தனக்கு தானே கோவில் கட்டி, அந்த கோவிலில் நான் தான் கடவுள் என்று கூறி அருள்பாலித்து வரும் பெண் சாமியாரால் சர்ச்சை...!!
கடவுளின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றும் அன்னபூரணி அரசு அம்மா என்பவரை மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல், பிரிவினரிடையே மோதலை உண்டாக்கத் தூண்டுதல், மதங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல் புரிதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர் சமூக ஆர்வலர்களும், இந்து அமைப்பினரும். இந்தப் பெண் போலிச் சாமியாரை தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபல பெண் போலி சாமியார் அன்னபூரணி அரசு, தற்போது 3வது திருமணம் செய்து கொண்டார். ஆன்மீகத்திற்கு தன்னை அர்ப்பணித்த ரோகித் என்பவரை திருமணம் செய்துள்ளார். இனி இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக அருள் வழங்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
பிரபல சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரனி. இவர் தனக்கு தானே கோவில் கட்டி, அந்த கோவிலில் நான் தான் கடவுள் என்று கூறி அருள்பாலித்து வருகிறார். ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த இவர் அரசு என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அரசு இறந்துவிட்டதால் அவருக்கு சிலை அமைத்து அவரை அன்னபூரனி வழிபட்டு வந்தார். இந்த நிலையில் 3வதாக ரோகித் என்பவரை அன்னபூரனி திருமணம் செய்துள்ளார். தெய்வீக திருமணம் என பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் "அன்னபூரணி அரசு அம்மன்" என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார் அன்னபூரணி. தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு அன்னபூரணி அரசு அம்மனாக தன்னை மாற்றிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். கடந்த 2014 ஆம் வருடம் தனது கணவர் மற்றும் 14 வயது பெண் குழந்தையை பிரிந்து, முறையாக நீதிமன்றத்தை நாடி விவாகரத்து வாங்காமல், கள்ளக்காதலனான அரசு என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதில் கள்ளக் கணவரான அரசுவும் உயிரிழந்து விட்டதால், அவரது நினைவாக அரசுவின் உருவ சிலையை வடிவமைத்து கடவுளாக வழிபட்டு வந்தார். இதன் பிறகு தான் செங்கல்பட்டில் 'அன்னபூரணி அரசு அம்மன்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தினார். மேலும் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அன்னபூரணி தனது ஆன்மிக சொற்பொழிவை யூடியூப் மூலமாக நடத்தி வந்தார். மேலும் திருவண்ணாமலையில் கீழ்பென்னாத்தூரில் ராஜா தோப்பு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு ஆசிரமம் அமைத்தார். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இடம் தேடி அலைய வேண்டியிருக்கிறது. இதனால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து இங்கு தான் இடம் வாங்க முடிந்தது. இனிமேல் இங்கு தான் ஆன்மிக பணியை தொடருவேன் எனக் கூறியதுடன், இனியாருக்கும் அருள்வாக்கு சொல்ல மாட்டேன். ஆன்மிகத்தை மட்டும் தான் சொல்வேன் என்று அன்ன்பூரணி கூறியிருந்தார். மேலும் அரசு என் கடவுள் என்று கூறி அவருக்கு சிலை அமைத்ததாகவும் கூறினார். தொடர்ந்து நான் சாமியார் கிடையாது கடவுள் என்று தனக்கு தானே கோவிலை கட்டினார். இந்த கோவிலில் சாமியாக அவரது சிலையையே வடிவமைத்தார். மேலும் பூஜை செய்வது அனைத்தும் தனக்கே செய்துகொண்டார்.
குறிப்பாக இவர் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தில், அன்னபூரணியே அம்மன் போல சேலை, அணிகலன்கள் அணிந்து கொண்டு அம்மனாக காட்சியளித்தார். அபிஷேகமும் அம்மன் வேடமிட்டிருந்த அன்னபூரணிக்கே செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிலும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு அன்னபூரணி அம்மாவிடம் ஆசி பெற்றனர். ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்துக் கொண்டு பாத பூஜை செய்து காலை தொட்டு சூடம் ஏற்றி வழிபட்டனர். சம்பவமும் அரங்கேறியது.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதள பக்கங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, மூன்றாவது திருமணமாக பெண் போலிச் சாமியார் ரோகித் என்பவரை திருமணம் செய்யப் போவதாக சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார். எனது கணவர் அரசு என்பவரை திருமணம் செய்த அதே 28 ஆம் தேதியன்று தான் இந்த திருமணம் நடக்க இருக்கிறது. ரோகித் என்பவரும் ஆன்மிகத்துக்காக தன்னையே அர்பணித்து கொண்டவர் தான்.
மேலும் அன்றைய தினம் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்று செல்லுங்கள்" என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது அன்னபூரணி - ரோகித் திருமணம் நடைபெற்றது. இது அன்னபூரணிக்கு 3 வது திருமணம் ஆகும். தெய்வீக திருமணம் என்ற பெயரில் திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரில் இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில், இனி இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், அன்னபூரணி அம்மா ஆசி வழங்குகிறார்.. திரளாக வாருங்கள்.. அம்மா அவதரித்து விட்டார்'' என கடந்த வாரம் சமூக வலைதளங்களில் இந்த செய்திதான் ஹாட்டாபிக். செங்கல்பட்டு மாவட்டத்தில் அம்மா ஆடி.. சாரி ஆசி வழங்குகிறார் என்ற செய்தியும் பரப்பப்பட்டது. திடீர் திடீரென அவர் விடியோக்கள் வைரலாகிக் கொண்டிருந்தது.
அம்மா... மீண்டும் சாரி.. அன்னபூரணி காரில் இருந்து இறங்கி நடந்துவர, அவர் நடப்பதற்காகவே பூக்கள் தூவப்பட்டது. அந்தப்பூவில் மெதுவாக கைகளைத்தூக்கி மெதுவாக நடந்துவந்தார். அவருக்காகவே அமைக்கப்பட்ட பெரிய நாற்காலியில் அமர்ந்து, ஆசி வழங்கத்தொடங்கினார்.
அம்மா.. அம்மா என அங்கிருந்த எல்லோரும் காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டிருந்தனர். இதை வீடியோவில் பார்க்கும் நமக்கே சற்று வித்தியாசமாக இருந்தது. முதல் வீடியோ பார்க்கும்போதே, அன்னபூரணியை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பார்த்த நியாபகம்.
கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கி நிகழ்ச்சியிலேயே நடிகரும், டிவி சிறப்பு நிகழ்ச்சி தொகுப்பாளருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இவரை கிழித்துத் தொங்கவிட்டிருந்தார். காலங்கள் கடந்தபிறகு அதே அன்னபூரணி இப்போது ஆதிபராசக்தி அவதாரம் எடுத்திருக்கிறார். நம்மில் சிலரும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வரிசையில் காத்திருக்கிறோம்.
யார் இந்த அன்னபூரணி
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்தவர் அன்னபூரணி என்ற பெண் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, இன்னொரு நபருடன் வாழ்ந்து வந்தார். அவருடைய குடும்பமும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் வந்து கதறியதைப் பார்த்திருப்போம். அப்பாவை மீண்டும் எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என அவருடைய பிள்ளைகள் கதறியபோது அங்கே அன்னபூரணி அமைதியாகத்தான் இருந்தார்.
இதனிடையே அவரின் கணவர் இறந்து போகவே, 2016ல் அவரின் சிலையை பிரதிஷ்டை செய்து அறக்கட்டளை ஒன்றை துவங்கி, இயற்கை ஒலி மூலம் பயிற்சிகள் கொடுத்து வந்தார். கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அன்னபூரணியின் தரிசன நிகழ்ச்சிகளும் இதற்கு முன்பாக நடந்துள்ளதாம். அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் தனியாக யூட்யூப் பக்கம், பேஸ்புக் பக்கம் உள்ளிட்டவற்றை உருவாக்கி ஏராளமான பக்தர்களும் அவர்களை பின்பற்றி வருவதை காண நேர்ந்தது. சில வருடங்களுக்கு முன் சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி, செங்கல்பட்டில் ஆசி வழங்கும் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டார். ஆனால் அதை காவல்துறை நடத்தவிடவில்லை.
ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் நானே என கூறி, வைப்ரேஷன் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தால் எப்படி தூக்கி தூக்கிப் போடுமோ அப்படி குதித்துக் கொண்டே அருள் வாக்குக் கொடுக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போதும் வரிசையில் காத்திருந்து ஆசி வாங்குவது போல வீடியோ அடுத்தடுத்து வெளியாகி வருவதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இது ஒரு புறம் என்றால், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, அன்னபூரணியின் சுயரூபத்தை ஏற்கெனவே உலகுக்குக் காட்டியது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியிலேயே அன்னபூரணியை பேச்சாலே வெளுத்து வாங்கி இருப்பார். இப்போது அன்னபூரணி சாமியாராகி அருள்வாக்கு சொல்கிறார். ''அன்னபூரணியின் வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருது. அதேசமயம், மக்கள் ஏமாந்துப் போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாவும் இருக்கு. அன்னபூரணி பன்றது ரொம்ப தப்பு. மக்களை ஏமாற்றுவது ஒப்புக் கொள்ள முடியாது . யாராக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் இருந்தால் எந்த பிரச்சனையையும் சரிசெய்யலாம். இப்படி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத நபர் கடவுளின் பெயரைச் சொல்லி மக்களிடத்தில் ஏமாற்றினால் அதை நம்ப வேண்டாம்'' என அன்னபூரணி குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மீக தீட்சை கொடுத்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார் அன்னபூரணி. அவரை சமூகவலைதளங்களில் கேலி செய்தவர்கள் மீது புகாரும் அளித்திருக்கிறார். ''போலி சாமியார் என என்னைப் பற்றி பொய்யாக கூறி வருகிறார்கள். ஆன்மிக பணி செய்வதற்காக வந்திருக்கிறேன். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு என்னை பற்றி தெரியாது , உணர்ந்தவர்களுக்கு மட்டுமே என்னைப் புரிந்துகொள்ள முடியும்.
நான் சாமி என்று கூறவில்லை. என்னிடம் ஆன்மீக பயிற்சி பெற்றவர்கள் தான் என்னை கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார்கள். ஆன்மீகம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, எந்த சக்தி இயக்குகிறது என்பதை உணர்த்தும் ஆன்மீக பயிற்சி மட்டுமே வழங்கி வருகிறேன். அருள்வாக்கு தரவில்லை. ஆன்மீகப் பணியை தொடர்ந்து செய்வேன். இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும், தர்மம் தான் நிலைநாட்டும்'' என்று அன்னபூரணி தெரிவித்திருந்தார்.
எனவே, அன்னபூரணியைப் போல் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய குறிக்கோள் என்ன, எதற்காக சாமியார் அவதாரம் எடுக்கிறார்கள், உண்மையிலேயே ஆன்மிகத்தைப் பரப்புவதுதான் இவர்கள் நோக்கமா என்பதை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து போலிச் சாமியார்களிடம் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களை நினைத்து பாவமாகவே இருக்கிறது.
என்று சமீபத்தில் கூறி இருந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அன்னபூரணி சாமியார் ஆனது குறித்து தெரிவித்து இருப்பதாவது;- 'இந்து மதம் மட்டுமில்ல, உலகத்துல இருக்க எல்லா மதமும் மக்களோட நம்பிக்கையில் தான் இயங்கிட்டு இருக்கு. மக்களோட நம்பிக்கையைப் பெறத்தான் இந்தமாதிரி ஒவ்வொரு மதத்துக்கும் சாமியார்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களில் 90சதவிகிதம் பேர் போலி என்பது நமக்குத் தெரியும், தெரிந்திருந்தும் அவரிடம் வரிசையில் போய் ஆசீர்வாதம் வாங்குவோம்.
மக்களுடைய நம்பிக்கை தான் அவர்களுடைய முதல் பல. அதை சம்பாதித்துவிட்டால் காசு பணம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த மாதிரி சாமியார் கலாச்சாரம் இப்போது தொடங்கியது கிடையாது. சாய்பாபா காலம்தொட்டே இது நடக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார் போல ஆக நினைத்து, கடைசியில் போலி சாமியார்களாக சுருங்கிப் போனவர்கள் தான் இவர்கள். அவர்களில் பலர் போலி என்பதை காலமே காட்டிக்கொடுக்கும்.
திடீர் சாமியார்களின் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது மக்களின் நம்பிக்கயைப் பெற்று, அதை அவர்கள் வேறு விதத்தில் அறுவடை செய்கிறார்கள். சிலர் காசாக மாற்றுவார்கள். சிலர் அரசியலில் நுழைவார்கள். பலர் மறைமுகமாக அரசாங்கத்தையே நடத்துவார்கள். இதெல்லாம் நடந்தது, நடந்தும் கொண்டிருக்கிறது. இல்லாத மரத்துக்கு காசு வாங்கும் சாமியார்கள் தொடங்கி வாயிலிருந்து பொருள் எடுக்கும் சாமியார்கள் என வகை வகையாக இருக்கிறார்கள். நாம் தான் இவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment