் வாழ்விலும் பலரும் தலையிடும் சூழல் ஏற்படுகிறது.

அதிலும் இளம் பெண்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

படிப்பிற்காக சென்னைக்கு நாங்கள் வரும் போது எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு வழி விடுதிதான். குளிக்க, கழிவறையை பயன்படுத்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். விடுதிகளில் 'ப்ரைவசி' என்பதற்கு இடமே இல்லை. அதனால் வேலை கிடைத்த போது, ஒரு வீட்டில், ஒரு சிறிய அறையில் வாழலாம் என்ற முடிவை எடுக்க நேரிடுகிறது.

வீட்டு உரிமையாளர்கள் கேட்கும் முதல் கேள்வியே ஆண் நண்பர்கள் யாரேனும் வீட்டுக்கு வருவார்களா என்பதுதான். ஒரு 20 வயதை தாண்டிய பெண்ணுக்கு அனைத்து தரப்பிலும் நண்பர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு 'சோஷியல் லைஃப்' என்ற ஒன்று இருக்கிறது என்பதையே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

ஒரு மகிழ்ச்சியான மாலையில் உணவை பகிர்ந்து கொண்டு நண்பர்களுடன் என்னுடைய வீட்டில் ஒரு படம் பார்ப்பது எனக்கு பிடித்த ஒன்றாக இருக்கும். ஆனால், தனியாக வாழும் பெண்ணுக்கு எந்தவிதமான ஆசைகளும் இருக்கக் கூடாது என்றுதான் எதிர்பார்க்கின்றனர்.

தனியாக வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு ஒரு ஆண் அல்லது ஆண் நண்பர்கள் வந்தாலே அவர்களின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. குடும்பங்களாக இங்கே வந்து வாழ்பவர்கள் இத்தனை கேள்வியை எதிர்கொள்வதில்லை..

சில வீட்டு தரகர்களும் சரி, ஒரு பெண் தனியாக இருக்கிறார் அவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான வீடுகளை காட்ட வேண்டும் என்று காட்டுவதில்லை,

அதிலும், அதிகம் வாடகை தரும் பெண்கள்

தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் கூறுகையில்,

காரணமே இல்லாமல் வீட்டை காலி செய்யுங்கள் என்று வீட்டின் உரிமையாளர்கள் கூறுவதை பல பெண்கள் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.

பெருங்குடியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வசித்து வந்தேன். அந்த ஃபாள்ட்டில் என்னுடன் தங்கியிருந்த பெண்ணுக்கு வேலை மாற்றலாகி அவர் வேறொரு நகரத்துக்கு செல்ல நேரிட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் எனக்கு போன் செய்து நான் வீட்டு வாடகையை 10% உயர்த்தப் போகிறேன். நீங்களும் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி வீட்டை காலி செய்ய கூறிவிட்டார்," என்று நினைவு கூர்ந்தார் மற்றொரு இளம் பெண்.

வீடு தேடுவது சவாலானதாக இருக்கிறது. இரண்டாவது, தனி நபராக பொருட்களை எல்லாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது பெரும் தலைவலி. பிறகு அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு கிடைப்பதும் சவாலானது என்பதால் மறுப்பு தெரிவிக்காமல் நாங்கள் அவர்கள் கேட்கும் பணத்தை தருகிறோம்.

மற்ற தென்னிந்திய நகரங்களில், பெங்களூருவில் தனியாக வசிக்கும் பெண்களுக்கு ஓரளவு சவால்கள் ஏதும் இல்லாமல் வீடுகள் கிடைக்கின்றன.

பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர்.  இதுவரை நான் வீடுகள் பார்த்த போது எந்த சவால்களையும் சந்திக்கவில்லை. மேலும் இங்கே தனியாக இருக்கும் பெண்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவது பெண்களாகதான் இருக்கின்றனர்.

பெற்றோர்கள் உட்பட யாரும் வீட்டுக்கு வரக் கூடாது என்ற தடை ஒரு வீட்டில் இருந்தது. மற்றொரு வீட்டில், ஆண் நண்பர்கள் வருகைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டிற்கு யார் யார் வருகிறார்கள் என்பதை நோட்டமிடும் வகையில் பாதுகாவலர் நியமிக்கப்பட்டிருந்தார்," என்று பவானி என்ற இளம்பெண் கூறினார்.

டெல்லி மற்றும் பஞ்சாபின் முக்கிய நகரங்களில் பெண்கள் இத்தனை சவால்களை எதிர்கொள்வதில்லை என்று கூறுகின்றனர் அங்கே வசிக்கும் பெண்கள்.

தனியாக வாழும் பெண்களுக்கும், கணவரை பிரிந்து வாழும் பெண்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வீடுகளை தேடித் தருவதாக கூறும் தனியார், நிறுவனம் ஒன்றில் இடைத்தரகராக பணியாற்றி வரும் இளம்பெண் கூறும்போது எந்தெந்த காரணங்களை முன்வைத்து வீடுகள் மறுக்கப்படுகிறது என்பதை பட்டியலிட்டார்.

உங்களின் மதம், உங்களின் உணவு, நீங்கள் உடுத்தும் ஆடை என அனைத்தும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. உயர்சாதியினர் வசிக்கும் சில பகுதிகளில், அசைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு வீடுகள் மறுக்கப்படுகிறது. என்று தெரிவித்தார்.

ஐ.டி. துறையில் பெண்கள் வேலைக்கு செல்வதால் அவர்களின் பணி நேரம் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும். இரவு 11 மணிக்கு மேல் பெண்கள் அவர்களின் வசிப்பிடத்திற்கு திரும்புவார்கள் என்று கூறினால் அவர்களுக்கு வீடு மறுக்கப்பட்டு விடுகிறது.

சென்னையில் இரண்டாவது முறையாக வீடு தேட ஆரம்பித்தேன். தனியார் நிறுவனத்தின் இணைய வழியாக வீடு ஒன்றை கண்டுபிடித்து வீட்டின் உரிமையாளர்களுக்கு போன் செய்த போது, அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, 'நீங்க என்ன ஆளுங்க,' என்பதுதான். நீண்ட மௌனத்திற்கு பிறகு, நீங்கள் 'நான்-பிராமிணா?' என்றார்கள். ஆம் என்றவுடன் வேறேதும் கேட்காமல் அவர்கள் வீடில்லை என்று கூறிவிட்டனர்.

இதில் ஏற்படும் சிக்கல்களை அறிந்து கொள்ள முயற்சி செய்த போது, தனியாக வசிக்கும் பெண்களுக்கு சென்னையில் இரண்டு படுக்கைகளைக் கொண்ட வீடுகளின் வாடகை ரூ.20 ஆயிரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது என்று தெரியவந்தது.

ரூ. 20 ஆயிரம் வாடகைக்கு காட்டப்பட்ட வீடுகளில் பெரும்பாலான வீடுகள் சுற்றுச்சுவர்கள் ஏதுமின்றி, சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதுமற்ற, மழைக்கு வெள்ளம் சூழும் பகுதிகளிலே இருந்தது. பாதுகாப்பான சூழல் என்பதை கருத்தில் கொண்டால் ரூ. 30 ஆயிரத்திற்கு தான் வீடுகள் கிடைக்கின்றன.

இந்த நகரத்தில் ஐ.டி. பணியாளர்கள் அதிகம் என்பதால் அவர்களை மையப்படுத்தியே இங்கு வீட்டின் வாடகை நிர்ணயிக்கப்படுவதாக நான் உணருகிறேன்," என்கிறார் தன்ஞ பெயரை வெளியே கூறிக் கொள்ளாத பெண் ஒருவர்.

என்னுடைய முதல் வேலையில் என்னுடைய சம்பளம் ரூ.17 ஆயிரம் மட்டுமே. நானும் என் மகனும் தங்க, ஒரு படுக்கையறையை கொண்ட வீட்டின் வாடகை மட்டும் ரூ. 13 ஆயிரம். பராமரிப்புக்கு ஆகும் செலவு ஆயிரத்தை தாண்டும். ஆனால் சி.சி.டி.வி, பாதுகாவலர்கள், முறையாக பராமரிக்கப்பட்ட இடத்திற்கு நான் முன்னுரிமை அளித்தேன். அதற்காக நிறைய செலவும் செய்ய நேரிட்டது.

கல்வி, திருமணத்தை திட்டமிடுதல், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு போன்றவை காரணமாக தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கையானது 100 மில்லியனை (10 கோடி) எட்டும் என்று தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு தெரிவிக்கிறது

பெண்களுக்கு வீடு என்பது எதைப் பற்றியும் கவலை ஏதுமின்றி நிம்மதியாக இருக்க தேவைப்படும் ஒன்று. பாதுகாப்பாகவும், எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இல்லாமல் இருக்க வேண்டும். அது போன்ற உணர்வு சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் பெண்களுக்கும் தேவை," என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளர் ஒருவர்.

"கல்வி, தொழில்நுட்பம், வர்த்தகம் போன்ற அம்சங்களின் மையமாக சென்னை திகழ்கிறது. இருந்தாலும் கூட பெண்களின் சுதந்திரம் என்று வரும் போது சென்னை மேம்பட்டதாக தெரிகிறதா என்பது கேள்விக்குறிதான்?.

இந்தியாவைப் பொறுத்தவரை 20 லட்சம் பெண்கள் நேரடியாக ஐ.டி. துறையில் பணியாற்றுகின்றனர் என்கிறது எக்கனாமிக் டைம்ஸில் வெளியான செய்தி. சென்னையிலும் ஐ.டி.துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

மும்பையிலுள்ள பொது இடங்களை பெண்கள் அணுகுவதிலுள்ள பிரச்னைகளை ஆராயும் வொய் லாய்ட்டர் (Why Loiter) என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரான சமீரா கான், இந்த பிரச்னையை சென்னையில் வசிக்கும் பெண்கள் மட்டுமே சந்திக்கின்றனர் என்று கூறிவிட இயலாது. இந்தியாவின் மும்பை போன்ற பெருநகரங்களிலும் இத்தகைய சவால்கள் இருக்கின்றன.

குடித்தாலோ, அவருடைய வீட்டில் அவர் 'பார்ட்டி' நடத்தினாலோ, ஆண் நண்பர்கள் வந்தாலோ, வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அவரை மோசமான பெண்ணாக இந்த சமூகம் பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை குடும்ப அமைப்பில் வாழும் பெண்கள் மட்டுமே மதிப்பிற்குரியவர்களாக கருதும் போக்கு நிலவி வருகிறது. அதனால்தான் அந்த குடும்ப அமைப்பில் நிலவும் வன்முறைகள், பெண்களை மோசமாக நடத்தும் போக்குகளை இந்த சமூகம் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.









பரீட்சையில் பாஸ் ஆகாமலே பேரூராட்சி செயல் அலுவலரான பலே கில்லாடி - சுந்தர்ராஜ்!.. ஒரே இடத்தில் பல வருடங்களாக பணி?

சமூக ஆர்வலர் கூறுகிறார்... அரசுப் பணியில் உள்ளவர்கள் ஓரிடத்தில் மூன்று ஆண்டுகாலம் தான் பணியாற்ற வேண்டும். பின்பு வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவர் என்ற விதியை காற்றில் பறக்க விட்டு, கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திலுள்ள பள்ளபாளையம் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக சுந்தர்ராஜ் என்பவர் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் பெயர் அளவிற்கு தான் பதவிக்கும் இடைப்பட்ட காலங்களில் வேறு ஊருக்கு ஒப்புக்கு பதவி மாறுதல் ஆகிவிட்டு மீண்டும் பள்ளபாளையம் பேரூராட்சிக்கு திரும்ப செயல் அலுவலராக சுந்தர்ராஜ் வந்துவிடுகிறார். இது ஏன்? இவரை இதே இடத்தில் மேலதிகாரிகள் பணி நியமனம் செய்வதில் உள்நோக்கம் உள்ளதா? அதேபோல் செயல் அலுவலருக்கான பரீட்சையில் தேர்ச்சியாகாமலே இவர் பணியில் உள்ளதாகவும் சந்தேகம் உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு வீர இந்து சேவா அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணகுமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் மனு கொடுத்துள்ளார். சட்டப்படி நடவடிக்கை பாயுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

பேரணாம்பட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 48வது நாளாக ஏழைகளுக்கு விலையில்லா விருந்தகம் வழங்கல்

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகர வெற்றி கழகம் சார்பில் 48வது நாளாக ஏழைகளுக்கு விலையில்லா விருந்தகம் வழங்கப்பட்டது . இந்த  நிகழ்ச்சிக்கு டாக்டர் மா.கருணா சுனில் குமார். தலைமை தாங்கினார். பி. குமரன், ஆர். பார்த்திபன், ஆர். சதீஷ்,  எஸ்‌. வளர்மதி, ஜி. கௌசல்யா வெங்கடேசன், பாஸ்கரன்.,எம். சதீஷ்குமார், ஆர். ஆனந்தன், ஜி. கஜேந்திரன், குபேந்திரன், ஆர். வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் விலையில்லா விருந்தகம் வழங்கப்பட்டது.

வாராந்திர குறைதீர்க்கும் மனுநீதி நாள் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் முகாம் நடந்தது!

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலெட்சுமி, ஐஏஎஸ்., மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது
தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை அலுவலர் சரவணன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியாளர் மலர் தூவி மரியாதை செய்து, வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சி..!!

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட, வேலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வெள்ளி விழா மாவட்ட ஆட்சியாளர் வே.இரா.சுப்புலட்சுமி, ஐஏஎஸ்., தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவானது முக்கூடல் சூழும் குமரி முனையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 183 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி, ஐஏஎஸ்., தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தன், துணை மேயர் சுனில்குமார், மண்டல குழுத் தலைவர் வீனஸ் நரேந்திரன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

வேலூர் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 புதுமைப் பெண் திட்டம்!

வேலூர் மாவட்டம், ஓட்டேரி, முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (30.12.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்த நிகழ்வை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலெட்சுமி, ஐஏஎஸ்., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக நேரலை செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், வேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு விநியோகித்த காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசார்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காட்பாடி பகுதியில் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் அபராத விவரம் குறித்த துண்டு பிரசுரங்களையும், சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விழிப்புணர்வையும் விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இதில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சீட்டு பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குதல், மிக மிக வேகமாக வாகனங்களை இயக்குதல், மதுபோதையில் வாகனம் இயக்குதல், ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் இயக்குதல், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவைகளை விதிமுறைகளாக கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்துதான் ஓட்ட வேண்டும். 4 சக்கர வாகனத்தை ஓட்டும்போது சீட்டுகள் அணிந்து ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டாம். மது போதையில் வாகனத்தை ஓட்ட வேண்டாம். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வாகனம் இயக்கக் கூடாது. அதிவேகமாக வாகனம் இயக்கக் கூடாது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் இயக்க வேண்டும். சிறுவர்களை வாகனம்  இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்ற 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் "யார் அந்த சார்?’ வேலூரில் அதிமுகவினர் கோஷங்களை முழக்கங்களையும் எழுப்பினர். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் 'யார் அந்த சார்?' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 'மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த போது, ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும்' அந்த மாணவி புகாரில் தெரிவித்து உள்ளார். 

அந்த சார் யார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் காவல் துறை உயர் அதிகாரி, பாலியல் வன்கொடுமை செய்தது ஞானசேகரன் மட்டும் தான் என்கிறார். 

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் ஆளுங்கட்சியினர் சம்மந்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்தவர்,

ஞானசேகரன் தி.மு.க வை சேர்ந்தவராக இருப்பதாக தகவல் வருவதாகவும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டவுடன், அவர் பெயர் இடம்பெற்ற பேனர்கள், நோட்டீஸ்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்க்கும் போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களை தப்பிக்க வைக்க இந்த காவல்துறை செயல்படுகிறதோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்து இருந்தார். 

அதிமுக சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் 

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பொழுது, 

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் காவல் துறை வாகனம் மூலம் கைது செய்ய முயன்ற பொழுது சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற அதிமுகவினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வசூல் வேட்டையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஹேமந்த் குமார்.. இவரை பணியிடம் மாற்றம் செய்வார்களா? மேலதிகாரிகள்!

சென்னை மாநகர காவலாக இருந்தபோது பீர்க்கங்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும்  தற்போது தாம்பரம் மாநகரம் என்று பிரிக்கப்பட்ட பிறகு 
மறைமலைநகர் காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக ஹேமத்குமார் பணியாற்றி வருகிறார். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சுப் பணியாளர்களுக்கும் பல லட்சங்கள் கொடுத்து தற்போது கிளாம்பாக்ககம் பகுதியின் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். மேலும் 
நல்லம்பாக்கத்திலுள்ள 200 க்கும் மேற்பட்ட கல் குவாரிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள், ஹோட்டல்கள்,  தங்கும் விடுதிகள், பார்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் மாமூல் வசூல் செய்வதற்கு அவருக்கு கீழ் செயல்படும் போக்குவரத்து காவலர்களை பயன்படுத்தி,
வசூல் செய்து, லஞ்சத் தொகையை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார். இதன் காரணமாக அவர் மாதம் தோறும் பல லட்சங்கள்  வசூலித்து வருகிறார். உயர் அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய பணம் குறித்த நேரத்திற்குள் கொடுத்து விடுவதால், இவரை தொடர்ந்து இப்பணியில் அமர்த்தியுள்ளார்கள். வேறு எந்த ஆய்வாளர்களுக்கும் அந்த இடத்தை விட்டுத் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போக்குவரத்தை சீரமைக்க போதிய போலீசார் இல்லை.  இந்நிலையில் மாமூல் வசூலிப்பதில் போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்கு அனுபவம் இல்லாத 50 க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஒத்துழைப்போடு  நியமனம் செய்கின்றார். இதனால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. நேர்மையும், திறமையும் உள்ள பல போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் மேலும் இவரால் பாதிக்கப்பட்ட பழி வாங்கப்பட்ட பல ஆய்வாளர்கள் வெவ்வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் பெற்று சென்று விட்டார்கள்.

வசூல் வேட்டையில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாலும் உரிய பங்கை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கொடுத்து வருவதாலும் இவரை வேறு எங்கும் பணியிடம் மாற்றாமல் உயர் அதிகாரிகள் பார்த்து கொள்கிறார்கள். 

சுழற்சி முறையில் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யாமல் இவருக்கு நிறைய சலுகைகள் உயர் அதிகாரிகள் செய்து வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமையன்று இவருக்கு இரவு பணி பிரத்தியமாக நியமிக்கிறார்கள், மிக முக்கிய நபர்கள் வருகையின் பொழுது சுழற்சி முறையில் அட்வான்ஸ் பைலட் பணி மற்ற ஆய்வாளர்களுக்கு தருகிறார்கள். இவர் ஒரு முறை கூட அட்வான்ஸ் பைலட் பணி இதுவரை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப்படை காவலர்களை போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணிக்கு ஈடுபடுத்தி விட்டு போக்குவரத்து காவலர்களை வசூல் வேட்டைக்கு ஈடுபடுத்தி வருகிறார்
ஒரு நாளும் களத்தில் நின்று சாலையில் போக்குவரத்தை சீர்படுத்தி பார்த்ததே இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இவரது வசூல் வேட்டைக்கு காவல்துறை மேல் அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?
நேர்மையும் திறமையும் உள்ள மற்ற ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு வழங்கவார்களா? இல்லை ஒரே போக்குவரத்து பகுதியில் பட்டா போட்டு கொடுப்பார்களா?.. இவரின் மேல் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

ஓசூரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்துஅதிமுகவின் ஆர்ப்பாட்டம்.. முன்னாள் அமைச்சர் உட்பட பலர் கைது!



கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட அதிமுகவினரை குண்டு கட்டகாக தூங்கி கைது செய்த போலிசார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஒசூர்  மின்வாரிய அலுவலக முன்பாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒசூர் நகர போலிசார் அனுமதி மறுத்திருந்தனர்.
 அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அதிமுகவினரை கைது செய்ய 5 பேருந்துகளை முன்கூட்டியே நிறுத்தி வைத்து தயார்நிலையில் இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாலகிருஷ்ணா ரெட்டி:

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் போதை புழக்கம் அதிகரித்துள்ளது. ஸ்காட்லாந்துக்கு இணையான போலிஸ் என அம்மா ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட்ட தமிழக போலிசார்
இன்று, திமுக ஆட்சியின் ஏவல்துறையாக மாறியுள்ளனர்..
ஜனநாயக நாட்டில்  பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து போராட அனுமதி மறுத்திருப்பது கண்டனத்திற்குரியது என பேசினார். அதனைதொடர்ந்து போலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினரை போலிசார் கைது செய்து பேருந்துகளில் அழைத்து சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அவர்களில்
அம்மா பேரவை செயலாளர்
சிட்டி(எ)ஜெகதீசன், ஓசூர் மாநகர
கழக செயலாளர் எஸ்.நாராயணன்,
பகுதி செயலாளர்கள் ராஜு,
அசோக் ரெட்டி, மஞ்சுநாத்,
வாசுதேவன், எம்ஜிஆர் மன்ற
மாவட்ட இணை செயலாளர்கள்
ஜெய பிரகாஷ், ஒன்றிய
செயலாளர்கள் ஹரிஷ் ரெட்டி,
ரவிக்குமார், கிருஷ்ணன், ஜெயபால், பேரூராட்சி செயலாளர் மஞ்சு,ஓசூர் முன்னாள் கவுன்சிலர் நந்தகுமார்,
ரமேஷ், ஓட்டுனர் அணி மாவட்ட
நிர்வாகி பாலுசாமி, ஒன்றிய
துணை செயலாளர் நவீன், வட்டக்
கழக செயலாளர்கள் சீனிவாசன்,
கோபால ராமச்சந்திரன், சுரேஷ்,
சிவலிங்கம், தனபால், மோகன்
ரெட்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள்
ஜெயக்குமார் ரெட்டி, அருண், ஒசூர்
ஒன்றிய குழு உறுப்பினர்
முரளி, அழகப்பன், அம்மா பேரவை
ஒன்றிய நிர்வாகி கோவர்தன்,
ரங்கநாதன், பாசறை மாநகர
செயலாளர் இம்ரான் பாஷா,
பத்மாவதி ஓட்டல் பழனி, அந்திவாடி
மாதேஷ், ஏரித்தெரு முருகேஷ், பொன்முடி,சுதாகர் தவமணி, ஓசூர் மாநகர வட்ட செயலாளர் கா.முகமது அலி, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கின்ற சங்கர், லட்சுமி ஹேமகுமார், தில்ஷித் ரகுமான், சிவராமன், ரஜினி, கலாவதி சந்திரன், சில்பா சிவகுமார், மாவட்டத் துணைச்
செயலாளர் மதன், ஓசூர் ஒன்றிய
குழு தலைவர் சசி வெங்கட்சாமி,
பாசறை மாவட்ட செயலாளர் ராமு,
அண்ணா தொழில் சங்க மாவட்ட, கழக நிர்வாகிகள், ஆதி,மஞ்சு
செயலாளர் சீனிவாசன், ஓட்டுனர்
அணி மாவட்ட செயலாளர்
சென்னை கிருஷ்ணன், இலக்கிய
அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், சாமிநாதன், முபாரக், மாதையன், உள்ளிட்ட இந்நாள், முன்னால் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் என
பலர் உடனிருந்தனர்.

கெத்து’ ஐபிஎஸ் தம்பதிகள் ஒரே நாளில் புரொமோஷன்!


நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர்போன ஐபிஎஸ் தம்பதிகள் வருண்குமார், வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் டி.ஐ.ஜி-களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அருகருகே உள்ள திருச்சி - புதுக்கோட்டை மாவட்டங்களில் எஸ்.பிக்களாக பணியாற்றி வந்த இருவரும் இனி முறையே திருச்சி - திண்டுக்கல் சரக டிஐஜி-களாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியினரால் கடுமையான சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

2011 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளான வருண் குமார் - நந்திதா பாண்டே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். காவல்துறையில் இருவருமே அதிரடி நடவடிக்கைகளுக்கும், நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர் போனவர்கள். இவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் அருகருகே உள்ள மாவட்டங்களில் பதவி உயர்வு கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண்குமார், பல் மருத்துவப் படிப்பு முடித்தவர். 2010 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி, அதில் அகில இந்திய அளவில் 3 ஆம் இடத்தைப் பிடித்தவர். அவர் கேட்டால் சிவில் சர்வீஸின் எந்தப் பிரிவும் கிடைக்கும் என்ற நிலையில், காவல்துறை மீது கொண்ட பற்று காரணமாக ஐ.பி.எஸ் பிரிவை தேர்ந்தெடுத்தார்.

2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வாகி பயிற்சி முடித்து உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதிதீவிரப்படை சென்னையிலும் பணிபுரிந்தார். பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று குடிமைபொருள் நுண்ணறிவு பிரிவு, ராமநாதபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னையில் அலுவலக தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவவில் பணிபுரிந்தார்.

அதைத் தொடர்ந்து, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருச்சி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வந்தார். திருச்சி எஸ்.பியாக அவர் பொறுப்பேற்ற பிறகு, கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் பெருமளவில் குறைந்துள்ளதாக மக்கள் மத்தியிலேயே பேச்சு உள்ளது. இந்த நிலையில் தான் அவர், திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத்தைச் சேர்ந்தவர் வந்திதா பாண்டே. வருண்குமார் பேட்ச் அதிகாரி. அதாவது, 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. 2013 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஏ.எஸ்.பி-யாக பணியில் சேர்ந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ் 2014-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஏ.எஸ்.பி-யாக வந்திதா பாண்டே பணியாற்றிய சமயத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்தச் சிறுமியிடம், உண்மையில் நடந்ததை நடந்தபடியே வாக்குமூலமாக வாங்கினார். தன்னைச் சீரழித்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை அந்தச் சிறுமி பட்டியல் போட அதை சட்டப்படி பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் வந்திதா பாண்டே.

அதன்பிறகு வந்திதா பாண்டே கரூர் எஸ்.பியாக மாற்றப்பட்ட நிலையில், 2016 சட்டசபை தேர்தலின்போது, அரவக்குறிச்சி அருகே கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை மடக்கிப்பிடித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் புள்ளிகளை அலற வைத்தார். அதன்பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் டம்மி பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு வந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான், தற்போது, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் வந்திதா பாண்டே. அவரது நேர்மைக்கும், துணிச்சலுக்கும் கிடைத்த வெகுமதியாகவே இந்த பதவி உயர்வு பார்க்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக வருண் குமார் பணிபுரிந்தபோது, அவதூறு கருத்துகளை பரப்பியதற்காக யூடியூபர் சாட்டை துரைமுருகனை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார். அதன்பிறகு மீண்டும் அதே யூடியூபர் அவதூறு கருத்துக்காக கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, எஸ்.பி வருண்குமாரை நேரடியாகவே தாக்கிப் பேசினார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதையடுத்து, சீமானுக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பினார் வருண் குமார். இதன் காரணமாக நாதக - வருண் குமார் இடையே மோதல் வலுவடைந்தது. வருண் குமார், அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பியுமான வந்திதா பாண்டே, குழந்தைகள் என சரமாரியாக வசைபாடியும், ஆபாசமாக கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். ஃபேக் ஐடிகள் வாயிலாக கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து, வருண் குமாரும், வந்திதா பாண்டேவும், எக்ஸ் சமூக வலைதளத்தில் இருந்தே தற்காலிகமாக விலகினர்.

தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகரில் அண்மையில் நடைபெற்றபோது, அந்த மாநாட்டில் பேசிய வருண் குமார், "சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள நானும், என் குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளோம். அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சியினருக்கு உலகம் முழுவதும் ஆட்கள் உண்டு. நாம் தமிழர் கட்சியினர் என்னையும், எனது மனைவி, குழந்தைகளின் மார்ஃபிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு சைபர் தாக்குதல் நடத்தினர். தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்" எனப் பேசி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் சீமான் "ரொம்ப நாளாக அவர் (வருண்​கு​மார்) எங்களை கண்காணித்துக் கொண்டிருக்​கிறார். இந்த காக்கி உடையில் எத்தனை ஆண்டுகள் இருப்​பார்? 30, 40 ஆண்டுகள் கழித்து இறங்கித்தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயே தான் இருப்​போம். பார்த்துப் பேச வேண்டும். மோதுவோம் என்றாகி​விட்டது, வா.. மோதுவோம்" என சவால் விட்டது குறிப்பிடத்தக்கது.










Sunday, 29 December 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா மற்றும் நல்லக்கண்ணு பிறந்தநாள் விழா பேரவைக்கூட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு துவக்கு விழா மற்றும் நல்லகண்ணு பிறந்தநாள் விழாவைத் தொடர்ந்து பேரவைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு மாநில நிர்வாக குழு  உறுப்பினர் எம் லாகுமயா தலைமை வகித்தார். விளக்க உரை.
மாநிலத் துணைச் செயலாளர் எம் வீரபாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 1925 முதல் 2025 ஆம் ஆண்டு இந்த ஆண்டு நூற்றாண்டு விழா தொடக்கமாக விழாவினை கொண்டாடும் விதமாக சுமார் 500க்கும் மேற்பட்ட கட்சியின் இந்நாள் முன்னாள் நகர ஒன்றிய பேரூர் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொறுப்பாளர்கள் மேடையில் பேசும்பொழுது நூறாண்டுகள் கடந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது நாம் கொண்டாடும் விதமாக இருப்பது என்றால் எந்த அளவிற்கு கட்சியின் தொண்டர்கள் கட்சிக்காக அரவணைத்து உழைத்தார்களோ அதேபோன்று இனிவரும் காலங்களில் இளைய தலைமுறைகளுக்கு கட்சியின் தொண்டர்கள் எடுத்துக் கூறப்பட்டு கிராமங்கள் தோறும் கட்சியினை வலுப்படுத்த வேண்டும் ஆங்காங்கே கட்சியின் கொடிகள் ஏற்றப்பட வேண்டும் கட்சிக்காக உழைக்க வேண்டும் எந்த ஒரு பாகுபாடு இன்றி  நமது கட்சியின் தோழர்களோட அனுசரித்துப் போக வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் படைத்தளபதியாய் உழைக்கும் மக்களின் உயிர்நாடியாய் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சாய் நாட்டுக்கும் மக்களுக்கும் உழைத்திட பாடுபட வேண்டும் எனவும் கூட்டத்தில் பேசினார்கள்.

 இந்த நிகழ்வின்போது ஆர், சுந்தரவள்ளி, டீ.வரதராஜன் தொழிலதிபர். டி சின்னசாமி, பி.பழனி, எம்.கே மாதையன், பி.கோவிந்தராஜன், எஸ் கண்ணு, எம்.பூதாட்டியப்பா, ஜெயராமன். ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சீனிவாசன். சாம்ராஜ், டி,வெங்கடேஷ், நகர செயலாளர் ஜெயகாந்த். உள்ளிட்ட இந்நாள் முன்னாள் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூர் அருகே கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா.. தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாச சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் கனகதாசரின் 537-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக குறும்பர் சமூக மக்கள் தங்களது குல தெய்வங்களான ஸ்ரீ சிக்கம்ம சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீ தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, ஸ்ரீ லிங்கேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிக்க வீரம்மாதேவி, பீரேஸ்வர ஸ்வாமி உள்ளிட்ட தெய்வங்களைத் தலை மேல் சுமந்தபடி கலாச்சார கலை நிகழ்ச்சிகளாகிய டொள்ளு குனித, வீரகாசே, வீரபத்திர குனித, கம்சாளே, ஆகிய நடனங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

சுவாமிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத திருவிழா நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேங்காய்களை தலைமேல் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டனர்.இந்த திருவிழாவில் தேன்கனிக்கோட்டை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி கிராம பொதுமக்கள் மட்டுமின்றி ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்திலிருந்து முக்கிய சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். மேலும் கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.முன்னதாக தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கனகதாசர் சிலை வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க டொல்லு குணிதா, வீரகாசை, விரபத்ர குணிதா ஆகிய பாரம்பரிய நடனங்களுடன் சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்ரப்பா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகள் அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் பக்தர்கள் பாரம்பரிய முறையில் நடனங்கள் ஆடினர். அப்போது ஊர்வலம் சென்ற சாலைகளில் தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்ரப்பா, சித்தைய்யா, தொட்டய்யா, கரி எல்லம்மா, இராம லிங்கேஷ்வரா, சித்த லிங்கேஷ்வரா,உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளுக்கும் காளை மாடுகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில் குரும்பர் இன மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தலைமேல் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு மேற்கொண்டனர். இந்த விழாவில் ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி தலைவர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். ரவீந்திரநாத் வழக்கறிஞர் கே டி ஆர் திமிராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கெட் மஞ்சு, எல்லப்பா, ஸ்ரீசோமலிங்கேஸ்வர குரு,  வரத்தூர் சுரேஷ், முன்கிருஷ்ணனப்பா, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமனப்பா, யோகா நந்தீஸ்வர ஸ்வாமிஜி, சசிகுமார்,வி.எம் எம் முனிகிருஷ்ணனப்பா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பீரப்பா, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் ரவி, சிவராமன். பத்திரப்பா, வெங்கடா ராமப்பா, சிக்கண்ணா, சம்பங்கி, முரளி, சுரேஷ், எல்லப்பா, உள்ளிட்ட கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனங்கள் மற்றும் ஊன்றுகோல் இந்த விழாவில் பேசிய ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி தலைவர் பாப்பண்ணா, தமிழகத்தில் குரும்பர் இன மக்கள் 40 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டனர். இந்த விழாவில் தமிழகத்தின் ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, கெலமங்கலம், இராயக்கோட்டை மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், கோலார், ஆனேக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிப்பு!

தமிழ்நாட்டில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை ஏடிஜிபி-யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன் டிஜிபி-யாக பதவி உயர்வு கிடைத்து அதே பொறுப்பில் நீடிப்பார்.

தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடே டிஜிபி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் பணியாற்றி வரும் ஐ.ஜி-க்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்த சரோஜ் குமார் காவல்துறை தலைமையக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் கிழக்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் ஆகியோருக்கு டிஐஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. வருண்குமார் திருச்சி சரக டி.ஐ.ஜியாகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக டிஐஜி-யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி எஸ்.பி-யாக ஸ்டாலின், கடலூர் எஸ்.பி-யாக ஜெயக்குமார், திருச்சி எஸ்.பி-யாக செல்வநாகரத்தனம், தென்காசி எஸ்.பி-யாக அரவிந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றிவந்த ராஜாராம் ஐபிஎஸ், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் எஸ்.பி அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார், கடலூர் எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் ஹடிமனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை துணை ஆணையர் ஜெயச்சந்திரன், திருவல்லிக்கேனி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி துணை ஆணையர் அன்பு ஈரோடு சிறப்பு படை எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம், எஸ்.பி தீபக் சிவாச், அரியலூர் எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு, துணை ஆணையர் யாதவ் கிரிஷ் அசோக், திருப்பூர் எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை தெற்கு, துணை ஆணையர் சரவணக்குமார் பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பி., சென்னை தென்மண்டலத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டின் நியூ இயருக்கு கொண்டாட்டங்கள்.. சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகள்!

நாட்டில் பல மாநிலங்களில் நாளை இரவு நாம் புத்தாண்டைக் கொண்டாடக் கோலாகலமாகத் தயாராகி வருகிறோம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு மோசமான விபத்துகளும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு மாநில அரசும் போலீசாரும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதன்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்துப் பார்க்கலாம்.

புத்தாண்டைக் கொண்டாட அனைவரும் தயாராகிவிட்டனர். புத்தாண்டு என்றாலே விடிய விடிய நடைபெறும் பார்ட்டி தான் அனைவருக்கும் நினைவில் வரும். இதுபோன்ற காலங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.

இதனால் போலீசார் புத்தாண்டு சமயத்தில் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதன்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

சென்னையைப் பொறுத்தவரைப் புத்தாண்டு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பெருநகர காவல் கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் ஜன. 31ம் தேதி இரவு 9.00 மணியிலிருந்து காவல் அதிகாரிகள், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்திப் பாதுகாப்பை அதிகரிக்கக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய சாலைகளில் கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைக்கப்பட உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. கடற்கரையோரங்களில் உரியத் தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யப்படும். மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவையான இடங்களில் காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைக்கப்படும். முக்கிய இடங்களில் டிரோன் மூலம் கண்காணித்துக் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் பாஸ்போர்ட் போலீஸ் சரிபார்ப்பில் பிரச்சினை ஏற்படும் என்பதால் மது அருந்தவிட்டு ஓட்டுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெங்களூரைப் பொறுத்தவரை எந்த கொண்டாட்டமாக இருந்தாலும் அதிகாலை 1 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூர் உயர்த்தப்பட்ட எக்ஸ்பிரஸ் வே தவிர, நகரின் முக்கிய மேம்பாலங்கள் டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்.

மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவோரைக் கண்காணிக்க இரவு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்பீக்கர் பயன்படுத்தவும், பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இந்த முறை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு இடமாக இருந்தாலும் சரி, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டு இருந்தால் 15 நாட்களுக்கு முன்னதாகவே கண்டிப்பாக பெர்மிஷன் வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பார்கிங் மற்றும் நுழைவாயில்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி வெளிப்புற சவுண்ட் அமைப்புகள் இரவு 10 மணிக்குள் அணைக்க வேண்டும். உள்ளே நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கூட அதிகாலை 1 மணி வரை மட்டுமே ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். அதுவும் 45 டெசிபல் அளவுக்கு மட்டுமே இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10,000 வரை அபராதம், கைது நடவடிக்கை மற்றும் வாகன பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நகரங்களுடன் ஒப்பிடும் போது மும்பையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கருத்தில் கொண்டு பார், ஹோட்டல், பப் ஆகியவை காலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி தரப்பட்டுள்ளது. வெளிப்புறம் நடக்கும் நிகழ்ச்சிகள் சத்தமான ஒலி இல்லாமல் நள்ளிரவிலும் தொடர்ந்து நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மது விற்பனைக்கும் எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது. அதேநேரம் அது குடிப்போர் தனியாக டிரைவரை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போதை மருந்து பயன்பாட்டைத் தடுக்கவும் சோதனைகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. முதன்மை செயலர்களாக நியமனம்!

தமிழ்நாட்டில் 2001 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உமாநாத் ஐஏஎஸ் முதலமைச்சரின் முதன்மைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் தமிழக ஆளுநர் மாளிகை முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 2009 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை (சென்னை) ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பிரிவைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, முதன்மை செயலாளர்கள் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் செயலராக உள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ், முதலமைச்சரின் முதன்மை செயலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். டி.என்.வெங்கடேஷ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜேந்திர ரத்னு ஐஏஎஸ், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (டெல்லி) செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர். லால்வெனா ஐஏஎஸ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் தமிழக ஆளுநர் மாளிகை முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தீப் நந்தூரி ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் தமிழக ஆளுநர் மாளிகை முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுபான்மை நல ஆணையரான ஆசியா மரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் (சென்னை) ஆணையராக பொன்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கே.எஸ்.கந்தசாமி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜியாக பெண் ஐஏஎஸ்யான கல்பனா நாயக்கை நியமித்து தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் பணியாற்றி வரும் ஐ.ஜி.க்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்தில் முக்கியமான அதிகாரி ஒருவரின் மாற்றம் கவனிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு சிலைகள் திருட்டு தடுப்பு துறைக்கு ஏடிஜிபியாக கல்பனா நாயக் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். சிஐடி பிரிவான சிலை திருட்டு தடுப்பு துறைக்கு இவர் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டது கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக பொன் மாணிக்கவேல் இதன் ஏடிஜிபி-யாக இருந்த போது அந்த துறை கவனிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களிலுள்ள பழங்கால சிலைகள் திருடப்பட்டது தொடர்பான நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி பிரபலமானவர். ஓய்வு பெறும் நாளில், தமிழ்நாட்டில் சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கவும் முடிக்கவும் ஒரு வருட காலத்திற்கு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் அவரை நியமித்தது.

செப்டம்பர் 2017 இல், அவர் தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, சிலைப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மதிப்புமிக்க கடத்தல் சிலைகளை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததாகவும் புகார் அளித்துள்ளார். குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட மன்னர் ராஜராஜ சோழன் மற்றும் அவரது ராணி லோகமாதேவி ஆகியோரின் வெண்கலச் சிலைகளை மீட்டெடுக்க அவர் உதவினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோவிலின் பஞ்சலோக சிலை செய்ததில் முறைகேடு, சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் சிலைகள் கொள்ளை, உலக சிலை கடத்தல் நெட்வொர்க் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார். சிலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு வலியுறுத்திய போதிலும், சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, ஓராண்டு நீட்டிப்புடன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சந்தேகப்படும்படியான ஒரு தரப்பினருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கருதிய போலீஸார், அவர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்த நிலையில்தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு கல்பனா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிட்ஸ் பிலானி & ஐஐடி சென்னையின் முன்னாள் மாணவர் அவார். அமெரிக்காவில் கிடைத்த பல கோடி சம்பள வேலையை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆனார். பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் பணிபுரிந்துள்ளார். 

டி.கல்பனா நாயக், ஐபிஎஸ்., அதிகாரியான தமிழ்நாடு 1998 பேட்ச், பெண்களுக்கு எதிரான குற்றத்தின் ஏடிஜியாகப் பணிபுரிந்தவர்  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறையின் ஏடிஜி/உறுப்பினர் செயலாளராக பணியாற்றியவர்.

சுனாமி நிவாரணப் பணிகளை செய்தது, சென்னை வெள்ள பணிகளை செய்தது, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், என்ஆர்ஐ மற்றும் திருமணக் குற்றங்களைக் கையாள்வது மற்றும் சைபர் குற்றங்களைக் கையாள்வது ஆகிய வழக்குகளில் இவர் கவனம் பெற்றார்.




யூனிஃபார்ம் மேல கை வைக்காதீங்க".. ஒரிஜினல் போலீசிடமே ஓவரா சவுண்டு போட்டு மாட்டிக்கிட்ட டூப்ளிகேட் போலீஸ்!

தாம்பரம் பகுதியில் காக்கி சீருடையில் இருந்த போலி போலீஸ், பான்பராக், குட்கா சோதனை என கடைகளில் வசூல் செய்துள்ளார். அந்த நபரை நிஜ போலீசார் சுற்றி வளைத்து பிடித்துச் சென்றனர். கைது செய்ய முயன்றபோதும், நிஜ போலீஸ் போலவே விரைப்பாகப் பேசி சீன் போட்டுள்ளார் அந்த நபர். நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றும் அந்த நபர், போலீஸ் வேஷம் போட்டு, கல்லா கட்டியுள்ளார்.

தாம்பரம் அடுத்த சங்கர் நகர் பகுதியிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசார் சிலர் வந்து சோதனை செய்து, வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்துச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், தாம்பரம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பெயரில் வேறு யாரோ வேலையைக் காட்டுவதாக சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் சங்கர் நகர் பகுதியில் போலீஸ் சீருடை அணிந்தவாறு ஒருவர் கடைகளுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஒரு கடையில் பதினைந்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டிக் கொண்டிருந்த போலி போலீசை ரோந்து வாகனத்தில் வந்த சங்கர் நகர் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர்.

அப்போதும் தம் கட்டிப் பேசியுள்ளார் அந்தப் போலி போலீஸ். எங்கள் கேம்ப் அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும் என அந்த நபர் நாடகமாடி உள்ளார். அவரை வண்டியில் ஏறுமாறு நிஜ போலீஸ் கூறியதற்கு, "யூனிஃபார்ம்ல கை வைக்காதீங்க.. கைய எடுங்க மொதல்ல" என விரைப்பாகவே பேசிக் கொண்டிருந்துள்ளார்.

ஆனாலும் அவர் போலி என தெரிந்து அதிரடியாக அவரைக் கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் ஆக நடித்து பணம் பறித்த அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் கைது செய்யப்பட்டவர் முரளி என்றும், (வயது 40) என்றும், ஸ்ரீபெரும்புதூர் வெங்காடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் காவலாளியாக இருப்பதும் தெரியவந்தது.

ஏற்கனவே கடை ஒன்றில் 15 ஆயிரம் ஏமாற்றி வாங்கிச் சென்றதாக ஒப்பு கொண்டதின் பேரில் அவர், மீது சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வணிகர்கள், கடை வியாபாரிகள், போலீஸ் என யாராவது சோதனை செய்தால் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் ஆபீஸர்ஸ் லைன், ஏலகிரி அரங்கில், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் தமிழ்மாநில வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் வி.சுந்தர்ராஜன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் எம்.நந்தகுமார், மாவட்ட பொருளாளர் கே.யுவராஜ், மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் தினகரன், இரா. மத்திய செயற்குழு உறுப்பினர் ரமேஷ்குமார், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஆர்.அன்பழகன், மாவட்ட செயலாளர் யோகானந்த பூபதி, மாவட்ட பொருளாளரும், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் கௌரி, மத்திய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திர பிரசாத், ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி மாநில செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலையிலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளர் வே.சுரேஷ் சிறப்பு வரவேற்புரையாற்ற பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து சிறப்பித்தனர். 

மேலும், மாநில செயலாளர் எஸ்.எம்.முகமது சாதிக், சங்கத்தின் வளர்ச்சிக்கும் சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சில தீர்மானங்களை முன்மொழிந்து விழா பேருரையாற்றினர். மாநிலத் தலைவர் பி.கே.சிவகுமார் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நிர்வாகிகளை அறிவித்து சிறப்புரையாற்றினர். சட்ட ஆலோசகர் கோ. குமரன் டைரி மற்றும் காலண்டரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் அ.சோனை கருப்பையா, வேலூர் மாவட்ட செயலாளர் தே.முரளிதரன், வேலூர் மாவட்ட பொருளாளர் கு.கனகராஜ், வேலூர் மாவட்ட தலைவர் சே.இராஜேந்திர பிரசன்னா மற்றும் வேலூர், மாநில துணை தலைவர் ஆர்.ரவி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கி பொதுக்கூட்டத்தை சிறப்பித்து இக்கோட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் டைரி மற்றும் காலண்டர்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இறுதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொருளாளர் எம்.விஜயபாஸ்கர் நன்றயுரையாற்றி பொதுக்குழு கூட்டம்  நிறைவுபெற்றது.

தமிழக அரசில் காலியாக உள்ள சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு அனைத்துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் மாநில தலைவர் டாக்டர் பி. பாஸ்கர் தலைமையில் நடந்தது. மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு, மாநில பொதுச் செயலாளர் பி. பாலாஜி சிங் மற்றும் சட்ட ஆலோசகர் ஜி. பிரபாகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் டி .கே. ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் சி. ராஜவேலு தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக அரசிடம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில தலைவர் தலைமையில் சென்னை சென்று முதல்வரின் சிறப்பு செயலர் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் மற்றும் இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார். 

இந்த மாநில பொதுக்குழுவில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கத்தின் மாநில துணை செயலாளர், மாநில பொருளாளர் எஸ். ரவிக்குமார், மாநில கௌரவ தலைவர் பி.ஜோதிராமலிங்கம், மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாவட்ட பொருளாளர் எ. மணி, மாவட்ட துணைச் செயலாளர் முனுசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கௌரவ தலைவர்கள் ஆர். சம்பத்,  தாண்டவமூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் மதன்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு தோட்டக்கலை பண்ணை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அறிவழகன், சிவகங்கை மாவட்டம் சின்னத்தம்பி, தென்காசி மாவட்டம் சங்கர், தஞ்சாவூர் மாவட்டம் செந்தில், புதுக்கோட்டை மாவட்டம் சோலையப்பன், நீலகிரி மாவட்டம் செல்வம், கரூர் மாவட்டம் மூக்கன், கிருஷ்ணகிரி மாவட்டம் பெருமாள், காஞ்சனா, கடலூர் மாவட்டம் ரங்கநாதன், செங்கல்பட்டு மாவட்டம் அருள்தாஸ், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ரத்தினம், சேலம் மாவட்டம் மாதேஸ்வரி, தீர்த்தம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து இணைப்பு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில் தமிழக அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய தமிழக அரசை இந்த பொதுக்குழு வேண்டுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு முன்பு போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இந்த பொதுக்குழு வேண்டுகிறது. நிலுவையிலுள்ள சரண்டர் விடுப்பு மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசு இனிவரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் அதே தேதியில் மாநில அரசும் அகவிலைப்படி மாநில தலைவர் மாநில பொதுச்செயலாளருக்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் அளிக்கிறது தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்ட அரசாணை எண் 139 நாள் 3.10.2022 இன் படி தமிழக முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் இனி அனைத்து காலிப் பணியிடங்களையும் மற்றும் இனி ஏற்பட போகின்ற காலி பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் டெண்டர் விட்டு தற்காலிக முறையில் பணி அமர்த்தும் படி வந்த அரசாணையை திரும்பப் பெற இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது . தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, பதவி உயர்வு, குடும்ப நிதி வழங்க இந்த பொதுக்குழு தமிழக அரசை வேண்டுகிறது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 10 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களுக்கு பணி நிறைந்தரம் செய்ய இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழக அரசிஅஅல் காலியாக உள்ள சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலியாக மாவட்டங்களை ஒருவரை பார்க்க வேண்டிய நிலை உள்ளது எனவே தனித்தனியாக மாவட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். வேலூர் போன்ற மாநகராட்சிகளில் மாநகராட்சியாக மாற்றப்பட்டாலும் அரசு பணியாளர்களுக்கு அதற்கு ஈடான வீட்டு வாடகை படி மற்றும் சி சி ஏ வழங்க பரிந்துரைக்கும் படி இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் துணை செயலாளர்களை சந்திக்க தேதி வழங்கியவுடன் மாநில நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேண்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தமிழகத்திலுள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் மாவட்ட நிர்வாகி ஜெயபால் நன்றி கூறினார்.

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...