பிரசவத்தின்போது கர்ப்பஸ்திரிகளின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இது வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக பிரசவத்தின்போது கர்ப்பஸ்திரிகளின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. தமிழ்நாடு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதும் இதற்கு ஒரு ஒரு காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த 20 வருடங்களில் தமிழ்நாட்டில் கர்ப்பஸ்திரிகளின் இறப்பு விகிதம் (MMR) அதிகரித்துள்ளது' என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த கர்ப்பஸ்திரிகளின் இறப்பு விகிதம் (MMR) கடந்த 2018-20ல் 54 ஆகக் குறைந்து தற்போது 2023-24ல் 45.5 ஆக குறைந்தே இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கர்ப்பஸ்திரிகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகப் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரமாக, மத்திய அரசின் சார்பில் மாநில வாரியாக வெளியிடப்பட்ட கர்ப்பஸ்திரிகளின் இறப்பு விகிதம் (MMR) பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment