வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்டது 33 வது வார்டு பிஷப் டேவிட் நகர். இந்த 33வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் தவமணி தாமோதரன். இந்த 33வது வார்டு பிஷப் டேவிட் நகரில் கானாறு கரையோரம் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து அருகில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக மின் மோட்டார் பழுதடைந்தது. இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த ஏரியா கவுன்சிலரை நேரில் சந்தித்து தங்களது பகுதியில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவித்தனர். அப்படி தெரிவித்தும். செய்து தருகிறேன் என்று கவுன்சிலரின் கணவர் தாமோதரன் பொதுமக்களுக்கு பதில் கூறி வந்தார். ஆனால் கடந்த 20 நாட்களை கடந்த நிலையிலும் மின் மோட்டார் பழுது நீக்கி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதி வாழ் பொதுமக்கள் அடித்தட்டு மக்கள் என்பதால் குடிதண்ணீருக்கு மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதாவது தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு ஒரு கவுன்சிலர் தண்ணீர் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திமுக கவுன்சிலர்கள் வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு நன்கு சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கூறிக் கொள்ளும் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் 'ஸ்மார்ட் சிட்டி' என்று மார்தட்டிக்கொண்டு இப்படி தண்ணீருக்கு அல்லாடும் நிலைக்கு வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாழும் பொது மக்களை தவிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்த்து வருகிறது என்பது மிகவும் வெட்கக்கேடானது, வேதனைக்குரியது ஆகும். ஆதலால் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் இந்த பிஷப் டேவிட் நகரில் நேரில் களஆய்வு செய்து குடிதண்ணீருக்கு எத்தனை குடும்பங்கள் தவிக்கின்றது என்பதை கணக்கில் கொண்டும், கருத்தில் கொண்டும், நினைவில் கொண்டும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் இந்த மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்து தங்களுக்கு ஓட்டு போட்ட பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது இந்த பகுதி வாழ் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த பணி விரைந்து நடத்தப்படுமா? அல்லது மீண்டும் கிடப்பில் போடப்படுமா? என்பது தெரியவில்லை. இதை கண்ட பிறகும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல கண்டும் காணாமல் விட்டு விடுவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment