Monday, 20 January 2025

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் த/பெ. குப்பன் அவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். மேலும் பிச்சாண்டி (வயது 65) த/பெ முத்தையன், தசரதன் (வயது 60) த/பெ.மாசிலாமணி இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இரண்டு பேரும் 5 மீட்டர் மற்றும் நான்கு மீட்டர் அளவுள்ள பொதுமக்கள் நடமாடும் பொது தெருவழி வீதிகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தென்னை மரம் புங்கமரம் மற்றும் பூச்செடிகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு செல்வதற்குவழி விடாமல் ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து தாமோதரன் என்பவர் அவ்வழியாக வந்துள்ள அவர் வழி மூடி இருந்தனர் ஏன் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி உன்னை ஒழித்து விடுவேன் நீ யாரிடம் போய் சொன்னாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது என்றுபேசி மிரட்டி வருகிறார்.  இதுகுறித்து கடந்த  திங்கட்கிழமை அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கதிறி அழுதபடி கோரிக்கை மனுவாக எழுதி கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனு மீது விசாரணை செய்துநடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதியவர் சுமார் ஐந்து ஆண்டு காலமாக கோரிக்கை மனுக்களை கொடுத்து வருவதும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இக்குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, 19 January 2025

என்னை நாடிவரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருகிறேன்: பொங்கல் விழாவில் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு பேச்சு!

என்னை நாடிவரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருகிறேன். அத்துடன் அரசு வேலைவாய்ப்பையும் குறிப்பாக ரேஷன் கடைகளில் பெற்றுத் தருகிறேன் என்று பொங்கல் விழா பரிசு போட்டி வழங்கும் விழாவில் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு பேசினார்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது மண்டலம், காட்பாடி 1வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் தெரு இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் இணைந்து 26 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை கோலாகலமாக நடத்தினர். இதில் பாரதியார் தெருவில் செங்குட்டை பகுதியில் கடந்த 14 ,15, 16 ஆகிய மூன்று நாட்கள் பல்வேறு போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த பரிசளிப்பு விழாவில் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் திமுக 1வது வட்ட செயலாளர் கே. அன்பு கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், இளைஞர்கள் ஆகியோருக்கு பரிசுகளை வாரி வழங்கி விட்டு அவர் சிறப்புரையாற்றி பேசிய போது கூறியதாவது:  நான் மிகவும் சிரமப்பட்டு முன்னேறியவன். முதலில் நான் வேலைக்கு வரும்போது எனக்கு கூலி வெறும் 50 பைசா மட்டுமே. இன்று நான் கஷ்டப்பட்டு உழைத்து படிப்படியாக முன்னேறியுள்ளேன். கடந்த 2017ல் நகராட்சி கவுன்சிலராக போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் சுயேட்சையாக போட்டியிட்ட போது இந்த பாரதியார் தெரு மக்கள்தான் என்னை ஆதரித்து அரவணைத்து எனக்கு வாக்களித்தனர். அதை நான் என்றும் மறவேன். செய்த உதவியை நான் என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன். உதவி செய்தவர்களையும் அதே போன்று நான் மறவாமல் இன்றுவரை நட்புடன் அவர்களுடன் பழகி வருகிறேன். இந்த பாரதியார் தெருவுக்கு எனது சொந்த செலவில் சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளேன். இதை நீங்கள் வேண்டுமென்றால் மாநகராட்சிக்கு சென்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களை விட்டு விலகி இருக்க மாட்டேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறேன். உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறேன். ஒற்றுமையாக அனைவரும் இருந்து பல பணிகளை சாதிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று அவர் பேசினார். அத்துடன் காட்பாடி ராஜீவ் காந்தி நகர் பகுதியில் இதே போன்று பொங்கல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பேசுகையில், இங்குள்ள இளைஞர்கள் என்னை நாடி வருவதில்லை. அப்படி அவர்கள் வந்தால் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பையும் பெற்றுத் தர நான் தயாராக உள்ளேன். குறிப்பாக ரேஷன் கடைகளில் எடையாளர் பணியை நான் சிபாரிசு செய்து வாங்கித் தருகிறேன். வேலை தேவைப்படுவோர் என்னை சந்தித்து இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அப்போது அவர் தெரிவித்தார். நான் உங்களுக்கு சேவை செய்யவே உள்ளேனே தவிர உங்களிடம் ஓட்டு வாங்கிக் கொண்டு செல்வதற்காக அல்ல. மற்றவார்டுகளைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. நான் எனது 1வது வார்டை கோயில் போன்று நினைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறேன். ஆதலால் தொடர்ந்து எனக்கு நீங்கள் உங்கள் ஆதரவையும், அன்பையும் எனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர்கள் மேலும் வளர்ந்து அவர்கள் வீட்டுக்கு பேருதவியாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

பேரணாம்பட்டு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக எம். தேசியமணி. நியமனம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம். தேசியமணி. பேரணாம்பட்டு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை முன்னாள் அமைச்சர் .கே.சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தா. வேலழகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி இவரை நியமனம் செய்து அறிவித்துள்ளார். ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம். தேசியமணி , முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தா. வேலழகன், பேரணாம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவரும், பேரணாம்பட்டு ஒன்றிய அதிமுக செயலாளருமான பொகளூர் டி.பிரபாகரன், நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர் எல். சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கல்லபாடியில் இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய தயங்கும் போலீஸார்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லபாடி  சாலை ஓரம் பட்டி பகுதியில் வசித்து வருபவர் மோனிஷா ( 21), த/பெ.ரவி. அவர் வீட்டு அருகே நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று வரும்போது அவரது வீட்டு அருகே உள்ள ஹேமநாத் (20), லோகேஷ்(18), குமார் (45) மற்றும் கலைவாணி (40) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு மோனிஷாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது மார்பகம் மீதும், முதுகு மீதும், தலை மீதும் சரமாரியாக கல்லாலும், கட்டையாலும் தாக்கியும், கத்தியால் சரமாரியாக குத்தியும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மோனிஷா சாலையில் விழுந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மோனிஷாவின் அண்ணன் அங்கு விரைந்து சென்று காயமடைந்து வலியாலும், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த தங்கை மோனிஷாவை மீட்டு காப்பாற்றி சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக கொண்டு வந்து அனுமதித்தார். மோனிஷா தீவிர சிகிச்சை  பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரை காவல் நிலையத்தில் கொடுத்தும் புகாரின் பேரில் விசாரணை நடத்தி ஹேமநாத் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த நான்கு பேர் மீதும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டால் போலீஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று பாதிக்கப்பட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Saturday, 18 January 2025

லஞ்சத்தில் தள்ளாடும் காளையார்கோயில் தாசில்தார்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஆவணங்கள் இருந்தும் உட்பிரிவு செய்து பட்டா மாருதல் செய்யனுமா தாசில்தாருக்கு மட்டுமே ஒரு பைலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே உடனே பட்டா மாருதல் ஆகுமாம் லஞ்சத்தில் தள்ளாடும் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லோருடய எதிர்பார்ப்பாக உள்ளது

காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!

வேலூர் மாவட்டம் , காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகிலுள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில்  சங்கடஹர  சதுர்த்தி விழா நடந்தது.
 இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மலர் மாலை, வெட்டிவேர் மாலை, அருகம்புல் மாலை, பட்டுவஸ்திரம் அணிவித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  சங்கடஹர  சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைகளை பிரம்மபுரம் ஸ்ரீ ஜெயக்குமார் அர்ச்சகர் விமரிசையாக  செய்திருந்தார்.

வேலூரில் 10ம் வகுப்பு பள்ளி பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது!


 
வேலூர் அரியூர் பகுதியிலுள்ள ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் கொணவட்டம் மதினா நகரைச் சேர்ந்தவர் முகமது ஷாநவாஸ் (35 வயது). இவர் வேலூர் அடுத்துள்ள அரியூர் பகுதியில் இயங்கும் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது இவர் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த மாணவியிடம் செல்போனில் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படியும், வீடியோ காலில் நிர்வாண நிலையில் வரும்படியும் கட்டாயப்படுத்தி அவரை தொல்லை செய்து வந்துள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் தேர்வில் சரியாக மதிப்பெண் வழங்க மாட்டேன் என்றும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார் ஆசிரியர். இதனால் பயந்து போன அந்த மாணவி தனது புகைப்படங்களையும், தனது உடலை காண்பிக்கும் வகையில் வீடியோக்களிலும் அந்த காமுக ஆசிரியரிடம் பேசியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஆசிரியர் பள்ளியில் வைத்து மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லையும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது ஷாநவாஸ் மாணவியிடம் படிக்கும்போது வீடியோ கால் செய்ய வேண்டும் என்றும், பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனக்கு தெரிவிக்க படியும் கூறியுள்ளார். இவ்வாறு செய்யாவிட்டால் தேர்வில் மதிப்பெண் வழங்க மாட்டேன் என்றும் மீண்டும் மிரட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வாழ்க்கையில் விரக்தியடைந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட முயன்றுள்ளார். இதனை கவனித்த அந்த பெண்ணின் பெற்றோர் மாணவியிடம் நடந்தது என்ன? தங்களுக்கு விவரமாக கூறும் படி கேட்டுள்ளனர். அப்போது தனது கணித ஆசிரியரால் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து விவரித்த படி விரிவாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வேலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் (பொ) தமிழரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகமது ஷாநவாஸை கைது செய்தார். பள்ளியில் பயிலும் ஒரு மாணவியை ஒரு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மட்டுமல்லாது வேலூர் மாவட்டம், முழுவதும் ஒரு பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த செய்தி வெளிவரக் கூடாது என்றும் தங்களது பள்ளியின் பெயர் வெளியில் தெரியக்கூடாது என்றும் மறைப்பதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் பல்வேறு பகீரத முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காட்டுத்தீ போல வேலூர் மாவட்டத்திலுள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் அந்தப் பள்ளியின் நடவடிக்கை, நிர்வாகம் எப்படி உள்ளது என்பதை நன்கு ஒன்றுக்கு இரண்டு முறை சீர்தூக்கி பார்த்துவிட்டு பின்னர் அந்த பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஓசூர் எம்.எல்.ஏ. தளி ஒய்.பிரகாஷ் எருதுவிடும் திருவிழாவை துவக்கினார்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள காமன்தொட்டி ஊராட்சி கோபசந்திரம் மற்றும் பஸ்தலப்பள்ளி கிராமங்களில் எருதுவிடும் திருவிழாவினை கிருஷ்ணகிரி மேற்கு  மாவட்ட செயலாளர், ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் தளி ஒய்.பிரகாஷ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா பொங்கல் திருநாள்யொட்டி ஓசூர் எம்.எல்.ஏ விடம் வாழ்த்து பெற்றனர்


கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஓசூர் மாநகர துணை மேயர் மற்றும்  ஓசூர் மேற்கு பகுதி திமுக கழக செயலாளரும் சி.ஆனந்தய்யா பொங்கல் திருநாளை
முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் தளி ஒய்.பிரகாஷ். அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது உடன் ஓசூர் மாநகர 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் வட்ட கழக செயலாளர் வி.ஸ்ரீனிவாசுலு, 6வது வார்டு மாநகர மாமன்ற உறுப்பினர் மம்தா சந்தோஷ். வட்ட கழக செயலாளர் உடனிருந்தனர்.

Friday, 17 January 2025

திருப்பூர் சிவில் வழக்கில் ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!

திருப்பூரில் நிலத்தின் உரிமையாளர் தரப்பில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று வாடகைக்கு குடியிருப்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சிவில்' புகாரை அலட்சியமாக கையாண்டதோடு, ஒருதரப்புக்கு ஆதரவாக பெண் காவல் ஆய்வாளர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து திருப்பூர் துணை காவல் ஆணையாளர் ராஜராஜன் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை 'சஸ்பெண்ட்' செய்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஐபிஎஸ்., உத்தரவிட்டார்.

சிவில் வழக்குகள் தொடர்பாக விசாரிக்க மாட்டோம்.. உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு காவல் நிலையங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில காவல் நிலையங்களிலுள்ள
காவல் அதிகாரிகள் சிலர், சிவில் வழக்குகளில் தலையிட்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக புகார்கள் உள்ளது.

நிலம், வீடு சம்பந்தமான தகராறுகளில் (நிலம், வீடு, லீஸ் என எந்த வகையான மோசடிக்கு புகார் அளிக்கலாம்) சிவில் சம்மந்தப்பட்ட புகார், வழக்குகளில் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற வேண்டும். அப்பிரச்னை தொடர்பாக சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே போலீசார் விசாரிப்பது வழக்கமாக உள்ளது. அதோவது அடிதடி, கொலை மிரட்டல், பணம் பறித்தல், ஏமாற்றுதல் போன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு தான் போலீஸ் தலையிடுகிறார்கள்.

அதேநேரம் சொத்து பாகப் பிரிவினை, வாடகை தர மறுத்தல், வீட்டை காலி செய்யாமல் இருத்தல், குத்தகை விடுதல், ரத்து செய்தல், இடப்பிரச்னை தொடர்பாக போலீசார் விசாரணை செய்ய அனுமதியில்லை.. அந்த பிரச்சனை உள்ளவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும்.


இந்நிலையில் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்பவர் பெங்களூரில் இருக்கிறார். இவருக்கு செல்லம் நகர்- பாரப்பாளையம் செல்லும் சாலையில் 30 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த இடத்தை குமார், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஜீவானந்தம், ராஜா ஆகியோருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இடம் ஒப்பந்தம் எதுவும் போடப்படாமல் வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் தரப்பில் இடத்தை காலி செய்ய சொல்லி உள்ளனர். இதில் வாடகைக்கு இருந்தவர் அதிக அளவில் செலவு செய்து இருப்பதாக தெரிவித்து மறுப்பு தெரிவித்தாராம். இதையடுத்து இடத்தின் உரிமையாளர் குமார், திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சி.எஸ்.ஆர். மட்டும் பதிவு செய்து தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இடத்தை காலி செய்து தரக்கோரிய விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் சிவில் பிரச்சினையில் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் ஆய்வாளர் ராஜஸ்வரி மீது புகார் எழுந்தது. மேலும் சிவில்' புகாரை அலட்சியமாக கையாண்டதோடு, ஒருதரப்புக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையாளர் ராஜராஜன் விசாரித்தார். தனது விசாரணை அறிக்கையை, திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு அறிக்கை சமர்பித்தார். இதையடுத்து திருப்பூர் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.. 58 வேட்பு மனு தாக்கல் இன்று மனுக்கள் பரிசீலனை!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகளும் அமலாகின. 10 ஆம் தேதி முதல் 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான 10-ந்தேதி சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந்தேதி விடுமுறை தினம் ஆகும்.

அதைத்தொடர்ந்து 13-ந்தேதி 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் பொங்கல் பண்டிகையையொட்டி 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. நேற்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால், நேற்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

திமுக வேட்பாளராக போட்டியிடும் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். 3 மணிக்கு முன்பாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 49 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு சிலர் மாற்று வேட்பாளர் உள்பட 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதன்படி 58 பேரிடம் இருந்து மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் 5- ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 8-ந்தேதி சித்தோடு அரசு என்ஜினியரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

காட்பாடியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரத்திற்குட்பட்ட காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவரது 108 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜனார்த்தனன், மேற்கு பகுதி செயலாளர் நாராயணன், 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். பி. ரமேஷ் , 6வது வட்ட செயலாளர் என். எழிலரசன், ஜெ. பேரவை நிர்வாகி பாலாஜி, தெற்கு பகுதி செயலாளர் பேரவை ரவி, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், மகளிர் அணி லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் அதிமுக நிர்வாகிகளிடையே பேசிய வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் குறிப்பாக இனிப்புகளை மற்ற யாருக்கும் வழங்காமல் அதிமுக நிர்வாகிகளே பங்கு பிரித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச் சங்க செயற்குழு கூட்டம்!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி சிறை வளாகத்தில்  வேலூர் மாவட்ட ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர் நலச் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அ. உபையதுல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.பழனி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர். கிருஷ்ணன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நெல்வாய் என்.நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.  ராஜேந்திரன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. மோகன்  கலந்துகொண்டு தீர்மானத்தை இனிதே நிறைவேற்றினர். இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எ.வி. ராஜேந்திரன் நன்றி கூறினார். இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம் புதிய நீதி கட்சி சார்பில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாளில் அன்னதானம் விநியோகம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய நீதி கட்சி சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், நிறுவனருமான டாக்டர் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியிலுள்ள அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு இடைவிடாது நடந்தது. அத்துடன் சகஸ்ரநாம சிறப்பு  பூஜைகளும், பஜனைகளும் நடந்தது.  குடியாத்தம் பிச்சனூர், அரசமரம், எம்ஜிஆர் சிலை அருகில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடைவிடாது ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதை ஏழை, எளியவர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், சாலையோரம் வசிக்கும் ஏழைகள் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இதற்கு முன்னதாக அருகில் இருந்த எம்ஜிஆரின் மார்பளவு திருவருவுச்சிலைக்கு குடியாத்தம் புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் எஸ். ரமேஷ் மற்றும் மாவட்டத் தலைவர் ஆர். இளஞ்செழியன், மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராம. இளங்கோ, ஒன்றிய தலைவர்  குமரவேல் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பேரணாம்பட்டில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்தநாள் விழா: பொது மக்களுக்கு பிரியாணி வழங்கல்!

வேலூர் மாவட்டம்,
பேரணாம்பட்டு தொலைபேசி வளாக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்தநாள் விழா அதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு வேலூர் மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஹோட்டல் எம்.அய்யூப் தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு முன்னாள் ஒன்றிய குழுப் பெருந்தலைவர் பொகளூர் டி. பிரபாகரன், பேரணாம்பட்டு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர் எல். சீனிவாசன், தலைமை பொது குழு உறுப்பினர் முத்து சுப்பிரமணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர். எஸ்.துர்கா தேவி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் நகர, ஒன்றிய, மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் துரை திருமால், சாத்கர் எம். ரவி, எஸ்.ஜெயக்குமார், கே.கே. நகர் எஸ். தணிகாசலம், பண்ணு ரவி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிதரன், மாவட்ட ஒன்றிய மீனவர் அணி செயலாளர் வி.கந்தன், முன்னாள் ஒன்றிய சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.சீமான் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Thursday, 16 January 2025

திருவண்ணாமலையில் ஒரே மாதத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்று மூன்று அதிகாரிகள் அதிரடி கைது!

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல்கள்.. திருவண்ணாமலை, பெரம்பலூர் என தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் லஞ்ச லாவண்யங்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகின்றன.. இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கைதாகி வருவது பொதுமக்களுக்கு கவலையை தந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை உள்ளது. இதில், சில பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட, ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில், விருதுநகர் விஏஓவுக்கு, நீதிமன்றம் சரியான தண்டனையை தந்துள்ளது.. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் 2 சர்வேயர்கள் லஞ்ச புகாரில் கைதாகி இருக்கிறார்கள்.

அதாவது, மேல்மலையனுார் தாலுகா மேல்வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை அளவீடு செய்ய அணுகியபோது, மேல்மலையனுார் தாலுகா அலுவலக சர்வேயர்கள், இடைத்தரகர் மூலம் 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்களாம். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்து, 2 அதிகாரிகளுமே கைதானார்கள்.


அதேநாளில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்ஊழியர் கைதானார்.. தெருவிளக்கு அமைக்க மின் கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு பெறவேண்டி, ஆன்லைனில் மின்வாரிய சேத்துப்பட்டு நிர்வாக பொறியாளருக்கு ராமகிருஷ்ணன் என்பவர் விண்ணப்பித்திருக்கிறார்.

இந்த இணைப்பு சம்பந்தமாக சேத்துப்பட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர் சிவப்பிரகாசத்திடம் அணுகி விசாரித்தற்கு 6 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இறுதியில் மின்ஊழியர் கைதானார்.

கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில், சுமதி என்ற பெண் அதிகாரி லஞ்ச புகாரில் சிக்கியிருந்தார். அதாவது, அருள்குமார் என்பவர், புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு பிறகு, வட்ட வழங்கல் அலுவலர் சுமதியிடம் அணுகி, புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுக்கு ஒப்புதல் வழங்குமாறும் கேட்டாராம்.. அதற்கு சுமதி, ரூ.3 ஆயிரம் தந்தால்தான் ஒப்புதல் வழங்குவேன் என்று கறாராக கேட்டிருக்கிறார்.

கடைசியில் இவரை பற்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் அருள்குமார் புகார் தரவும், இறுதியில் கையும் களவுமாக சிக்கினார் சுமதி.. வரும் 31ம் தேதியுடன் சுமதி பணிநிறைவு பெறவிருந்தாராம்.. ஆனால், அதற்குள் இப்படியொரு புகாரில் சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்.

அதேபோல, திருவண்ணாமலையில் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் தி.மலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


சாரோன் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் ஏஎல்சி பள்ளி நிர்வாகம் நியமித்த ஆசிரியையை அங்கீகரிக்க, துணை ஆய்வாளர் தனது மனைவியின் வங்கி கணக்கு மூலமாக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த லஞ்ச புகார்கள் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஆந்திர மாநில எல்லையில், லஞ்சம் வாங்கிய போக்குவரத்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியரிடம் லஞ்சம் கேட்டு வாங்கியதாக தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநரை மாநில ஊழல் தடுப்புப் பணியகத்தின் (ஏசிபி) புனே பிரிவு கைது செய்துள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எழுத்தரிடம் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தாததற்காகவும், அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யவும், துணை இயக்குனர் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாராம்.. தனியார் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு, இந்த லஞ்சப் பணத்தை வாங்கும்போது ஏசிபி போலீஸார் பொறி வைத்து பிடித்துள்ளது, மிகுந்த பரபரப்பை தற்போது ஏற்படுத்தி வருகிறது.


நெசவாளர்களின் குழந்தைகள் உயர்கல்விப் பயில 22 ஆண்டுகளாக மக்கள் நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என்று போராடியும் நடவடிக்கை இல்லை..??

வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட குடியாத்தம் பிச்சனூர் கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துமாறு 22 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், 'தரம் உயர்த்துவதற்கான வாய்ப்பில்லை' என்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் அளித்துள்ள பதிலால் நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

விதிமுறைகளைத் தளர்த்தி நெசவாளர்களின் குழந்தைகள் உயர்கல்விப் பயிலும் வகையில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்ட ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியும், கல்வித் துறை அலுவலர்கள் அலட்சியத்துடன் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குடியாத்தம் நகரின் இதயப் பகுதியான பிச்சனூரில் நெசவாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கங்கதாரசாமி மடாலயத் தெருவில் நகராட்சி ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. 1972-ஆம் ஆண்டில் பிச்சனூரில் இதற்கான இடமும், கட்டடத்தையும் தெருவாசிகளே ஏற்படுத்தி நகராட்சிக்கும் கல்வித் துறைக்கும் ஒப்படைப்பு செய்தனர். இந்தப் பள்ளி பின்னர் 2000-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து, பட்டதாரிகளாகி பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். மத்திய, மாநில, தனியார் நிறுவனங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இருந்துவருகின்றனர். இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று 22 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். எட்டாம் வகுப்பு படித்து முடித்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்ல வேண்டும் எனில், தனியார் பள்ளிகளை நாடும் சூழல் உள்ளது. அங்கு பல்லாயிரம் ரூபாயை இழக்க வேண்டியுள்ளதால் பலரும் இடைநிற்றல் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இதுதவிர, நன்கொடைக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கும் நெசவாளர்கள் தள்ளப்படுகின்றனர். இந்தச் சூழலில் 2003-ஆம் ஆண்டு முதல் பள்ளியை உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். பங்களிப்புத் தொகையான ஒரு லட்சம் ரூபாயை 2015-இல் மக்கள் செலுத்தினர். இதுவரையில் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. 2006-11 திமுக ஆட்சியின்போது, குடியாத்தம் நகருக்கு வருகை தந்த அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக் குழுவினர் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி கருத்து அடங்கிய புத்தகத்தையும் அளித்துள்ளனர். அதிமுக ஆட்சியின்போது, 2012-இல் இந்தப் பள்ளிக்கு வருகை தந்த வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் மனு அளிக்கப்பட்டதாகவும், மூன்றாவது நாளே கல்வித் துறை அமைச்சராக மாறுதலாகியும், அவர் வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 'பள்ளிக்கு விளையாட்டு மைதானம் வசதி இல்லை' என்ற காரணத்தைக் கூறி அரசு தட்டிக் கழிப்பதாக வேதனையுடன் கூறும் பெற்றோர்கள், 'அருகேயுள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை கல்வித் துறைக்கு வாடகை அடிப்படையில் அறநிலையத் துறை அளித்து பள்ளியைத் தரம் உயர்த்தலாமே' என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், பள்ளியைத் தரம் உயர்த்தக் கோரி டிசம்பர் 2-ஆம் தேதி பிச்சனூர் காமராஜர் சிலை அருகே புதிய நீதிக் கட்சியின் நகரச் செயலாளர் கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ், பள்ளியின் முன்னாள் கல்விக் குழுத் துணைத் தலைவர் கோ.ஜெயவேலு ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. போராட்டத்தில் அதிமுக நகரச் செயலாளர் ஜே.கே.என்.பழனி, காங்கிரஸ் நெசவாளர் அணி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எம்.தேவராஜ், வழக்கறிஞர்கள் எஸ்.சம்பத்குமார், என்.குமார், ஜே.தியாகராஜன், சுதாபிரபு, பாரத், வடிவேல், குப்பம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.டி.மோகன்ராஜ், பி.எம்.தினகரன், வி.ஜி.பழனி, ராமசந்திரன், பூங்கோதை, ராணி, அமமுக நகரச் செயலாளர் சங்கர், பாமக நகரச் செயலாளர் குமார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் குபேந்திரன், புதிய நீதிக் கட்சியின் நிர்வாகிகள் தி.பிரவீன்குமார், ஜி.குமரவேல்,எஸ்.வெங்கடேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜே.நேரு, கே.கோதண்டன், சரத்சந்தர், எழுத்தாளர் முல்லைவாசன், கம்யூனிஸ்ட் நிர்வாகி கே.முருகானந்தம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக, வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி., ஐஏஎஸ்., அவர்களையைச் சந்தித்து கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ் தலைமையில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்ற எம்எல்ஏ அமலு விஜயன் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து, 'பள்ளியைத் தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் அரசு விரைந்து செயல்பட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சருடனான சந்திப்பின்போது, கைத்தறிக் காவலன் ரமேஷ், சமூக ஆர்வலர் கோ.ஜெயவேலு மற்றும் சர்வக் கட்சியினரும் உடனிருந்தனர். ஆட்சியாளர்களிடம் நேரில் மனுக்கள், நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என்று போராடியும் நடவடிக்கை இல்லை என்று போராட்டக் குழுவினரின் மிகவும் வேதனையுடன் கூறுகின்றனர். 
இந்த நிலையில், டிசம்பர் 21-ஆம் தேதி பள்ளியின் மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டம் நடத்த குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக, எம்எல்ஏ அமலு விஜயன், நகராட்சி சேர்மன் எஸ். செளந்தரராஜன், முன்னாள் சேர்மன் த.புவியரசி, நகராட்சி கவுன்சிலர்கள் டி.பி.என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, அர்ச்சனா நவீன், கே.எம்.ஏகாம்பரம், எம்.செளந்தரராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து அழைப்பிதழ்களையும் தயார் செய்திருந்தனர் குழுவினர். இந்தக் கூட்டம் நடத்தினால், பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கும் பிரச்னை எழக் கூடும் என்றும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தனது செயல் வெளிப்பட்டுவிடும் என்றும் அச்சம் அடைந்த தலைமை ஆசிரியை கீதா அன்றைய தினம் விடுப்பு எடுத்துவிட்டு, வீட்டிலேயே இருந்துவிட்டார். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, அணைக்கட்டு எம்எல்ஏவும் வேலூர் மாவட்ட திமுக செயலாளருமான ஏ.பி.நந்தகுமாரை எஸ்.ரமேஷ் சந்தித்து, பள்ளியை தரம் உயர்த்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். 

இந்த நிலையில் 2025 ஜனவரி மாதத்தில் முதல் வாரத்தில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், பேரவைக் கூட்ட தொடர் நாளன்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஸை புதிய நீதிக் கட்சி நகரச் செயலாளர் எஸ்.ரமேஷ், 
கோ.ஜெயவேலு, வெங்கடேன் மற்றும் பலர் நேரில் சந்தித்து நினைவூட்டல் கடிதத்தையும் அளித்தனர். பின்னர், பாமக கவுரவத் தலைவரும் பாமக சட்டப் பேரவைக் குழு தலைவருமான ஜி.கே.மணியையும் எஸ்.ரமேஷ் சந்தித்து, 'தான் பாமக நகரச் செயலாளராக இருந்துபோது, முதன்முதலாக தொடங்கிய போராட்டம் இது. இந்தப் பள்ளியை தரம் உயர்த்தும் பிரச்னைக்கு சட்டப் பேரவையில் பேசி வலியுறுத்த வேண்டும்' என்றும் இந்த விவகாரத்தில் அப்போது பாமக மாவட்ட செயலாளராக இருந்த வக்கீல் என்.குமார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், ஆதரவு குறித்தும் விளக்கினார். இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் எம்எல்ஏவுமான கே.செல்வபெருந்தகையை  காங்கிரஸ் நெசவாளர் அணியின் முக்கிய நிர்வாகியான கோ.ஜெயவேலு சந்தித்து, நெசவாளர்களின் 
பிள்ளைகளின் உயர்கல்வி பயிலும் வகையில் கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். 
இதைத் தொடர்ந்து. சட்டப் பேரவை கேள்வி நேரத்தின்போது, பள்ளியை தரம் உயர்த்துவதன் அவசியம் குறித்து எம்எல்ஏ அமலு விஜயன்  பேசினார். இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், தரம் உயர்த்த 
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என பேசியிருந்தார். 

இந்த நிலையில் எஸ்.ரமேஷுக்கு, 
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் 3.1.2025-அன்று தேதியிட்டு அனுப்பியுள்ள பதில் மனுவில், 'குடியாத்தம் நகராட்சி பிச்சனூர் பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 மாணவர்கள் பயில வேண்டும். ஆனால் இங்கு 12 மாணவர்களே பயின்று வருகின்றனர். மேலும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மற்றொரு உயர்நிலைப் பள்ளிக்கு குறைந்தபட்சம் ஐந்து கி.மீ. தூரம் இருக்க வேண்டும். ஆனால் இப்பள்ளியை சுற்றி  5 கிலோமீட்டருக்குள் 3 மேல்நிலைப் பள்ளிகளும் ஒரு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நகராட்சி பகுதியில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமானால் 10 கிரவுண்ட் இடவசதி இருக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளிக்கு 1500 சதுர அடி காலி மனை மட்டுமே உள்ளது. எனவே இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த விதிகளில் வழிகள் இல்லை' என்று கூறியிருக்கிறார். இந்தக் கடிதத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், கோ.ஜெயவேலு ஆகிய இருவரும்  தங்களது தலைமையில் நெசவாளர்கள்,  பெற்றோர்கள் சிலரை அழைத்து கொண்டு வேலூர் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமியிடம் சென்று முறையிட்டனர். அப்போது, இந்தப் பள்ளி தரம் உயர்த்தினால், ஆறாம் வகுப்பில் மாணவர்கள் தொடர்ந்து படிப்பார்கள் என்றும் ஒன்பதாம், பத்தாம் வகுப்புகள் இல்லாததால்தான் ஆறாம்வகுப்பிலேயே மாணவர்கள் வேறு பள்ளிக்குச் சென்றுவிடுகின்றனர் என்றும் மேலும் பலர் ஒன்பதாம் வகுப்பில் வேறு பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஏற்படுகிறது என்றும் விதிமுறைகளைத் தளர்த்தி இந்தப் பள்ளியைத் தரம் உயர்த்த உரிய நடவடிக்கையை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்றும் முறையிட்டனர். இதைக் கேட்ட மாவட்ட ஆட்சியாளர் சி.இ.ஓ.வை அழைத்து இந்த மனு குறித்து விரைவான விசாரணை நடத்தி, பள்ளியைத் தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, 
கே.செல்வப்பெருந்தகை, ஏ.பி.நந்தகுமார், அமலு விஜயன், நகராட்சி சேர்மன் எஸ்.செளந்தரராசன், முன்னாள் சேர்மன் த.புவியரசி, நகராட்சி கவுன்சிலர்கள் டி.பி.என்.கோவிந்தராஜ், ஏகாம்பரம், அர்ச்சனா நவீன், சி.என்.பாபு என்று பல ர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், பள்ளி தரம் உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த நெசவாளர்கள் கல்வித்துறையினர் உத்தரவால் பெரிய அதிர்ச்சியை அடைந்துள்ளனர். 

ஒரே வளாகத்தில் நெல்லூர்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியும், நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியும் இயங்குகிறது இது எப்படி சாத்தியம் என்று நெசவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல், குடியாத்தம் நகரின் தெற்கு பகுதியில் நெல்லூர்பேட்டையிலேயே இரு அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஜோதி மேல்நிலைப் பள்ளி, சந்தப்பேட்டையில் வள்ளலார் மேல்நிலைப் பள்ளி என ஒரு கி.மீ. சுற்றளவிலேயே நான்கு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கிவருகிறது. இதேபோல், நடுப்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நேஷனல்நிதியுதவி மேல்நிலைப் பள்ளி என 100 மீட்டர் சுற்றளவுக்குள் இயங்கி வருகிறது. இதெல்லாம் கல்வித்துறைக்கு தெரியாதா? என்ற நெசவாளர்கள் கேள்வி எழுப்புள்ளனர். கங்காதசாமி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தும் விவகாரத்தில், ஆட்சியாளர்களே உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று நெசவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரூ.12.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குனர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடி கைது!

நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் வள்ளல் (54 வயது). கோவையைச் சேர்ந்த இவர், நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்குவாரி உரிமையாளர்களிடம் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கோவைக்கு புறப்பட இருந்தார். இது குறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி மற்றும் போலீசார், கல்குவாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புவியியல் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளலை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கட்டுகட்டாக ரூ.12.5 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை, காரில் எடுத்து சென்ற நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளலிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் வள்ளல் (54 வயது). நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கல் மற்றும் மண் குவாரிகள் உள்ளன.

அதன் உரிமையாளர்களிடம் இருந்து, உதவி இயக்குனர் வள்ளல், வாரம் தோறும் குறிப்பிட்ட தொகையை மாமூலாக வசூல் செய்வதாகவும், தற்போது, பொங்கல் பண்டிகையைய்யொட்டி, அதிக அளவில் வசூல் செய்துள்ள பணத்தை எடுத்துக் கொண்டு, தனது சொந்த ஊரான கோவைக்கு காரில் செல்வதாகவும், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

அதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையில், காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், 14.01.2025 அன்று இரவு 7 மணிக்கு, நாமக்கல் – திருச்செங்கோடு ரோட்டில், நல்லிபாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக, நாமக்கல்லில் இருந்து கோவைக்கு சென்ற நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலின் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் ஒரு பையில் ரூ. 12.50 லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து, அவரிடம் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதையடுத்து, அவர் வைத்திருந்த கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பேர்ணாம்பட்டு நகராட்சியில் கட்டிட வரைபட அனுமதி பெறாமல் ஒரு சிலர் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களால் தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம்!

பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட ஒண்ணாவது வார்டு கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க நகர மன்ற உறுப்பினர் ஒய்.அதீகுர் ரஹ்மான். கோரிக்கை விடுத்து வருகின்றார். பேரணாம்பட்டு ஜனவரி 15 பேரணாம்பட்டு ஒன்னாதவாடு நகர மன்ற உறுப்பினர். ஒய்.அதீகுர் ரஹ்மான் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா.சுப்புலட்சுமி, ஐஏஎஸ்., அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- பேர்ணாம்பட்டு ஒண்ணாவது வார்டு குப்பைமேடு தரைக்காடு பகுதிகளில் கட்டிட வரைபட அனுமதி பெறாமல் ஒரு சில கட்டப்பட்டு வரும் கட்டிடங்களால் தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதில் நகராட்சி ஆணையாளர். வேலவன். கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறார். நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் கட்டிட உரிமை ஆளர்கள் மீதும் அதற்கு துணை போகும் நகராட்சி ஆணையாளர். வேலவன். கட்டிட ஆய்வாளர்கள் போன்ற அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு மனுவில் கூறப்படுகிறது.

ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, குடியாத்தம் சாலையில் கிளித்தான்பட்டறை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராகவேந்திரர் ஆலயம். இந்த ஆலயத்தில் வியாழக்கிழமைகள் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி  அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல பக்தர்கள் கோயிலில் அமர்ந்து மௌனமாக தியானத்தை மேற்கொண்டனர். இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மோதிலால் செய்திருந்தார்.

காட்பாடி சேவூர் கிராமத்தில் விருட்சம் தொண்டு நிறுவனம் சார்பில் பொங்கல் விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி சேவூர் கிராமத்தில் விருட்சம் தொண்டு நிறுவனம் சார்பில்  பொங்கல் விழா விருட்ச்சம் தொண்டு நிறுவனம் நிறுவனர் கோமளா காசிராஜன் தலைமையில் நடைபெற்றது இதில்  பரிசு பொருட்கள், இனிப்புகள், வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காட்பாடி சேவூர் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

வேலூர் ஸ்ரீ நாராயணி பீடத்தில் காமதேனு மகாயாகம்: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!

வேலூர் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ஸ்ரீபுரம் தங்கக் கோயில் யாகசாலையில் காமதேனு மகாயாகம் நடந்தது. இந்த மகா யாகத்தை முன்னிட்டு ஸ்ரீபுரம் தங்கக் கோயில் யாக சாலையில் ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் காமதேனு மகாயாகம் மிக விமரிசையாக நடந்தது. இதில் ஸ்ரீசக்தி அம்மா கலந்து கொண்டு பசுக்களுக்கு பொட்டு வைத்து ஆரத்தி காண்பித்து, பழ வகைகளை உண்பதற்கு கொடுத்து அவற்றை ஆசுவாசப்படுத்தினார். இதை தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் மற்றும் வெளிநாடு வாழ் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பசுக்களை வணங்கி காமதேனு மகா யாகத்தில் பங்கேற்று தங்களது பங்களிப்பை அளித்து இந்த காமதேனு மகா யாகத்தை மேலும் மெருகூட்டினர். இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிரசாதங்களை விநியோகம் செய்தார்.

கடல் தாண்டிய தமிழர்களின் பொங்கல் விழா!

கத்தாரிலுள்ள மிகப் பெரியக் குழுவான 'தமிழ்ப் சிங்கப் பெண்கள் சமூகம்', கத்தார் புனே பல்கலைக் கழக அரங்கில் பாரம்பரிய பொங்கல் விழாவை பிரமாண்டமாக நடத்தியது. 

கத்தார் சிங்க பெண்கள் கமிட்டி பெண்களே நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம். இந்த மாபெரும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்துகொண்டனர். 
இந்த பொங்கல் விழாவில் குழந்தைகள், பெண்கள், குடும்பத்தினருக்கான பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நிறைந்தது. கோபி வரதன், டெல்லி பப்ளிக் பள்ளியின் இயக்குநர், டாக்டர் கிம்ஸ் ஹெல்த் தலைமை மருத்துவ அதிகாரி நௌஃபல் ரிஸ்வான் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டனர். டெல்லி பப்ளிக் பள்ளியின் தலைமை தமிழ்த் துறையின் ஆசிரியை வாசுகி சிறப்புரையாற்றினார். சிங்க பெண்கள் குழுவினர் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் பாராட்டு விழாவை வழங்கினர். விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Tuesday, 14 January 2025

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் எஸ்.பி. மதிவாணன் தலைமையில் பிரம்மாண்டமான பொங்கல் விழா.. மாவட்ட ஆட்சியாளர் பங்கேற்பு!!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, நேதாஜி மைதானம், வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் அரசு துறைகளில் யாரும் நடத்திடாத வகையில் அனைவரையும் குடும்பத்துடன் வரவேற்று வரவைத்து பிரம்மாண்டமான முறையில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஐபிஎஸ்., தலைமையில் பொங்கல் விழாவானது நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி, ஐஏஎஸ்., பங்கேற்று சிறப்பித்தனர். இதில் காவல்துறையினரும் குடும்பத்தினருடன் பங்கேற்று உற்சாகமாக பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கோஷங்களை எழுப்பி, பாரம்பரிய சிறப்பு பூஜைகள் செய்து மகிழ்ச்சியுடன் பொங்கலிட்டனர். மேலும், மியூசிக்கல் சேர், குதிரை சவாரி, சிலம்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளுடன், குழந்தைகள் விளையாட ஸ்லைடர், பலூன் சுடுதல் போன்றவற்றையும், குடும்பத்துடன் வருகை புரிந்த அனைவருக்கும் வரவேற்பை சிறப்பிக்கும் வகையில், டீ, காபி, சமோசா, பொங்கல் என்றாலே சிறப்பு வாய்ந்த கரும்பு, ஐஸ்கிரீம், பானி பூரி, மசால் பூரி, பாப்கான், பஞ்சு மிட்டாய் என தனித்தனி அமைப்பில் பல்வேறு ஸ்டால்கள் அமைத்து இதுவரை அரசு துறைகளில் யாரும் நடத்திடாத வகையில் பிரம்மாண்டான முறையில் அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கி, உண்மையான மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து பத்திரிகை ஊடகங்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

சேலம் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வாரிசு வேலை கேட்டு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பிரண்டு கைது!

"25 வயதுடைய" இளம்பெண் ஒருவர் தன்னுடைய தந்தை பேரூராட்சி நிர்வாகத் துறையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வாரிசு அடிப்படையில் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 25 வயதாகிறது. இவரது அப்பா தூய்மைப் பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில்  விண்ணப்பித்துள்ளார். இதற்காக மண்டலப் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவராஜனையும் சந்தித்து பேசியிருக்கிறார் அந்த இளம்பெண்.

ஆனால் கண்காணிப்பாளர் தேவராஜன் அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, பாலியல் தொல்லை தர துவங்கியதுடன், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது செல்போனில், தேவராஜன் பேசியதை அப்படியே ரிக்கார்டு செய்து விட்டார்.. இதனையே ஆதாரமாக வைத்து, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவாக தந்துவிட்டார்.

இளம்பெண் ஆதாரத்துடன் தந்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார், கண்காணிப்பாளர் தேவராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அதில், அந்த பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொல்லை தந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பாளர் தேவராஜனை கைது செய்து, சேலம் ஜெயிலிலும் அடைத்திருக்கிறார்கள். 

காட்டு தர்பார் நடத்தி வசூல் வேட்டை பார்க்கும் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா ,சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் தமிழ்நாடு அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அதன் மூலம் கிராம நிர்வாக அலுவலராக தேர்வு செய்யப்பட்டார். இவர் குடியாத்தம் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக இவர் குடியாத்தம் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் தனக்கு வட்டாட்சியராக இருந்தாலும் சரி, கோட்டாட்சியராக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி நான் சொல்வதை தான் அவர்கள் கேட்க வேண்டுமே தவிர நான் அவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்று சங்க நிர்வாகிகளிடம் மார்தட்டிக்கொள்கிறார் ஏன் கொக்கரிக்கிறார் என்றே சொல்லலாம். இவர் வெளியில் ஒன்று பேசுவதையும் உள்ளே ஒன்று நடப்பதையும் மறைத்து பொதுமக்களிடம் தான் ஒரு பெரிய மனிதர் என்பதைப் போல் காட்டிக் கொள்கிறார். ஏனென்றால் இவரது உருவம் அப்படி உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது இவர் பரதராமி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேம் பள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது அந்த கிராமத்திலுள்ள புரோக்கர்களை கையில் வைத்துக்கொண்டு பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வந்தார். அதாவது அந்த கிராமத்திலுள்ள புரோக்கர் கோவிந்தன் என்பவர் மூலம் 13 வகையான சான்றுகளை வருவாய்த்துறை மூலம் வழங்குவதை பணமாக்கி கொண்டு இவர் வசூல் வேட்டை நடத்தி ஹாயாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வருவாய்த்துறை கண்டு கொள்ளாமல் விட்டதுதான் பெரிய தவறாக மாறி உள்ளது.  நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை பட்டா தருவதாக கூறி அவர்களிடம் ஒரு கணிசமான தொகையை வசூல் செய்து வசூல் வேட்டையாடியுள்ளார் இந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில். சேம் பள்ளி பகுதியில் ஈச்சங்குட்டை பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவு நீர் நிலை பகுதியை தனியார் ஒருவருக்கு பட்டா செய்து கொடுத்து இதன் மூலம் ஒரு கணிசமான தொகையை கல்லா கட்டியுள்ளார் இந்த கடமை வீரன் செந்தில். அதாவது இதில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு ஒன்றையும் சேர்த்து பட்டா செய்து கொடுத்துள்ளார் இந்த நேர்மை தவறாத கிராம நிர்வாக அதிகாரி செந்தில் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இதன் மீது அப்போதைய கோட்டாட்சியர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதிலிருந்து இவர் எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்டார் என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. தற்போது கூட நாங்கள் எங்கு விருப்பப்படுகிறோமோ அங்கு எங்களுக்கு இடமாற்றம் தருவார்கள். அது மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி, மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தாலும் சரி, கோட்டாட்சியராக இருந்தாலும் சரி, வட்டாட்சியராக இருந்தாலும் சரி என்று மார்கதட்டி கொள்கிறார் இந்த அதிகாரி என்று சொன்னால் அதுதான் உண்மை. இப்படி இவர் எங்கெங்கு என்னென்ன விரும்பத்தகாத பணிகளை செய்துள்ளார். எவ்வளவு புறம்போக்கு நிலங்களை (அரசுக்கு சொந்தமான சொத்துக்களை) தான்தோன்றித்தனமாக பணம் தருபவர்களுக்கு வாரி கொடுத்துவிட்டு இவர்களை மிரட்டி கல்லாகட்டி உள்ளது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேட்டால் என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனக்கு பின்னால் ஒரு பெரிய சங்கமே உள்ளது. எதற்கெடுத்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் என்று நாங்கள் அதில் ஈடுபடுவோம் என்று வருவாய் துறை உயர் அதிகாரிகளை மிரட்டி வருகிறார் என்பது இதில் ஒரு குறிப்பான விஷயமாக இங்கு கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஊராட்சி மன்ற தலைவருடன் சேர்ந்து கொண்டு பல மோசடிகளையும் இவர் செய்துள்ளார். இதை முறைப்படி ஆய்வு செய்தால் அந்த உண்மை என்னவென்பது வெளியில் வரும். குறிப்பாக ஈச்சங்குட்டை பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி அதில் உள்ள பகுதி சொத்துக்களை அபகரித்து பட்டா அளித்துள்ளார். சேம்பள்ளி ஊராட்சியில் ஒன்றரை ஏக்கர் புன்செய் நிலத்தை மாற்றுத்திறனாளியான ராமசாமி என்பவரது நிலத்தை யசோதா க/பெ. ஏகாம்பரம் என்பவருக்கு மாற்று பட்டா வழங்கி இவர்களை கட்டி உள்ளார். தற்போது இந்த கிராம நிர்வாக அலுவலர்  செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியாளர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகாரை முறைப்படி எழுத்து மூலமாக அளித்துள்ளனர். இதன் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். லஞ்ச லாவண்யத்திலேயே இவர் புரண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையை தெரிந்து கொண்ட அவர் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். குறிப்பாக புறம்போக்கு இடங்களை அளந்து பட்டா கொடுத்துவிட்டு அதில் கல்லா கட்டுவதை இவர் வழக்கமாகவே கொண்டுள்ளார். முதியோர் பென்ஷன் வழங்க வேண்டும் என்றால் அந்த சான்றிதழுக்கு ரூபாய் 5000 முதல் 10 ஆயிரம் வரையும், இலவச பட்டாக்களை வழங்குவதற்கு ரூபாய் பத்தாயிரம். அதேபோன்று இதர சான்றிதழ்களான வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுவதற்கு தலா ரூபாய் 2000 முதல் 50 ஆயிரம் வரையும், இறந்தவர்களுக்கு சான்றுகள் வழங்க வேண்டும் என்றால் 30 ஆயிரம் அநாவசியமாக இவர் வசூல் செய்து கொண்டே போகிறார். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை வேலூர் மாவட்ட ஆட்சியாளர் எடுக்க வேண்டும் என்று இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். இவரை வேறு மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெகு தொலைவிலுள்ள மாவட்டங்களுக்கு இவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சங்கம் இவருக்கு உதவ கூடாது என்றும் பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது இவருக்கு ஏதாவது  ஒரு பிரச்சனை என்றால் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் குடியாத்தம் வட்ட செயலாளர் வெங்கடாசலம் துணை இருப்பார் என்று இவர் வெளியில் சொல்லி தனக்கு ஆதரவு இருப்பதை சொல்லாமல் சொல்லி வருகிறார் என்கின்றனர் பொதுமக்கள். ஆதலால் வருவாய்த்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் இவர் மீது துறை ரீதியான விசாரணையை விரிவான விசாரணையாக நடத்தி அதில் கிடைக்கும் உண்மை தன்மையை வைத்து இவரை நீண்ட நெடிய தூரம் வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் அல்லது இவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கிராம நிர்வாக அலுவலருக்காக அரசு செயல்படுகிறதா? அல்லது பொதுமக்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறதா? என்பதை விஏஓ செந்தில் மீது எடுக்கும் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த நடுநிலையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருவாய்த்துறை அமைச்சர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மீது சாட்டையை சுழ
ற்றுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேலூர் மாவட்ட ஆட்சியாளர் செந்தில் மீது துறை ரீதியில் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிடுவாரா? என்பதற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை நாம் காத்திருப்போம்.

தர்மபுரி அரசு பள்ளிக்கூடத்தில் கழிவறையே சுத்தம் செய்த பழங்குடி மாணவிகள்.. தலைமையாசிரியை கலைவாணி சஸ்பெண்ட்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள அரசு பள்ளியில் பழங்குடியின மாணவிகளை வைத்து கழிவறை சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெருங்காடு மலைக்கிராமம் உள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை உள்ளது.

பள்ளியில் தலைமையாசிரியையாக கலைவாணி என்பவர் பணியாற்றினார். இவருடன் 5 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர்.
மலைக்கிராமம் உள்பட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. வீடியோவில், யூனிபார்ம் அணிந்த 3 மாணவிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மாணவிகள் கையில் துடைப்பம் வைத்து காலில் செருப்பு அணியாமல் சுத்தம் செய்தனர்.

இந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த மாணவிகள் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வீடியோவை பார்த்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிக்கு படிக்க வரும் மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதா? சம்பந்தப்ட்ட ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்தனர்.

அதேபோல் மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி ஆசிரியைகள் தான் மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வற்புறுத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது பள்ளி நிர்வாகம் மீது தான் தவறு இருப்பது தெரியவந்தது. அதோடு கழிவறையை சுத்தம் செய்ய மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியை கலைவாணியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.






அமைச்சரின் வீட்டின் முன் அடித்துக் கொண்ட ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்!நடவடிக்கை எடுக்காத அமைச்சர் துரைமுருகன்!

வேலூர் மாவட்டம், காட்பாடி 
பொருட்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொள்ள காட்பாடி இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு நீர்ப்பாசனம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் இல்லத்தின் முன்பு கடுமையாக மோதிக்கொண்ட ஒன்றிய குழு பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளரால் திடீர் பதட்டம் பரபரப்பு ஏற்பட்டது. காட்பாடி ஒன்றியக் குழு பெருந்தலைவராக இருப்பவர் வள்ளிமலை கிராமத்தைச் சார்ந்த வேல்முருகன். இவர் ஒரு நடமாடும் நகைக்கடல் ஆவார். காட்பாடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் கருணாகரன். இந்நிலையில் ஜனவரி 12ம் தேதியன்று மாலை அமைச்சரை பார்ப்பதற்காக கட்சிக்காரர்கள் அமைச்சர் இல்லத்தின் முன்பு குவிந்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு முன்பு வேலூர் வந்து சென்ற அமைச்சர் பல்வேறு அரசு பணிகளின் காரணமாகவும் அதை தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் காரணமாகவும் காட்பாடி இல்லத்திற்கு வருகை தராமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி வேலூர் வந்திருந்த அவரை காண்பதற்காக கட்சிக்காரர்கள் வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர்.
அந்த சூழ்நிலையில் அமைச்சரின் வீட்டின் முன் திடீரென்று வேல்முருகன் மற்றும் கருணாகரன் ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்து இழுத்து கொடூரமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்பொழுது கருணாகரன் வேல்முருகனை பார்த்து என்னை அடிக்கிறாயா! என்ன அடித்து கொன்று விடுவாயா! அடித்து புதைத்து விடுவாயா. என்னிடம் எதுவும் நடக்காது. அதை பெங்களூருவில் வைத்துக்கொள் என்று தாறுமாறாக பேசினார். இந்நிலையில் அங்கு கூடியிருந்த கட்சிக்காரர்கள் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். அமைச்சர் வீட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்த பின்பும் கருணாகரன் வேல்முருகனை பார்த்து பேசிக்கொண்டே இருந்தார்.
வேல்முருகனிடம் கருணாகரன் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றிருந்ததாக  கூறப்படுகிறது. அதில் சுமார் ரூ.70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் மீதியுள்ள ரூ. 30 லட்சத்தை கேட்ட போது வேல்முருகனை பார்த்து உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று கருணாகரன் தாறுமாறாக பேசியதால் இருவருக்கும் இடையில் ஏற்கனவே மோதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக அமைச்சர் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
காட்பாடி வட்டம், வள்ளிமலையைச் சேர்ந்த வேல்முருகன் பெங்களூருவில் ஆயில் பிசினஸ் பார்த்துக் கொண்டிருந்தார். கட்சிப் பணியில் எந்த தொடர்பும் இல்லாத அவரை நேரடியாக வேலூர் எம்பி கதிர்ஆனந்த் அழைத்து அவருக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுத்து  ஒன்றியக் குழு பெருந்தலைவராகவும் ஆக்கிவிட்டார் என்ற அதிருப்தியும் கட்சிக்காரர்களிடம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கருணாகரன் மீதும் உள்ளாட்சி பிரமுகராக இருந்தபோது ஏரியில் வண்டல் மண் எடுப்பதில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாகவும் கட்சிக்காரர்களை எந்த வகையிலும் கவனிக்கவில்லை என்ற குற்றசாட்டும் கூறப்படுகிறது. மேலும் வேல்முருகனின் அடாவடித்தனம், கட்சிக்காரர்களை மதிக்காதது, மூத்தவர்களிடம் சரிவர நடந்து கொள்வதில்லை என்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 
மேலும் கட்சிக்காரர்கள் அவரைப் பற்றி  நீ ஒன்றும் கழகத்தில் முளைத்த செடி அல்ல பிடுங்கி நட்ட மரம் என்று ஒரு கருத்தையும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை இப்படி இருக்க 12ம் தேதி அமைச்சரை பார்த்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதற்காக வந்திருந்தவர்கள் முன்னிலையில்  இவர்கள் இருவரும் மோதிக் கொண்ட விஷயம் முகச்சுளிப்பையும் அதிருத்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் திமுக எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் வேல்முருகன் மீது எடுக்காமல் அவருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்ட திமுகவினர் மீது சாட்டையை சுழற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மண்டலக்குழு தலைவர் இனிப்பு பொங்கல் வழங்கினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 13.01.2025 அன்று வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா, தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. 
வேலூர் மாநகராட்சியின் ஒன்றாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 1300 மாணவிகளுக்கு சர்கரை பொங்கல் வழங்கினார். 

இந்த நிகழ்வின் போது ஜுனியர் ரெட்கிராஸ் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா லோகநாதன், சித்ராமகேந்திரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.தாமஸ் எ சதீஸ்குமார், பள்ளி கட்டிட குழு உறுப்பினர் ஜி.லோகநாதன் பெற்றோர் ஆசிரியர் கழக மகேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுகந்தி பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள் கே.திருமொழி, பி.ரோசலின் பொன்னி ஜி.கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
        
ஆசிரியர்கள் எஸ்.வெங்கடேசன், அனிதா, அன்னபூரணி, பி.கணேசன், எம்.கலைவாணி, ஜெ.ஷீபாராணி, பிரேமலதா, உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி வளாகம் முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் தூய்மை படுத்தப்பட்டு பள்ளி மாணவிகள் அனைவரும் இணைந்து வண்ண வண்ண கோலமிட்டு செங்கரும்பு வைத்து புதுப்பாணையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என வின்னதிர முழங்கி சமத்துவ பொங்கலை கொண்டாடினர். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து வருகை தந்தனர்.

காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்ப அகாடமியின் சார்பில் பொங்கல் விழா!

வேலூர் மாவட்டம், தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு, சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியில், சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகள்,  பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், பரதம், இசைக்கருவி வாசித்தல், பாட்டு போட்டி , பேச்சு போட்டி , திருக்குறள் ஒப்புவித்தல் முதலான தனித்திறமைகளை, சிங்கத்தமிழன் சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகள் வெளிகாட்டி பரிசுகள் பெற்றனர். மேலும், மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் உரி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய கிராமத்தில் போலீசார் அத்துமீறல்.. விரட்டி விரட்டி கைது!

விழுப்புரத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை போலீசார் விரட்டி விரட்டி அடாவடியாக கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு மாதம் கழித்து போலீசார் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் மழையின் போது விழுப்புரம் மாவட்டம், கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது. அப்போது, விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு கிராமங்களை பார்வையிட வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். அப்போது அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மீதும், அவரது மகன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை வீசினர். இந்த சம்பவத்தில் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், போலீசார், இருவேல்பட்டு கிராமத்திற்குச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க ஓடியவர்களை போலீசார் விரட்டி விரட்டிக் கைது செய்துள்ளனர். நடவடிக்கை எடுக்கிறோம் என கிராம மக்களை துன்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொன்முடி மீது சேறு வீசப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தில் போலீசார் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சித்துள்ளார். "பொன்முடி வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஏழுமலை என்ற நபரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி போலீசார் மிரட்டுகின்றனர். நாட்டில் வேறு பிரச்சனையே இல்லையா?

பொன்முடி சட்டையில் சேறு பட்டது தான் நாட்டின் பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்சனையா? இதே வேகத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை விசாரித்து இருந்தால் "யார் அந்த சார் ?" என கண்டுபிடித்து இருக்கலாம். இருவேல்பட்டு கிராமத்தோடு முடியவேண்டிய பிரச்சனையை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்ற விரும்புகிறாரா அமைச்சர் பொன்முடி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...