Wednesday, 27 November 2024

கானா பாடகி இசைவாணியை கைது செய்யவேண்டிய.. இந்து எழுச்சி முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஐயப்பன் சுவாமி பற்றி சர்ச்சைக்குரிய பாடலை பாடிய கானா பாடகி இசைவாணியை கைது செய்யவும் இந்து மதத்தை பற்றி தவறான கருத்து பதிவு செய்யும் நீலம் பண்பாட்டு மையத்தை தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து

தேனி மாவட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி வைக்க இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலளர் இராமமூர்த்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமர்  அவர்களிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;

சென்னையைச் சேர்ந்த இசைவாணி என்பவர் கானா பாடல் பாடும் பாடகி ஆவார்‌. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு " ஐ ஆம் சாரி ஐயப்பா நான் உள்ள வந்தா என்னப்பா ?" என்று பாடல் பாடி சர்ச்சையை கிளப்பினார். மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை ஒலிபரப்புவது கோடான கோடி இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் சதியாக கருதுகிறோம்.

இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து சர்ச்சைக்குரிய அந்த பாடலை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் சமீப காலமாக தமிழக அரசு சில சம்பவங்களுக்கு தனிப்படை அமைத்து சிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டு வருகிறது கானா பாடகி விஷயத்திலும் முனைப்பு காட்டி இசைவாணியை தனிபடை அமைத்து கைது செய்தும் சர்ச்சைக்குரிய பாடலை தடை செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. 

மாவட்ட செயலாளர் ராம மூர்த்தியுடன், மாவட்ட  இணை அமைப்பாளர் செல்வபாண்டி, மாவட்டச் செயலாளர்கள் ராஜேஷ், இளங்கோ பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி பிரபு, மாவட்ட துணை செயலாளர் சுப்பையா, மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ்,

தேனி நகர தலைவர் சிவராமன், தேனி நகர பொருளாளர் நாகராஜ், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி, தேனி நகர பொதுச்செயலாளர் முத்துராஜ், தேனி நகரச் செயலாளர்கள் பிரேம், அழகுபாண்டி, தேனி நகரத் துணைச் செயலாளர்கள் செல்வராஜ், ராம்குமார், சுரேஷ் தேனி நகரச் செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், பாபு மாவட்ட செய்தி தொடர்பாளர் இளம்பரிதி ஆகியோர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...