Sunday, 24 November 2024
பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்வோர் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி வசூல் செய்யும் இளநிலை உதவியாளர் குமரன்!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் குமரன். இவர் ஏற்கனவே காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர். இவரது பேச்சைக் கேட்டு பொறுப்பு சார் பதிவாளராக காட்பாடியில் இருந்த சிவக்குமார் பணியில் தில்லுமுல்லு செய்துவிட்டு காட்பாடியில் இருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து குமரன் பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இங்கும் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சார் பதிவாளர் முருகேசன் விடுப்பில் சென்றால் இவர் பொறுப்பு சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடிக்கடி இதே போன்று இவர் பொறுப்பு சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக இவர் பணியாற்றினால் காட்பாடி, பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கறாராக பணத்தை வசூல் செய்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சார் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள முருகேசன் பணியில் இருந்தால் இவர் சொல்லும் வேலையைத்தான் முருகேசன் செய்ய வேண்டும். அதாவது சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கெடுப்பான் ,தடுப்பான் என்பது போல இவர் பூசாரியாக இருந்து பல பணிகளை செய்து வருகிறார். அதாவது பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவரை நாடிச்செல்லும் பலருக்கு டிப்ஸ் என்பது ரூபாய் 200 முதல் 300 வரை நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல தூக்கி வீசுகிறார் இந்த மகராசன் குமரன். குமரனுக்கு தொடர்பில்லாத வேலைகளை இவராக வலுக்கட்டாயமாக முன்வந்து செய்து கொண்டுள்ளார். குறிப்பாக இவர் வீட்டிற்கு கிளம்பும்போது ரூபாய் அறுபது ஆயிரத்திலிருந்து ரூ.70 ஆயிரம் வரை இவர் ஒரு நாள் வசூலாக கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. அதாவது இங்கு வேலை நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி இவர் சில பல பணிகளை மறைமுகமாக செய்து கொடுத்துவிட்டு இப்படி தனியாக கல்லாகட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கே சார பதிவாளர் பணியில் உள்ள முருகேசன் ஒரு டம்மி போல செயல்படுகிறார். குமரன் ஆட்டி வைக்கும் கைபாபாவை பொம்மையாகவும் முருகேசன் உள்ளது குறிப்பிடத்தக்கது. குமரன் என்ன சொல்கிறாரோ அதுதான் வேதம், சட்டம் என செயல்படுத்தப்படுகிறது பள்ளிகொண்டாவில் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டாவில் நடக்கும் அநியாயங்கள் வேறு எங்கும் நடப்பது கிடையாது. இவர் ஒரு பத்திரத்தை பார்த்து இதை பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூபாய் எவ்வளவு தர வேண்டும் என்பது இவர் முடிவு செய்து கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் சொல்வதை கொடுக்கவில்லை என்றால் பதிவு நடக்காது. அந்த அளவுக்கு இவர் முன் நின்று அதை தடுத்து நிறுத்துவதை வாடிக்கையாகவும், வழக்கமாகவும் கொண்டுள்ளார். முருகேசன் என்பவர் கையெழுத்து போடும் ஒரு ரப்பர் ஸ்டாம்பு போல பயன்படுத்தப்படுகிறார். சார் பதிவாளருக்கு உண்டான அதிகாரம் இல்லாமல் அவர் அமர்ந்து கொண்டு மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் பள்ளிகொண்டா அலுவலகத்தில் குமரன் இருக்கும் வரை பொதுமக்களுக்கு தொல்லை இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பணம் இல்லை என்றால் இங்கே அணுவும் அசையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பணம் தருபவர்களுக்கு மட்டுமே பதிவு. பணமில்லை என்றால் அவர் அவர்களை திரும்பி கூட பார்ப்பதில்லை. அந்த பதிவை என்ன என்று கூட கேட்டுக் கொள்வதில்லை என்பது எழுதப்படாத சட்டம் போல வைத்துக்கொண்டு செயல்படுகிறார் இந்த கடமை வீரன் குமரன். இப்படி லஞ்ச லாவண்யத்தை தலைவிரித்தாடச் செய்துள்ளார் குமரன் என்று சொன்னால் அது மிகையாகாது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸா ரும் பள்ளிகொண்டாவில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்வதாக தெரியவில்லை. பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சிதம்பர ரகசியத்தை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தால் பல கருப்பு ஆடுகள், பண முதலைகள் சிக்குவது உறுதி என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் .அந்த அளவிற்கு பள்ளிகொண்டாவில் அமைதியாக வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குமரன் இருக்கும் இடமெல்லாம் கோலாகலம் நிறைந்து காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இப்பொழுது காட்பாடியை அடுத்து பள்ளிகொண்டாவிலும் குமரனுடைய ஆதிக்கம், அவரது கை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. ஆதலால் இனி பொது மக்களுக்கு சொல்லொனா துயரம் ஏற்படுவது உறுதி என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் சில பொதுமக்கள். ஆக மொத்தத்தில் மாவட்ட பதிவாளர் அல்லது பத்திரப்பதிவு துறை அமைச்சரோ இந்த பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகத்தின் மீது ஒரு கண் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரன் போன்ற களைகளை களைய உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். பதிவுத்துறை அமைச்சரின் நடவடிக்கை இனி என்னவாக இருக்கும் என்பதையும், மாவட்ட பதிவாளரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment