Monday, 20 January 2025
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
Sunday, 19 January 2025
என்னை நாடிவரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருகிறேன்: பொங்கல் விழாவில் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு பேச்சு!
பேரணாம்பட்டு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக எம். தேசியமணி. நியமனம்!
கல்லபாடியில் இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய தயங்கும் போலீஸார்!
Saturday, 18 January 2025
லஞ்சத்தில் தள்ளாடும் காளையார்கோயில் தாசில்தார்
காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!
வேலூரில் 10ம் வகுப்பு பள்ளி பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது!
ஓசூர் எம்.எல்.ஏ. தளி ஒய்.பிரகாஷ் எருதுவிடும் திருவிழாவை துவக்கினார்!
ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா பொங்கல் திருநாள்யொட்டி ஓசூர் எம்.எல்.ஏ விடம் வாழ்த்து பெற்றனர்
Friday, 17 January 2025
திருப்பூர் சிவில் வழக்கில் ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!
திருப்பூரில் நிலத்தின் உரிமையாளர் தரப்பில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று வாடகைக்கு குடியிருப்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சிவில்' புகாரை அலட்சியமாக கையாண்டதோடு, ஒருதரப்புக்கு ஆதரவாக பெண் காவல் ஆய்வாளர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து திருப்பூர் துணை காவல் ஆணையாளர் ராஜராஜன் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை 'சஸ்பெண்ட்' செய்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஐபிஎஸ்., உத்தரவிட்டார்.
சிவில் வழக்குகள் தொடர்பாக விசாரிக்க மாட்டோம்.. உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு காவல் நிலையங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில காவல் நிலையங்களிலுள்ள
காவல் அதிகாரிகள் சிலர், சிவில் வழக்குகளில் தலையிட்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக புகார்கள் உள்ளது.
நிலம், வீடு சம்பந்தமான தகராறுகளில் (நிலம், வீடு, லீஸ் என எந்த வகையான மோசடிக்கு புகார் அளிக்கலாம்) சிவில் சம்மந்தப்பட்ட புகார், வழக்குகளில் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற வேண்டும். அப்பிரச்னை தொடர்பாக சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே போலீசார் விசாரிப்பது வழக்கமாக உள்ளது. அதோவது அடிதடி, கொலை மிரட்டல், பணம் பறித்தல், ஏமாற்றுதல் போன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு தான் போலீஸ் தலையிடுகிறார்கள்.
அதேநேரம் சொத்து பாகப் பிரிவினை, வாடகை தர மறுத்தல், வீட்டை காலி செய்யாமல் இருத்தல், குத்தகை விடுதல், ரத்து செய்தல், இடப்பிரச்னை தொடர்பாக போலீசார் விசாரணை செய்ய அனுமதியில்லை.. அந்த பிரச்சனை உள்ளவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும்.
இந்நிலையில் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்பவர் பெங்களூரில் இருக்கிறார். இவருக்கு செல்லம் நகர்- பாரப்பாளையம் செல்லும் சாலையில் 30 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த இடத்தை குமார், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஜீவானந்தம், ராஜா ஆகியோருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இடம் ஒப்பந்தம் எதுவும் போடப்படாமல் வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் தரப்பில் இடத்தை காலி செய்ய சொல்லி உள்ளனர். இதில் வாடகைக்கு இருந்தவர் அதிக அளவில் செலவு செய்து இருப்பதாக தெரிவித்து மறுப்பு தெரிவித்தாராம். இதையடுத்து இடத்தின் உரிமையாளர் குமார், திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சி.எஸ்.ஆர். மட்டும் பதிவு செய்து தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இடத்தை காலி செய்து தரக்கோரிய விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் சிவில் பிரச்சினையில் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் ஆய்வாளர் ராஜஸ்வரி மீது புகார் எழுந்தது. மேலும் சிவில்' புகாரை அலட்சியமாக கையாண்டதோடு, ஒருதரப்புக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையாளர் ராஜராஜன் விசாரித்தார். தனது விசாரணை அறிக்கையை, திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு அறிக்கை சமர்பித்தார். இதையடுத்து திருப்பூர் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.. 58 வேட்பு மனு தாக்கல் இன்று மனுக்கள் பரிசீலனை!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகளும் அமலாகின. 10 ஆம் தேதி முதல் 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான 10-ந்தேதி சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந்தேதி விடுமுறை தினம் ஆகும்.
அதைத்தொடர்ந்து 13-ந்தேதி 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் பொங்கல் பண்டிகையையொட்டி 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. நேற்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால், நேற்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
திமுக வேட்பாளராக போட்டியிடும் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். 3 மணிக்கு முன்பாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 49 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு சிலர் மாற்று வேட்பாளர் உள்பட 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதன்படி 58 பேரிடம் இருந்து மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் 5- ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 8-ந்தேதி சித்தோடு அரசு என்ஜினியரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
காட்பாடியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா கோலாகலம்!
ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச் சங்க செயற்குழு கூட்டம்!
குடியாத்தம் புதிய நீதி கட்சி சார்பில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாளில் அன்னதானம் விநியோகம்!
பேரணாம்பட்டில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்தநாள் விழா: பொது மக்களுக்கு பிரியாணி வழங்கல்!
Thursday, 16 January 2025
திருவண்ணாமலையில் ஒரே மாதத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்று மூன்று அதிகாரிகள் அதிரடி கைது!
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல்கள்.. திருவண்ணாமலை, பெரம்பலூர் என தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் லஞ்ச லாவண்யங்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகின்றன.. இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கைதாகி வருவது பொதுமக்களுக்கு கவலையை தந்து வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை உள்ளது. இதில், சில பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட, ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில், விருதுநகர் விஏஓவுக்கு, நீதிமன்றம் சரியான தண்டனையை தந்துள்ளது.. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் 2 சர்வேயர்கள் லஞ்ச புகாரில் கைதாகி இருக்கிறார்கள்.
அதாவது, மேல்மலையனுார் தாலுகா மேல்வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை அளவீடு செய்ய அணுகியபோது, மேல்மலையனுார் தாலுகா அலுவலக சர்வேயர்கள், இடைத்தரகர் மூலம் 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்களாம். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்து, 2 அதிகாரிகளுமே கைதானார்கள்.
அதேநாளில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்ஊழியர் கைதானார்.. தெருவிளக்கு அமைக்க மின் கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு பெறவேண்டி, ஆன்லைனில் மின்வாரிய சேத்துப்பட்டு நிர்வாக பொறியாளருக்கு ராமகிருஷ்ணன் என்பவர் விண்ணப்பித்திருக்கிறார்.
இந்த இணைப்பு சம்பந்தமாக சேத்துப்பட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர் சிவப்பிரகாசத்திடம் அணுகி விசாரித்தற்கு 6 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இறுதியில் மின்ஊழியர் கைதானார்.
கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில், சுமதி என்ற பெண் அதிகாரி லஞ்ச புகாரில் சிக்கியிருந்தார். அதாவது, அருள்குமார் என்பவர், புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு பிறகு, வட்ட வழங்கல் அலுவலர் சுமதியிடம் அணுகி, புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுக்கு ஒப்புதல் வழங்குமாறும் கேட்டாராம்.. அதற்கு சுமதி, ரூ.3 ஆயிரம் தந்தால்தான் ஒப்புதல் வழங்குவேன் என்று கறாராக கேட்டிருக்கிறார்.
கடைசியில் இவரை பற்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் அருள்குமார் புகார் தரவும், இறுதியில் கையும் களவுமாக சிக்கினார் சுமதி.. வரும் 31ம் தேதியுடன் சுமதி பணிநிறைவு பெறவிருந்தாராம்.. ஆனால், அதற்குள் இப்படியொரு புகாரில் சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்.
அதேபோல, திருவண்ணாமலையில் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் தி.மலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சாரோன் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் ஏஎல்சி பள்ளி நிர்வாகம் நியமித்த ஆசிரியையை அங்கீகரிக்க, துணை ஆய்வாளர் தனது மனைவியின் வங்கி கணக்கு மூலமாக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த லஞ்ச புகார்கள் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஆந்திர மாநில எல்லையில், லஞ்சம் வாங்கிய போக்குவரத்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியரிடம் லஞ்சம் கேட்டு வாங்கியதாக தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநரை மாநில ஊழல் தடுப்புப் பணியகத்தின் (ஏசிபி) புனே பிரிவு கைது செய்துள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எழுத்தரிடம் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தாததற்காகவும், அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யவும், துணை இயக்குனர் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாராம்.. தனியார் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு, இந்த லஞ்சப் பணத்தை வாங்கும்போது ஏசிபி போலீஸார் பொறி வைத்து பிடித்துள்ளது, மிகுந்த பரபரப்பை தற்போது ஏற்படுத்தி வருகிறது.
நெசவாளர்களின் குழந்தைகள் உயர்கல்விப் பயில 22 ஆண்டுகளாக மக்கள் நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என்று போராடியும் நடவடிக்கை இல்லை..??
ரூ.12.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குனர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடி கைது!
பேர்ணாம்பட்டு நகராட்சியில் கட்டிட வரைபட அனுமதி பெறாமல் ஒரு சிலர் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களால் தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம்!
ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை
காட்பாடி சேவூர் கிராமத்தில் விருட்சம் தொண்டு நிறுவனம் சார்பில் பொங்கல் விழா!
வேலூர் ஸ்ரீ நாராயணி பீடத்தில் காமதேனு மகாயாகம்: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!
கடல் தாண்டிய தமிழர்களின் பொங்கல் விழா!
Tuesday, 14 January 2025
வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் எஸ்.பி. மதிவாணன் தலைமையில் பிரம்மாண்டமான பொங்கல் விழா.. மாவட்ட ஆட்சியாளர் பங்கேற்பு!!
சேலம் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வாரிசு வேலை கேட்டு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பிரண்டு கைது!
"25 வயதுடைய" இளம்பெண் ஒருவர் தன்னுடைய தந்தை பேரூராட்சி நிர்வாகத் துறையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வாரிசு அடிப்படையில் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 25 வயதாகிறது. இவரது அப்பா தூய்மைப் பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக மண்டலப் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவராஜனையும் சந்தித்து பேசியிருக்கிறார் அந்த இளம்பெண்.
ஆனால் கண்காணிப்பாளர் தேவராஜன் அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, பாலியல் தொல்லை தர துவங்கியதுடன், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது செல்போனில், தேவராஜன் பேசியதை அப்படியே ரிக்கார்டு செய்து விட்டார்.. இதனையே ஆதாரமாக வைத்து, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவாக தந்துவிட்டார்.
இளம்பெண் ஆதாரத்துடன் தந்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார், கண்காணிப்பாளர் தேவராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அதில், அந்த பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொல்லை தந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பாளர் தேவராஜனை கைது செய்து, சேலம் ஜெயிலிலும் அடைத்திருக்கிறார்கள்.
காட்டு தர்பார் நடத்தி வசூல் வேட்டை பார்க்கும் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்!
தர்மபுரி அரசு பள்ளிக்கூடத்தில் கழிவறையே சுத்தம் செய்த பழங்குடி மாணவிகள்.. தலைமையாசிரியை கலைவாணி சஸ்பெண்ட்
அமைச்சரின் வீட்டின் முன் அடித்துக் கொண்ட ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்!நடவடிக்கை எடுக்காத அமைச்சர் துரைமுருகன்!
காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மண்டலக்குழு தலைவர் இனிப்பு பொங்கல் வழங்கினர்.
காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்ப அகாடமியின் சார்பில் பொங்கல் விழா!
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய கிராமத்தில் போலீசார் அத்துமீறல்.. விரட்டி விரட்டி கைது!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...