Saturday, 30 November 2024

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் - கோரிக்கை..!!

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனறிவுத்தேர்வை அரையாண்டு தேர்விற்கு பிறகு நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் -  நிறுவனத் தலைவர் சா.அருணன் - கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் ஊரக பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனறிவுத்தேர்வு நடத்தி ஒவ்வொரு மாவட்டத்தில் 100 மாணவர்களை தேர்வு செய்து ஆண்டிற்கு ரூ 1000  என 12ம் வகுப்பு பயிலும் வரை ( நான்கு ஆண்டுகளுக்கு ) வழங்கப்பட்டு வருகிறது வழக்கம்.

இந்த (2024) ஆண்டிற்கான தேர்வு வரும் டிசம்பர் 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது இது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது இதற்கான காரணம் வரும் டிசம்பர் 9ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது இதற்கு இடையில் 14ம் தேதி ஊரக திறனறிவுத்தேர்வு நடைபெறும் என அறிவித்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வது என்ற நிலையில் பல மாணவர்கள் உள்ளனர். ஆதலால் மாணவர்களின் அச்சத்தை போக்க 14ம் தேதி நடைபெற உள்ள ஊரக திறனறிவுத்தேர்வு ஒத்திவைத்து அரையாண்டு விடுமுறைக்கு பிறகு நடத்தி மாணவர்களுக்கு உதவிடவும் மற்றும் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி  ஆண்டிற்கு ரூ.1000 வழங்கப்படும் ஊக்க தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்குவதை போன்று மாதந்தோறும் ரூ. 1000 வழங்கி உதவிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் , பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ.மதுமதி., ஐ.ஏ.எஸ், அவர்களையும் , பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களையும் , தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கையாக கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு!.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...