Friday, 8 November 2024

கொளுத்தும் வெயிலில் லுங்கியுடன் தியானத்தில் அமர்ந்த மது பிரியர்.. மதுப்படுத்தும் பாடு..!!

திண்டுக்கல்லில் மது பிரியர்களால் கடந்த சில நாட்களாகவே போக்குவரத்து பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி பகுதியில் சாலையின் நடுவில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டிவைடர் மேல் ஏறி அறை நிர்வாணத்தில் மது பிரியர் ஒருவர் தியானம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட மது கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

அது மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளில் f2, f4 உரிமம் பெற்ற பார்கள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர விடுதிகளில் மது கூடங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நேரம் மதுக்கடைகள் மட்டும்தான் திறந்து இருக்காது என்றிருந்தாலும் மது வகைகள் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையிலேயே இருக்கிறது என்று கூறப்படுகிறது.

சில்லிங் எனப்படும் சட்ட விரோத மதுபான விற்பனை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் பார்கள், பெட்டிக்கடைகள் உள்ளிட்டவற்றில் கூட சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறது. 

திண்டுக்கல்லிலும் பல இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு அலப்பறை செய்யும் குடிமகன்களால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்திக்கின்றனர். மேலும் சாலைகளில் அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே கிடையாது.

அப்படிதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வாணி விலாஸ் அருகே முத்தழகுபட்டு பகுதியைச் சேர்ந்த குறவா என்ற செபஸ்தியார் குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தை நடுவில் நிறுத்தி மற்ற வாகனங்களை செல்ல விடாமல் தடுத்தார். மேலும் துண்டை விரித்து நடுரோட்டில் படுத்து அட்டகாசம் செய்ததால் இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனை எடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் செபஸ்தியாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதேப்போல திண்டுக்கல் கோட்டூர் ஆவாரம்பட்டி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் தான் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி பால்பாண்டி என்பவர் ஓசியில் மதுபானம் கேட்டு இரும்பு கம்பியை உடைத்தார். மேலும் டாஸ்மாக் ஊழியரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களை வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு நாளும் மது அருந்திவிட்டு குடிமகன்கள் செய்யும் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்திருக்கும் நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆனால் அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டாஸ்பத்திரி உள்ளது.

அதற்கு எதிர்ப்புறம் அரசு டாஸ்மாக் மது கடையும் தனியார் மதுக்கூடமும் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் அங்கு மது அருந்திய குடிமகன் ஒருவன் சாலை நடுவில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென டிவைடரில் ஏறினார். மேலும் தனது சட்டையையும் கழட்டி வீசிவிட்டு அரை நிர்வாணமாக அங்கு அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை கீழே இறக்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...