Saturday, 23 November 2024

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தண்ணி காட்டு.. பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலக (OA) சத்தியமூர்த்தி ... இனியாவது விழித்துக் கொள்வார்களா? விஜிலென்ஸ் போலீசார்..!!


பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் OA -வாக பணியில் இருப்பவர் சத்தியமூர்த்தி இவர் பணத்தை மதிக்கும் அளவிற்கு பொதுமக்களை மதிப்பதில்லையாம் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பல்வேறு பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களை அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் எனக் கூட பார்க்காமல் அவர்களை நீ வா போ என ஒருமையில் பேசுவதும் மட்டுமின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட மீனா என்கின்ற பெண்மணி பதிவு பணிக்காக வந்திருக்கிறார். அவரின் வந்த பணி முடிவடைந்த நிலையில், அங்கு பணியிலிருந்த OA சத்தியமூர்த்தி என்பவர் அந்த பெண்மணியை பார்த்து நீ இப்ப போய் 5 மணிக்கு வரச் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்தப் பெண்மணி மீனா என்பவர் வெகு தூரம் செல்ல வேண்டிய நிலையில் சரியாக 3.30 மணி அளவில்  வந்துள்ளார். பிறகு தன் பதிவு செய்த ஒரிஜினல் ஆவணங்கள் குறித்து OA சத்தியமூர்த்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அந்தப் பெண்மணியை பார்த்து ஏய் நான் உன்னை 5 மணிக்கு தான் வர சொன்னேன் இப்போது எதற்கு வந்தாய் உள்ளே எல்லாம் சேரில் இங்கு உட்காரக்கூடாது வெளியே போய் 5 மணிக்கு வா எனக்கூறி பெண்ணென்றும் கூட பார்க்காமல் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளும் சத்தியமூர்த்தி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் எவ்விதமான பதிவுச் செய்ய வேண்டும் என்றாலும் கூட காசு பணம் துட்டு மணி மணி? 

வேலூர் மாவட்டம். பத்திரப்பதிவு அலுவலகத்திற்குட்பட்ட பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இருப்பவர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த ராதிகா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நான்கு வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் குரூப் 2-வில் தேர்ச்சி பெற்று தன் சொந்த மாவட்டத்திலே திருப்பத்தூர் சார்பாதிவாளர் அலுவலகத்தில் பயிற்சி சார் பதிவாளராக பணிக்குச் சேர்ந்த முதலே எவ்வாறெல்லாம் முறைகேடு செய்யலாம் என்பதை கற்றுக்கொண்டு சுமார் ஆறு மாத காலத்தில் பல லட்ச ரூபாய் அரசுக்கு வரியைப்பு செய்து உள்ளதாக அங்கு தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் பேரில் இவர். திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பேர்ணாம்பட்டு சார்பதிவாளர்  அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தகவல் கூறுகின்றனர்.

மேலும் இவர் பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியிடம் மாற்றிக் கொண்டு வந்த முதலே ராதிகாவின் கண்ட்ரோலில் நாள்தோறும் பதியும் பத்திரங்களுக்கெல்லாம் பென்சிலில் குறிப்பிட்டு அந்த அலுவலகத்திற்கு சில மாதங்களுக்கு முன்பாக OA -வாக வந்த காட்பாடி கல்புத்தூரைச் சேர்ந்த தில்லாலங்கடி சத்தியமூர்த்தி என்பவர் மூலம் முறைகேடான பதிவுகளுக்கு மெகா வசூல் வேட்டை தினமும் இருவர் கூட்டணியில் நடத்தி வருவதாக கூறுவோர் அதிகம். இதனைக் கண்டு கொள்ளாத வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரம், போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி மெகா வசூல் வேட்டை நடத்தி வரும் இவர்கள் மீது இனியாவது ஒருகண் வைத்து நஞ்சத்தை வாரி குவிக்கும் பெண் சார்பதிவாளரான ராதிகா, OA தில்லாலங்கடி சத்தியமூர்த்தியின் தலைமையில் அதே அலுவலகத்தில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக வெளிநபரான உள்ளுறைச் சேர்ந்த அம்ஜித் என்ற நபரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட எந்தப் பதிவு வேலை செய்ய வேண்டும் என்றாலும் அது அம்ஜீத் மூலம் தான் கொண்டு வர வேண்டும் என்று OA சத்தியமூர்த்தி உத்தரவின் பேரிலும் பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களின் ஆவணங்களை சரி பார்க்கும் பணியானது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களான உதவியாளர்கள் செய்ய வேண்டிய வேலையை வெளிநபரான அம்ஜித் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மேஜையில் அமர்ந்து தான் ஒரு அரசு ஊழியர் போல் சார்பதிவாளரின் லாகின் ஐடி முதல் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களின் லாகின் மூலம் பல்வேறு பணிகளை செய்தும், இது தவிர ஈசி சரி பார்ப்பதும், பதிவு ஆவணங்கள் சரி பார்ப்பது போன்ற பணிகளை செய்து வருவது தொடர்கதையாக உள்ளதாம். அதுமட்டுமின்றி தில்லாலங்கடி OA. சத்தியமூர்த்தி என்பவர் மூலம் முறைக்கிறான பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களை அழைத்து அலுவலகத்தில் சேர் போட்டு உட்கார வைத்து அவர்களுக்கு ராஜ உபசரிப்பு செய்து பேரம் பேசி பெரும் தொகையை பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவுக்கு பரிந்துரைப்பதாக தகவல் கூறுவோர் அதிகம். மேலும் OA சத்தியமூர்த்தி இல்லாத சமயத்தில் அலுவலகத்தில் சார் பதிவாளர் லாகின் ஐடி மூலம் பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களின் ஆவணங்களை சரி பார்த்து அம்ஜித் சரி என்று சார்பதிவாளரிடம் கண்ணை காட்டினால் போதும் பெண் சார்பதிவாளர் ராதிகாவும் உடனே பத்திரப்பதிவு செய்து பணியை முடித்துக் கொடுப்பாராம், ஏனென்றால் அம்ஜீத் என்பவர் அரசு ஊழியர் போலவே பல வருடங்களாக இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதும் அங்கு வரும் சார்பதிவாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களிடம் பேரம் பேசி கையூட்டுப் பெற்றுத் தருவதில் மிக சாமார்த்தியமானவராம்.

எனவே OA. சத்தியமூர்த்தி , வெளிநபரான அம்ஜித் ஆகிய இருவரையும் வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், கையும் களவுமாக பிடித்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி அவர்களின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கையாக உள்ளது.

தமிழ்நாட்டில் சமீப நாட்களாகவே ல்வேறு அரசு துறைகளில் அந்தந்த மாவட்டத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலம் நெருங்கும் சமயத்தில் மட்டும் ஒரு சில சமயம் அதிரடி காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன அதுமட்டுமின்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த மாதங்களில் ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை தொடரவே அப்பொழுது கணக்கில் காட்டப்படாத லஞ்சப் பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ததும் சார்பதிவாளர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ததும் இதனைத் தொடர்ந்து மற்ற பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியிலிருந்த ஊழியர்களுக்கு கலக்கம் அடையச் செய்ததோடு அவர்கள் உஷாராகி விட்டனர். இதனால் சார் பதிவாளர் அலுவலகங்களில் தினமும் வசூலாகும் லஞ்சப் பணத்துடன் அலுவலகத்தின் பணி முடிந்தவுடன் மாலை 7.30 மணிக்குள் வீட்டுக்கு திரும்பி விடுகின்றனர். காலதாமதம் ஏற்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியிருக்கும் என்று திட்டமிட்டு செயல்ப ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொருவரும் இதனால் அவர்களது சட்டை பாக்கெட்டில் ரூபாய் 500, 1000 மட்டுமே இருப்பு வைத்துக் கொண்டு பணியாற்றுகின்றனர். இந்த லஞ்சப் பணத்தை வாங்கும் மொத்தமாகவும். பாத்திரமாக வைத்துக் கொள்ளவும் தங்களுக்கு நம்பிக்கையான டாக்குமெண்ட் ரைடர்களை நியமனம் செய்து அவர்களிடம் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளதாகவும் இவர்களைப் பற்றி நன்கு விவரம் அறிந்தவர்கள் தகவல் கூறுகின்றனர்.

எனவே இது போன்ற தகவல்கள் வெளியே கசிந்துவிடக்கூடாது என்ற வகையில் செய்திகள் வெளிவராத இருக்க பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியிலிருக்கும் பெண் சார்பதிவாளர் ராதிகா உத்தரவின் பேரில் OA சத்தியமூர்த்தியை கொண்டு ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு, பருவ இதழ் செய்தியாளர்கள், தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு மாதம் மாதம் தலா ரூபாய் 500 முதல் 10000 வரை கப்பம் கட்டி வருகிறார்களாம், என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையின் குரல் வளையை நெரிக்கும் செயலாகும் இதற்கு பல செய்தியாளர்கள் இசைவு கொடுத்து வருகின்றனர்.

பேர்ணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடப்பது பகல் கொள்ளை ஆனால் வெளியில் பேசிக்கொள்வது என்னவோ அரிச்சந்திரன் வீட்டு எதிரில் வீட்டில் குடியிருப்பவர்கள் போன்றும் தங்கள் லஞ்சம் வாங்குவதே இல்லை என்றும் அனைத்தும் பத்திரப் பதிவுகள் ஆன்லைன் என்றும் பேசிக் கொள்கின்றனர். எனவே இதைப்பற்றி நன்கு தகவல் அறிந்தவர்கள் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அதிகாரி (டி.ஆர்) பொறுப்பிலுள்ள வெங்கடேசனுக்கும், பதிவுத்துறை துணைத் தலைவர் அருள்சாமி என்பவருக்கும் மாதம், மாதம் ஒரு தொகை சென்று விடுவதாகவும், ஆதலால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம்? இனியாவது நடவடிக்கை மேற்கொள்வார்களா? ..என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் தில்லாலங்கடி OA சத்தியமூர்த்தி என்பவரின் பற்றி முழு ஆதாரங்களுடன் செய்தி அடுத்த பதிப்பில் தொடரும்..

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...