Saturday, 23 November 2024

திருமணமாகி 4 மாதமான புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் அடுத்தவரிடம் அட்ஜஸ் பண்ணச் சொல்லும் மாமியார்.. அடுத்த கனமே மாவட்ட எஸ்பி-யிடம் கணவர் குடும்பத்தார் மீது புகார்..!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அட்டுவம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மகள் U. செஜா கேத்தரின் (வயது 20), இவருக்கும், திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரின் மகன் உதயகுமாருக்கும் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கொடைக்கானலிலுள்ள லுார்து அன்னை தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.  

திருமணத்திற்கு கேத்தரினாவின் பெற்றோர் 5½ பவுன் தங்க நகையும், புது மாப்பிள்ளைக்கு ½ பவுன் தங்க நகையும் மற்றும் மரக்கட்டில், மெத்தை, மர பிரோ, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பித்தளைப்பாத்திரங்கள் கொடுத்தும் திருமணம் செய்து வைத்துள்ளார்கள்  திருமணத்திற்கு பின்பு திருமண வாழ்க்கை உடுமலைப்பேட்டையில்  கணவர் வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

பின்னர், தம்பதிகள் திருமணம் முடிந்து 10 நாட்கள் மட்டுமே இருவரும் சந்ஷேமாக இருந்ததாகவும், அதன்பின் மாமியார் செய்த வேலையால் மகனின் மண வாழ்க்கை சிதைந்து போய்விட்டதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மருமகள் மூலம் மனுவில் வந்துள்ளது. 

புதுமணப்பெண் கேத்தரினா..  எஸ்பி-யிடம் அளித்த மனுவில் கூறியதாவது:-

உடுமலைப்பேட்டையிலுள்ள ராமசாமி நகரில் மாமியார் வீட்டிற்கு சுமார் (65 வயதுடைய) ஒருவர் அடிக்கடி வருவார். அவர் யார் என்று எனக்குத் தெரியாது. அப்போது எனது மாமியார் சுமதி என்ற ஜாய்ஸ் என்னை பார்த்து இவர் V.R. வேலுச்சாமி உடுமலைப்பேட்டையில் பெரிய ஆள் இவரை நன்றாக பார்த்துக்கொள் என்று எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். 
நானும் வயதில் பெரியவர் என்று.  வணக்கம் செலுத்தி மரியாதை செய்தேன். பின்பு எனது மாமியார், எனது கணவர் வேலைக்கு சென்ற பின்பு எப்போது பார்த்தாலும் அவரைப்பற்றியே பேசினார். அவரிடம் போனிலும் பேச சொல்லி என்னை வற்புறுத்தினார். நான் பேச மறுத்துவிட்டேன். பின்பு எனது மாமியார் என்னை அவரிடம் பேச மறுக்கிறாய் என்று சொல்லி என்னை திட்டி அவரிடம் அட்சஸ் பண்ணி சென்றால் உனக்கு தேவையானது எல்லாம் அவர் உனக்கு செய்வார். பணம் கொடுப்பார், நகை வாங்கி கொடுப்பார் என்று சென்னார். நான் இதனை எனது கணவர் உதயகுமாரிடம் சொன்னேன் அவர் எனது முன்பு அவரது தாயயை கண்டிப்பதுபோல் கண்டித்து விட்டுவிட்டார். பின்பு எனது மாமியாரும், எனது மாமனார் ஞானசேகரனும் நீ சரியாக படிக்கவில்லை. நகையும், பணமும் சரியாக கொண்டுவரவில்லை உன்னை கட்டினதுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்திருந்தால் இன்னும் நிறையா பணம், நகை கிடைத்திருக்கும் என்று கூறினார்கள். அதன்பின்பு எனது மாமானார் ஞானசேகர் என்பவர் நீ வேலுச்சாமியிடம் அட்சஸ் பண்ண பயமாக இருந்தால், முதலில் என்னிடம் அட்சஸ் பண்ணிக்கொள் அதன்பின் உனக்கு பழகிவிடும், பயம் ஏதும் வராது என்று கூறினார். இதைப்பற்றியும் எனது கணவரிடம் கூறினேன். அதற்கும் எனது கணவர் அவரது தந்தையை கண்டிப்பது போல் கண்டித்து விட்டுவிட்டார். எனது மாமியார் இந்த விஷயத்தை அறிந்து தெரியாததுபோல் இருந்து கொண்டு நீ டைப்ரைட்டிங் வகுப்பிற்கு போ, இல்லையென்றால் ஏதாவது வேலைக்கு போ என்று என்னை கொடுமை செய்தார்கள். பின்பு கடந்த 10.10.2024ம் தேதியன்று உடுமலைப்பேட்டை, பஸ்டாப்பிற்கு அருகிலுள்ள முருகன் டைப் ரைட்டிங்கில் சேர்த்துவிட்டார்கள். அன்றைய தினம் காலை 11.00 மணிளயவில் வகுப்பிற்கு சென்றேன். நண்பகல் 12.00 மணிக்கு எனது மாமியார் ஒரு காரில் வந்து வழுக்கட்டாயமாக என்னை காரில் ஏற்றினார்கள். நான் உள்ளே பார்த்தபோது எனது மாமியார் வீட்டிற்கு வந்த V.R. வேலுச்சாமி என்பவர் காரில் அமர்ந்திருந்தார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் கத்தி கூச்சலிட்டேன். காரின் கண்ணாடிகளை அனைத்தையும் அடைத்துவிட்டு எனது வாயில் துணியை வைத்து எனது மாமியாரும், வேலுச்சாமி அவர்களுக்கும் அடைத்துவிட்டார்கள். பின்பு அவர்கள் இருவரும் சேர்ந்து ஹெஸ்ட் ஹவுஸ்-க்கு போலம் என்று வழுக்கட்டாயமாக இழுத்துக்சொன்றார்கள். அங்கு யாரும் இல்லை ஹெஸ்ட் ஹவுஸ்ல் என்னை அடைத்து வைத்து இருவரும் மாறி மாறி என்னை மிரட்டினார்கள். எனது மாமியார், V.R. வேலுச்சாமி அவர்களின் ஆசைக்கு இணங்கி போ என்று சொன்னார். கொஞ்ச நேரம் அட்சஸ் பண்ணிக்கொள் போக போக சரியாகி விடும் என்று சொன்னார்கள். நாங்கள் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால் உன்னை கொன்று இதே இடத்தில் புதைத்துவிடுவோம். என்று மிரட்டினார்கள் நான் கத்தினேன், கதறினேன் என்னை காப்பாற்றுவதற்கு யாருமே அங்கு இல்லை. V.R. வேலுச்சாமி என்னிடம் உன்னை மாதிரி பிள்ளைகள் எல்லாம் என்னிடம் வந்து இப்போது வசதி வாய்ப்புடன் இருக்கிறார்கள். நீயும் அவர்களை மாதிரி இருக்கனும் என்றால், என்னோடு தனிமையில் இருந்து என்னை சந்ஷேப்படுத்து என்று வற்புறுத்தினார். நான் காதை அடைத்துக்கொண்டு நான் வீட்டிற்கு போகனும் என்று அழுதேன். இந்த தகவலை எனது கணவரிடம் சொல்வதற்கு என்னிடம் போன் இல்லை. இந்நிலையில் எனது கணவர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அங்கு நான் இல்லாததால், எனது மாமியாருக்கு போன் செய்து எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வளையல் கடையில் இருக்கிறோம் இப்போது வந்துவிடுகிறோம் என்று சொன்னார்.

 தொடர்ந்து எனது கணவர் போன் செய்யவே எனது மாமியார் V.R. வேலுச்சாமியிடம் இன்னொரு நாள் அழைத்து வருகிறேன் என்று சொல்லி என்னை ஒன்றும் தெரியாததுபோல் என்னை வீட்டிற்கு அழைத்துவந்தார் வீட்டிற்கு வந்ததும் எனது கணவரைப் பார்த்து அழுது நடந்த விபரத்தினைச் சொன்னேன். பின்பு எனது கணவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கண்டிப்பதுப்போல் கண்டித்தார். 

பின்பு எனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றபின்பு எனது மாமியாரும், மாமனாரும் உனக்கு அட்சஸ் பண்ணி போகத் தெரியாதா என்று சொல்லி நீ நாங்கள் சொல்லும்படி கேட்கவில்லை என்றால் உன்னை கொன்று புதைத்து விடுவோம் என்று சொல்லி கொலை மிரட்டல் விடுத்தார்கள் என பாதிக்கப்பட்ட புதுமணப்பெண் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...