வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது மரத்தொட்டி என்கிற கள்ளு கடை சந்து. இந்த பகுதியில் தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடைவிடாது காட்டன் சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த காட்டன் சூதாட்டம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அடிமட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை நம்பி அவர்களது ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கின்றனர் இந்த காட்டன் சூதாட்டம் நடத்தும்
பிரபல ரவுடிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் தங்களை நாடிவரும் இதுபோன்ற விவரம் அறியாத நபர்களிடமிருந்து பணத்தை பகல் கொள்ளை அடிப்பது போல் பறித்துக்கொண்டு அவர்களை விரட்டி அடிக்கின்றனர். அதையும் மீறி அவர்களுக்கு மாலை 4 மணிக்கு கிடைக்கும் ரிசல்ட் எனப்படும் யாருக்கு பரிசு விழுந்தது என்பதை காணவந்து பரிசு விழுந்ததை உறுதி செய்துகொண்டு அவர்களிடம் பணத்தை கேட்டால் அவர்கள் அதில் மூன்றில் ஒரு பங்கை கொடுத்துவிட்டு அவ்வளவுதான் கிடைத்தது என்று அவர்களை அடிக்காத குறையாக அடித்து விரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படி காட்டன் சூதாட்டம் நடத்தி கொழுத்து வருகின்றனர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்த கள்ளுக்கடை சந்து மற்றும் அதே போன்று காகிதப்பட்டறை அருகே உள்ள முருகன் கோயில் பின்புறம் சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வடக்கு காவல் நிலைய சரகத்தில் கொள்ளையோ கொள்ளை பகல் கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் நன்கு மாமூலை வாங்கி வைத்துக்கொண்டு எனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல ஹாயாக வலம் வந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளை களைய வேண்டிய காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதால் சீனிவாசன் போன்ற காவல் ஆய்வாளர்கள் காட்டில் கனமழை பெய்து வருகிறது. வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை தடுக்க வேண்டிய சீனிவாசன் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டவிழ்த்து விட்டு விட்டு தனக்கு வேண்டிய மாமூலை கறாராக வசூல் செய்து வருகிறார். இவர் யாரையும் எதற்காகவும் பகிர்ந்து கொள்வதில்லை. நான் விரைவில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என்று சொல்லி சொல்லி அவர்களிடம் மாமூலை வாரி குவித்து வருகிறார் .இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரு கண் வைத்து அவர் பணி நிறைவு பெற்று வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக அவரை கண்காணித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் தன் கடமையை செய்யுமா? அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் பாவம் என்று கருதி அவரை விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா? என்பதையும் காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் மற்றும் வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கார்க் போன்ற நேர்மையான அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment