செய்யார் அடுத்த அழிஞ்சல்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளை அவதூறாக பேசிவரும் பணி தள பெண் பொறுப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என. கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அழிஞ்சல்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சியிலும் (100 வேலை) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதன் பணி தள பொறுப்பாளராக இதே கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 44) இருந்து வருகிறார்.
இவரது பணி, பயனாளிகளுக்கு ஏரியில் தாக்கு பள்ளம் எடுப்பதற்கும், வரவுக் கால்வாய், பாசனக் கால்வாய்களை தூர்வாரும்போது அளவிட்டு கொடுக்க வேண்டும். பணி துவங்கும்போதும் - பணி முடியும் போதும் பயனாளிகளின் அடையாள அட்டையுடன் 10 பேர் என, கணக்கிட்டு புகைப்பட படத்தை எடுக்க வேண்டும். முதலுதவி பெட்டி, குடிநீர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அழிஞ்சல்பட்டு ஊராட்சியிலுள்ள பணி தள பெண் பொறுப்பாளர் ராஜேஸ்வரி, பயனாளிகளை மதிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பயனாளிகள் சில் கூறும் போது,
'இவர், பயனாளிளான எங்களை ஒருமையில் பேசுவதுடன், அடையாள அட்டைகளை வாங்கும் இவர், திருப்பி கொடுப்பதற்கு பதிலாக விசிறி கீழே போடுகிறார். வானில் இடி இடிக்கும்போது நாங்கள் அங்குள்ள பம்பு செட் அருகே ஒதுங்க சென்றால், செத்தா போயிடுங்க என, கேவளமாக பேசுகிறார்.
சில வேலைகளை இவரே பொக்லையின் இயந்திரம் மூலம் எடுத்து விட்டு, பயனாளிகளான எங்களிடம் பணத்தை பிரிவு போட்டு கட்டாயப் படுத்தி வசூல் செய்கிறார். இவரது உறவுக்காரர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் அவரது பணத்தை எடுத்து ராஜேஸ்வரி பங்கு போட்டுக் கொள்கிறார்.
இவரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, நாங்கள், ஊராட்சி செயலாளர் பிரபுவிடம் முறையிட்டும் பயனில்லை, இது குறித்து புகார் மனுவாக வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றி அலுவலகத்திலும் கொடுத்துள்ளோம்" என்றனர்.
No comments:
Post a Comment