Thursday, 28 November 2024

செங்கத்தில் நிலம் அளவீடு செய்து தர போலீஸ்காரரிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய அரசு உரிமம் பெற்ற சர்வேயரும், விஏஓ-வின் உதவியாளர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நிலத்தை அளவீடு செய்து தரக் கோரிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் எஸ்.அஜித் குமார் என்பவர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரிடம் நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் கையூட்டுப் பெரும் விஏஓ, சர்வேயர், தாசில்தார், நகராட்சி ஆணையாளர், வருவாய் அதிகாரி, மாநகராட்சி அதிகாரி, வனத்துறை அதிகாரி என எந்த அரசு துறைகளில் யார் உங்களிடம் லஞ்சம் கேட்டாலும் தருவதாக கூறிவிட்ட நேரடியாக அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், அவர்கள் விசாரித்து அந்த அதிகாரிக்கு பணம் பொறி வைத்து கைது செய்ய திட்டமிடுவார்கள். அவர்கள் அறிவுறுத்தலின்படி, ரசாயணம் தடவிய நோட்டுகளை கொண்டு சென்று உங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.. அப்படி கொடுத்த உடன் அவர்கள் கைகளால் வாங்குவார்கள்.. அப்படி வாங்கிய அடுத்த நொடி அங்கு மறைந்திருக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்வார்கள்.

லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக கைதாகும் அரசு ஊழியர் அன்றைக்கே பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை தாண்டி, அவருக்கு சஸ்பெண்ட் ஒரு காலக்கட்டத்தில் ரத்தானாலும், வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டே இருக்கும். அவர்கள் நீதிமன்றத்தில் ஒரு காலக்கட்டத்தில் தண்டனையும் கிடைக்கும். அதேபோல் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து, அவர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களும், அரசுடைமை ஆக்கப்படும்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாகவே உள்ளது. எனவே லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கலாம் என்பதை விட்டுவிட்டு புகார் அளிக்க முன்வரவேண்டும். அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதும் அதற்கு மக்கள் லஞ்சத்திற்கு எதிராக அந்தந்த மாவட்டத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிப்பது அதிகரித்துள்ளது. அப்படித்தான்
திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கத்தை அடுத்த செ.அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாம்பசிவம் மகன் அஜித் இவா், சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறாா்.

இவரது தந்தை சாம்பசிவம் காலமானதையடுத்து, அகரம் கிராமத்திலுள்ள இடம் மற்றும் பெரும் பாக்கம் கிராமத்தில் தனது தாயார் சாந்தியின் பெயரிலுள்ள நிலத்தை அளவீடு செய்வதற்காக கடந்த 18ஆம் தேதியன்று, முறையான ஆவணங்களுடன் அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தபின் ஒப்புதல் சீட்டுடன் அனைத்து ஆவணங்கள் நகல் எடுத்துக் கொண்டு பெரும்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரிடம் மனு அளித்துள்ளார் அஜித்குமார்.

இதற்கு கிராம நிா்வாக உதவியாளர் அரிகிருஷ்ணன்(48 வயது) மற்றும் தற்காலிக சர்வேயர் ரஞ்சித் குமார்(24), ஆகியோர் இடத்தையும், நிலத்தையும் அளவீடு செய்து தர ரூபாய் 15,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த போலீஸ்காரர் அஜித்குமார். இது குறித்து

திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் இரண்டாயிரத்தை அஜித்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். 
பெரும்பாக்கம் கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சர்வேயர் ரஞ்சித் குமார் மற்றும் விஏஓ உதவியாளர் அரி கிருஷ்ணன் இருந்தபோது அஜித்குமார் லஞ்ச பணத்தை கொடுத்தார். 

அப்போது லஞ்சப் பணத்தை தற்காலிக சர்வேயர் ரஞ்சித் குமார் மற்றும் விஏஓ உதவியாளர் அரிகிருஷ்ணன் மூலம் பெற்றுக்கொண்ட போது, அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் அருள் பிரசாத், காவல் உதவி ஆய்வாளர்கள் மதன் மோகன் கோபிநாத் ஆகியோர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். 

பின்னர், தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருவர் மீதும் ஊழல் வழக்கின் படி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். 

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...