தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள உ பி மசூதி விவகாரம் தொடர்பாக கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உத்திரபிரதேச மாநிலம், சம்பலிலுள்ள ஜாமா மசூதி வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் மிகப் பழமையானது. கடந்த 1991 உச்சநீதிமன்ற உத்தரவின்படி 1947 ஆம் ஆண்டு முதல் எந்த மதத்தின் வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை எந்த நிலையில் இருந்தாலும், அந்தந்த இடங்களிலேயே இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து இஸ்லாமியர்கள் வழிபடும் தளமான மசூதிக்களை குறி வைத்து ஒரு காலத்தில் இது இந்து கோவிலாக இருந்தது என்று தொடர்ந்து அவதூறுகளை பரப்பி ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து இதை நீதிமன்றம் வரைக்கும் சென்று உத்தரவு வாங்கி மசூதிகளை இடித்து தள்ள முயல்வதும் இடித்து தள்ளுவதும் எந்த வகையில் நியாயம் பல வருடங்களாக பாபர் மசூதியை வைத்து அரசியல் செய்த மத்திய பாஜக அதற்கு முடிவு கட்டிவிட்டு இப்போது மீண்டும் மற்ற இடங்களில் இருக்கும் மசூதிகளை குறி வைத்து தொடர்ந்து பழைய பானியை கையாள்வது மனிதநேய அற்ற செயல் மேலும் இவ்வழக்கின் மூலதாரியாக செயல்படும்.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் ஹிந்து கோயிலை இடித்து ஜாமா மசூதி கட்டப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான விஷ்ணு சங்கா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம் மசூதியில் அய்வு நடத்த உத்தரவிட்டது.
இந்த வழக்கின் மனுதாரர் விஷ்ணு சங்கா் ஜெயின் மற்றும் அவரது தந்தை ஹரி சங்கா் ஜெயின் ஆகியோா் ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடினார் என்பதை வைத்துப் பார்க்கும்போதே இஸ்லாமிய சொந்தங்களை குறி வைப்பது நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி இரு தரப்பினரின் முன்னிலையில் நீதிமன்ற ஆணையா் கடந்த நவ. 5 மசூதியில் ஆய்வு நடத்தினாா். நீதிமன்ற ஆணையா் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்வாா் என தெரிவிக்கப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் சில நாள்களாக பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், காலை ஜாமா மசூதியில் ஆய்வு செய்ய இரண்டாவது முறையாக ஆய்வுக் குழுவினர் சென்றுள்ளனர். இந்த இடத்தில் தான் அங்கே கலவரம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது வேண்டும் என்று திட்டமிட்டு தொடர்ந்து ஆய்வுகள் என்கின்ற பெயரில் அடுத்தடுத்து மசுதியை நோக்கி அதிகாரிகள் திட்டமிட்டது பெரும் கலவரத்துக்கு காரணமாக தெரிகிறது இந்திய சுதந்திரத்திற்காக லட்சோபலட்ச இஸ்லாமிய உறவுகள் ஆங்கிலேயர் எதிர்த்து இந்தியாவிற்கு போராடி உயிர் நீத்திருக்கிறார்கள் அப்படிப்பட்ட உறவுகள் கலந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வெறும் துயரத்தில் அச்சத்தில் வாழ்ந்து வருவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு தகுதியா என்று கேள்வி பொதுமக்கள் மத்தியிலேயே ஏற்பட்டிருப்பது மத்திய பாஜக அரசு உணருமா?
இப்போது மசூதி ஆய்வு என்று சொல்லி அப்பாவி இஸ்லாமியர்களை குருவி சுடுவது போன்று 3 க்கும் மேற்பட்டோரை பலி கொடுத்திருப்பது நியாயமா? உடனே உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த பிரச்சனையை முடிக்கும் வகையில் 1947 பிறகு அவரவர் சார்ந்திருக்க கூடிய மதங்களின் வழி பாட்டு தளங்களை அந்த இடத்திலே வழிபட 1991 தீர்ப்பின் படி உறுதி செய்திட வேண்டுகோள் வைக்கிறோம் இந்துத்துவாவை வைத்து தரமற்ற அரசியல் செய்யும் பாஜக வை கண்டிக்கிறோம் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
No comments:
Post a Comment